Fathers Day Protecting Families
10 நிமிடங்கள் படித்தது
வாழ்க்கை யுக்திகள்

தந்தையர் தினம் கொண்டாடுவோம் ஆயுள் காப்பீடு மூலம் குடும்பங்களைக் காப்போம்

ஒரு தந்தை தனது குடும்பத்தை எப்படிப் பாதுகாக்கிறார்?

ஒரு தந்தை தனது குடும்பத்தை எப்படிப் பாதுகாக்கிறார்?

குடும்பத்தில் தந்தை ஒரு மையப் பங்கு வகிக்கிறார். அவர் தனது அன்புக்குரியவர்களைப் பேணிப் பாதுகாத்துக் கவனித்துக்கொள்ள பல்வேறு துன்ப துயரங்களைச் சந்திக்கிறார். அவர் ஒரு பாதுகாப்பான இல்லத்தை வழங்குகிறார், வாழ்வாதாரம் ஈட்டும் பங்கு வகிக்கிறார், சவாலான காலங்களில் ஆதரவுத் தூணாக இருக்கின்றார். தந்தைமார்கள் தங்கள் நடவடிக்கைகள் மூலம் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துகின்றனர்.

இன்றைய காலப் பொறுப்புகள்

இன்றைய காலப் பொறுப்புகள்

ஆம், காலப்போக்கில் தந்தையின் பங்கும் பொறுப்புகளும் மாறிவிட்டன. இப்போது அவர்கள் குடும்பத்தின் அன்றாட நடவடிக்கைகளிலும் பங்கு பெறுகிறார்கள்.

குழந்தைகளுக்கு நிதி ஆதரவு அளிக்கும் அதேவேளை, அவர்களுக்கு நண்பர்களாகவும் முன்மாதிரியாகவும் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு உறவிலும் அன்பைப் பேணி, திடமான உடல்நலத்தை ஊக்குவித்து, தங்கள் குழந்தைகளின் முன்னேற்றத்தில் சதா ஈடுபட்டு வருகிறார்கள். தங்கள் குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் வழங்கும் பொறுப்பை நிறைவேற்றிக் கொண்டே, தொழில் மற்றும் குடும்பத்திற்கு இடையே சமநிலை பேணி, குடும்பத்திற்கு பெரு முக்கியத்துவம் அளிக்கிறார்கள்.

தந்தைமார்களே தங்கள் குழந்தையின் முதல் ஆசான் என்று நம்பப்படுகிறது. தங்கள் குடும்பங்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் அதேவேளை, குழந்தைகளிடையே உணர்ச்சி மற்றும் நிதி ரீதியான நிலைத்தன்மையை விதைக்கிறார்கள். வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும், அவர்கள் குழந்தைக்கு வாழ்வின் சவால்களை எதிர்கொள்வதற்கான தன்னம்பிக்கையை மேமபடுத்த முடியும், வாழ்வில் அறிவார்ந்த முடிவுகளை எடுக்க உதவும் நடத்தைகளைப் பின்பற்றுமாறு கற்றுத்தர முடியும், மேலும் முதிர்ந்த வயது வாழ்வில் இடர்களைச் சந்திக்கும் தயார்நிலையை வழங்க முடியும்.

தந்தைகள் தங்கள் குடும்பங்களை எப்படிப் பாதுகாக்கிறார்கள்

தந்தையர்கள் தங்கள் குடும்பங்களை எவ்வாறு பாதுகாக்கிறார்கள்

உடல் மற்றும் உணர்ச்சி ரீதியான பாதுகாப்பு

தந்தையர்கள் குடும்பத்தின் தேவைகளைக் கவனித்து, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதால், அவர்கள் முன்மாதிரியாகவும் பொருளாதாரப் பாதுகாப்பாகவும் திகழ்கிறார்கள். நேர்மறையான மற்றும் நிலையான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் தந்தையர்கள், குழந்தை மற்றும் குடும்பத்தின் மற்ற அனைத்து உறுப்பினர்களும் கடினமான உணர்ச்சிகளைக் கையாள்வதை எளிதாக்குகிறார்கள்.

நிதிப் பாதுகாப்பு

ஒரு தந்தையின் முதன்மைப் பணி குடும்பத்தின் வருமான ஈட்டுபவராக இருப்பதுதான், இருப்பினும் நவீன காலங்களில் இது மெதுவாக மாறி வருகிறது. அவர்கள் தங்களால் இயன்ற எல்லா வழிகளிலும் தங்கள் குடும்பத்தை நிதி ரீதியாகப் பாதுகாப்பாக வைத்திருக்கப் பாடுபடுகிறார்கள். குடும்பத்தின் நிதி நோக்கங்கள் நிறைவேற்றப்படும் வகையில் ஒரு நிதிப் போக்கை உருவாக்குவதன் மூலம், தங்கள் குடும்பத்திற்குப் போதுமான நிதிப் பாதுகாப்பு இருப்பதை உறுதி செய்வதே அவர்களின் குறிக்கோளாகும்.

இருப்பினும், எதிர்பாராத மற்றும் துரதிர்ஷ்டவசமான ஒரு நிகழ்வு ஏற்பட்டு, ஒரு குடும்பத்தின் எதிர்காலத்திற்கான அனைத்துத் திட்டங்களையும் சீர்குலைக்கக்கூடும். ஒவ்வொருவரும் தங்கள் விருப்பங்கள் நிறைவேற விரும்புவதால், இது குடும்பத்திற்குள் பல நிதிச் சிக்கல்களுக்கு வழிவகுக்கலாம். அதனால்தான், இதுபோன்ற ஒரு சூழ்நிலையைத் தவிர்ப்பதற்கு ஆயுள் காப்பீடு பயனுள்ளதாக இருக்கும்.

இதுபோன்ற துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகளில், தந்தையர்கள் இறந்த பிறகு தங்கள் குடும்பங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான மிக உயர்ந்த நிதிப் பாதுகாப்பை வழங்க ஆயுள் காப்பீடு உதவக்கூடும். உணவு, மின்சாரக் கட்டணம், பள்ளிக் கட்டணங்கள் அல்லது பிற அத்தியாவசியத் தேவைகள் மற்றும் கடன் திருப்பிச் செலுத்துதல், கல்விக் கட்டணம், திருமணச் செலவுகள் அல்லது பிற பிரச்சனைகள் போன்ற அவசரத் தேவைகள் உட்பட, குடும்ப உறுப்பினர்களின் தேவைகளுக்கு ஆதரவளிப்பதே இதன் நோக்கமாகும்.

தந்தைக்கு ஈடாக எதுவும் இல்லை என்றாலும், ஆயுள் காப்பீடு வைத்திருப்பது குடும்பத்திற்கு ஒரு நிதிப் பாதுகாப்பை வழங்கும். இதன் மூலம், குடும்பத்தினர் தங்கள் இலக்குகளைத் திட்டமிட்டபடி தொடர்ந்து அடைய முடியும் என்பது உறுதி செய்யப்படும்.

ஆயுள் காப்பீடு பாதுகாப்புக்கான ஒரு கருவி

ஆயுள் காப்பீடு பாதுகாப்புக்கான ஒரு கருவி

ஆயுள் காப்பீடு மற்றும் அதன் பலன்கள் பற்றிய விளக்கம்

குடும்பத்திற்கான நிதிப் பாதுகாப்பில் ஆயுள் காப்பீடு குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது மற்றும் தந்தை இல்லாத நேரத்தில் அது குடும்பத்தின் நிதி நலன்களைப் பாதுகாக்க உதவுகிறது. பாலிசி காலத்தில் பாலிசிதாரர் இறந்தால், இது காப்பீட்டுத் தொகையை வழங்குகிறது, இதனால் குடும்பம் நிதி ரீதியாக பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்கிறது. இந்தப் பணம் வருமானத்திற்கு ஒரு மாற்று ஏற்பாடு, அதேபோல் தற்போதும் எதிர்காலத்திலும் குடும்பத்தின் பல்வேறு நிதி இலக்குகளை இது கவனித்துக்கொள்ளும்.

ஆயுள் காப்பீடு கட்டுப்படியானது மற்றும் நம்பகத்தன்மை கொண்டது, தாம் இல்லாதபோதும் தமது அன்புக்குரியவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்ற மன அமைதியை இது தந்தைகளுக்கு வழங்குகிறது.

பல்வேறு வகையான ஆயுள் காப்பீட்டுப் பாலிசிகள் உள்ளன

பல்வேறு வகையான ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் கிடைக்கின்றன

கிடைக்கக்கூடிய பல்வேறு வகையான ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் பின்வருமாறு:

  • டேர்ம் பிளான்: அனைத்து ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களிலும் மிகவும் எளிமையானதான ஒரு ப்யூர் டேர்ம் பிளான் , பாலிசிதாரருக்குக் காலக்கட்டத்தில் ஏதேனும் நேர்ந்தால் உறுதியளிக்கப்பட்ட தொகையை வழங்குகிறது. இது கட்டுப்படியான பிரீமியங்களில் கணிசமான ஆயுள் பாதுகாப்பை வழங்குகிறது.
  • யூனிட்-லிங்க்டு இன்சூரன்ஸ் திட்டம் (ULIP): காப்பீடு மற்றும் முதலீட்டை இணைப்பதன் மூலம், ULIP-கள் இரட்டைப் பலன்களை வழங்குகின்றன. பிரீமியத்தின் ஒரு பகுதி ஆயுள் காப்பீட்டிற்காகச் செலவிடப்படுகிறது, மற்ற பகுதி வருமானம் ஈட்டுவதற்காகச் சந்தைகளில் முதலீடு செய்யப்படுகிறது.
  • எண்டோவ்மென்ட் திட்டங்கள்: எண்டோவ்மென்ட் திட்டங்கள் ஆயுள் காப்பீட்டுடன், வழக்கமான சேமிப்பு மற்றும் முதிர்வுப் பலன்களையும் வழங்குகின்றன. பாலிசிதாரர் பாலிசிக் காலத்தின் போது இறந்துவிட்டால், இத்திட்டங்கள் மரணப் பலனை வழங்குகின்றன. பாலிசிதாரர் பாலிசிக் காலம் முடியும் வரை உயிருடன் இருந்தால், அது முதிர்வுப் பலன்களையும் பொருந்தக்கூடிய போனஸ்களையும் வழங்குகிறது.
  • குழந்தை காப்பீட்டுத் திட்டங்கள்: ஒரு குழந்தை காப்பீட்டுத் திட்டம் உங்கள் குழந்தையின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதோடு, உயர்கல்வி மற்றும் திருமணம் போன்ற அவர்களின் அத்தியாவசிய வாழ்க்கை இலக்குகளுக்காக ஒரு நிதி ஆதாரத்தையும் உருவாக்கும்.
தந்தைகளுக்கு ஆயுள் காப்பீடு ஏன் அவசியம்?

தந்தைகளுக்கு ஆயுள் காப்பீடு ஏன் அவசியம்?

ஆயுள் காப்பீடு மூலம் தந்தைகள் தங்கள் குடும்பங்களுக்கு திடமான நிதி வட்டத்தை உருவாக்க முடியும். தந்தைக்கு அகால மரணம் ஏற்பட்டால் ஆயுள் காப்பீட்டுப் பாலிசி வழங்கும் வருமானத்தின் மூலம் அவரது குடும்பம் தன் வழக்கமான தேவைகளைப் பராமரிக்கவும், கடன்களை (ஏதேனும் இருந்தால்) அடைக்கவும், முந்தைய அதே வாழ்க்கைத் தரத்தை பராமரிக்கவும் முடியும். விருப்பத்திற்கேற்ப முழுமையாகவோ பகுதியாகவோ பெறப்பட்ட காப்பீட்டுத் தொகை மூலம் குழந்தைகள் தங்கள் கல்வியை நிறைவு செய்யவும், இழந்த வருமானத்தை ஈடுகட்டவும் இயலும்.

சரியான ஆயுள் காப்பீட்டுப் பாலிசியை தேர்ந்தெடுங்கள்

சரியான ஆயுள் காப்பீட்டுப் பாலிசியை தேர்ந்தெடுங்கள்

ஒரு தந்தை தான் இல்லாத நேரத்தில் தனது குடும்பத்துக்கு நிதிப் பாதுகாப்பு அளிக்க சரியான பாலிசியைத் தேர்ந்தெடுப்பது மிக முக்கியம். கருத்தில் கொள்ளவேண்டிய சில அம்சங்கள்:

  • காப்பீட்டுத் தொகை: போதுமான காப்பீட்டுத் தொகையுடன் கூடிய பாலிசியைத் தேர்ந்தெடுப்பது மிக முக்கியம். காப்பீட்டுத் தொகையைத் தேர்ந்தெடுக்கும் போது, பணவீக்கம் மற்றும் கடன்களை கருத்தில் கொள்ளவும். காப்பீட்டுத் தொகை எவ்வளவு அதிகமாக உள்ளதோ அவ்வளவு சிறந்தது.
  • பாலிசி காலம்: இது மற்றொரு முக்கியமான விஷயம். குடும்பத்தினர், குறிப்பாக குழந்தைகள், நிதிச் சுதந்திரம் அடையும் வரை பாலிசி காப்பீட்டை வழங்க வேண்டும்.
  • பிரீமியம்: ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களுக்கு பொதுவாக ஆண்டுதோறும் புதுப்பித்தல்கள் தேவை. பிரீமியம் தொகையை கணக்கில் கொண்டு உங்களுக்கு நிதி நெருக்கடி இன்றி அவற்றைச் சௌகரியமாகச் செலுத்த முடியும் என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். பிரீமியம் செலுத்தத் தவறினால் பாலிசி காலாவதியாகிவிடும்.
பாதுகாப்பை மையமாகக் கொண்டு தந்தையர் தினத்தைக் கொண்டாடுவோம்

தந்தையர் தினத்தை பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்து கொண்டாடுதல்

இந்தத் தந்தையர் தினத்தில் , தந்தையர்கள் தினசரி ஆற்றும் பாதுகாப்புப் பணிகளைப் பாராட்டுவோம். அவருக்குப் பிடித்தமான இடத்திற்கோ அல்லது இருவரும் சேர்ந்து ரசிக்கக்கூடிய ஒரு செயலுக்கோ அவருடன் ஒரு சாலைப் பயணத்தைத் திட்டமிடுங்கள். பணச் செலவு காரணமாக அவர் வாங்காமல் விட்ட, ஆனால் எப்போதும் விரும்பிய ஒரு பொருளை நீங்கள் அவருக்கு வாங்கிக் கொடுக்கலாம் அல்லது அவருக்குப் பிடித்தமான விளையாட்டைப் பார்க்க அழைத்துச் செல்லலாம். அவருடைய ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தைப் புதுப்பிக்கவும் அல்லது ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்யவும், இதன் மூலம் அவர் ஓய்வுக்குப் பிறகு தனது நிதி இலக்குகளை அடைய முடியும்.

தந்தையர் தின வாழ்த்துக்கள்!

சம்பந்தப்பட்ட கட்டுரைகள்