அம்சங்கள்
தனிப்பட்ட இலக்குகள் முதல் குடும்பத் தேவைகள் வரை அனைத்தையும் நிறைவேற்ற, எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் பிளாட்டினா சுப்ரீம் உங்களுக்கு உதவும்.
எதிர்காலப் பலன்களின் (எதிர்கால உத்தரவாத வருமானம் மற்றும் செலுத்தப்பட்ட மொத்த பிரீமியங்களில் 110%) தள்ளுபடி செய்யப்பட்ட மதிப்பை மொத்தத் தொகையாகப் பெறும் தெரிவு.
பாலிசிதாரர், தான் தேர்ந்தெடுத்த வருமானக் காலத்தின் தொடக்கத்திலோ அல்லது முடிவிலோ உத்தரவாதமான வருமானத்தைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்.
இதில் , செலுத்தப்பட்ட மொத்த பிரீமியங்கள் என்பது, வெளிப்படையாக வசூலிக்கப்பட்டிருந்தால், ஏதேனும் கூடுதல் பிரீமியம் மற்றும் வரிகளைத் தவிர்த்து, அடிப்படைத் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட அனைத்து பிரீமியங்களின் கூட்டுத்தொகையைக் குறிக்கும்.
* எஸ்பிஐ லைஃப் – விபத்து பலன் ரைடர் (UIN: 111B041V01), பிரிவு A: விபத்து மரணப் பலன் (ADB) மற்றும் பிரிவு B: விபத்து பகுதி நிரந்தர ஊனப் பலன் (APPD).