லோன் ப்ரொட்டக்க்ஷன் இன்ஷ்யூரன்ஸ் ப்ளான்/ எஸ்பிஐ லைஃப் ரின் ரக்க்ஷா
SBI Logo

Join Us

Tool Free 1800 22 9090

எஸ்பிஐ லைஃப் - ரிண் ரக்ஷா

UIN: 111N078V03

புராடக்ட் கோடு: 70

எஸ்பிஐ லைஃப் - ரிண் ரக்ஷா

உங்கள் குடும்பம் சந்தோஷத்தை மட்டுமே சொத்தாகப் பெறுகிறது.
உங்களது கடன் பொறுப்புகளை அல்ல.

ஒரு குரூப், யூனிட்-லிங்க்டு, நான்-பார்ட்டிசிபேட்டிங் கிரெடிட் லைஃப் இன்ஷ்யூரன்ஸ் புராடக்ட்.

அறிமுகம் எஸ்பிஐ லைஃப் - ரிண் ரக்ஷா (UIN: 111N078V03), என்பது ஒரு திட்டம், இது உங்கள் குடும்பம் எல்லாவற்றையும் சிறந்ததைப் பெற்றிட உங்களுக்கு உதவுகிறது. இந்தத் தீர்வு கொண்டு, ஏதேனும் துரதிர்ஷ்டவசமான நிகழ்வு நடந்துவிடும் பட்சம் நிலுவையில் உள்ள கடன் தொகையை உங்கள் குடும்பம் செலுத்த பொறுப்பேற்க வேண்டியதில்லை, அதனால் அவர்களுடைய எதிர்காலம் மற்றும் கனவுகள் பாதுகாக்கப்படுகின்றன.

சிறப்பம்சங்கள் :
  • இது ஒரு விரிவான குரூப் கிரெடிட் லைஃப் ப்ளான், இது வீடு, வாகனம், கல்வி, தனிப்பட்ட மற்றும் இதர கடன்களை உள்ளடக்கியது
  • முதன்மை கடன்தாரர் தவிர 2 உப கடன்தாரர்களையும் காப்பீடு செய்து கொள்ளலாம்.
  • தேவைக்கு ஏற்ப கடன் காப்பீட்டு காலவரையை தேர்வு செய்து கொள்ளும் நெகிழ்வுத்தன்மை.**

*இந்தத் திட்டத்தின் கீழ் புதிய மற்றும் தற்போதுள்ள கடன்தாரர்களுக்கு கவரேஜ், குழு ஒப்புதல் பெற்ற காப்புறுதி விண்ணப்ப கணிப்பு கொள்கையின்படி அமையும்.
**கடன் காலவரை 15 ஆண்டுகள் அல்லது அதிகம் எனின், காலவரையின் குறைந்தபட்சம் 2/3 க்கு உட்பட்டது.

சிறப்பம்சங்கள்

எஸ்பிஐ லைஃப் - ரிண் ரக்ஷா

ஒரு குரூப், யூனிட்-லிங்க்டு, நான்-பார்ட்டிசிபேட்டிங் கிரெடிட் லைஃப் இன்ஷ்யூரன்ஸ் புராடக்ட்.

சிறப்பம்சங்கள்

  • ஆயுள் காப்பீட்டு கவரேஜ்
  • பலவித கடன்களை திருப்பிச்செலுத்த உதவி
  • இணை கடனாளிகளுக்கான கவரேஜ்
  • கோல்டு அல்லது பிளாட்டினம் திட்டம் விருப்பத்தேர்வுகளின் தேர்வு
  • காப்பு காலவரை, பிரீமியம் செலுத்தும் காலவரை மற்றும் காலஇடைவெளியின் தேர்வு

நன்மைகள்

பாதுகாப்பு
  • உங்களால் அன்புடன் பெறப்பட்ட சொத்துக்களை தொடர்ந்து அனுபவித்திட உங்கள் குடும்பத்தை ஏதுவாக்குகிறது
நம்பகத்தன்மை
  • காப்பீட்டுத் தொகை அட்டவணைப்படி நிலுவையில் உள்ள உங்கள் கடன் தொகையை திருப்பிச் செலுத்துகிறது
  • பலவகைப்பட்ட கடன்கள் காப்பளிக்கப்படுகின்றன, அதாவது வீட்டுக் கடன்கள், கார் கடன்கள், வேளாண் கடன்கள், கல்விக் கடன்கள், மற்றும் தனிப்பட்ட கடன்கள்
நெகிழ்வுத்தன்மை
  • முதன்மை கடனாளி தவிர இரண்டு இணை கடனாளிகளுக்கும் கூடுதல் கவரேஜ் வழங்குகிறது
  • உங்களுடைய தேவைக்கு ஏற்ப சிங்கிள் அல்லது லெவல் பிரீமியத்தை 5 அல்லது 10 ஆண்டுகளுக்காக தேர்வு செய்யலாம்
  • உங்களுடைய பொருளாதார திறன்களுக்கு ஏற்ப மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது வருடாந்திர பிரீமியங்களை தேர்வு செய்யலாம்
வரிச் சலுகைகளை பெற்று பயனடையுங்கள்*

இந்தத் திட்டத்தின் கீழ் கிடைக்கும் திட்ட சிறப்பம்சங்கள் குழும நிர்வாகி என்ற நிலையில் உங்களுடைய மாஸ்டர் பாலிசிதாரரால் தேர்வு செய்யப்படுகிறது. மாஸ்டர் பாலிசிதாரரால் தேர்வு செய்யப்பட்ட சிறப்பம்சங்கள் மட்டுமே உங்களுக்கு கிடைக்கும். மாஸ்டர் பாலிசிதாரரால் கிடைக்கச் செய்யப்படும் விருப்பத்தேர்வுகள்/ சிறப்பம்சங்களிலிருந்து நீங்கள் தேர்வு செய்யலாம்.

இறப்புப் பலன் :

இறப்பு காப்பு என்பது உங்களுடைய காப்பீட்டுச் சான்றிதழில் காப்பீட்டுத்தொகை அட்டவணைப்படி இறப்பு நேரத்தில் நிலுவையில் உள்ள கடன் இருப்பு ஆகும்.

வரிப் பலன்கள்* :
இந்தியாவில் பொருந்தும் வருமான வரிச் சட்டங்களின்படி, அவ்வப்போது மாறுவதற்கு உட்பட்டு வருமான வரிச் சலுகைகளுக்கு தகுதி உடையவர். விவரங்களுக்கு உங்கள் வரி ஆலோசகருடன் தொடர்பு கொள்ளுங்கள்.

எஸ்பிஐ லைஃப் – ரிண் ரக்ஷா-ன் இடர் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்த கூடுதல் விவரங்களுக்குப் பின்வரும் ஆவணங்களைக் கவனமாகப் படிக்கவும்.

null
^வயது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளவை யாவும் கடந்த பிறந்தநாளின் அடிப்படையிலானவை ஆகும்.

70/ver1/11/24/WEB/TAM

இடர் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றிய அதிக விபரங்களுக்கு விற்பனையை முடிக்கும் முன்பாக தயவு செய்து விற்பனை சிற்றேட்டை கவனமாகப் படிக்கவும்.

*வரிச்சலுகைகள் :
வரிச் சலுகைகள் வருமான வரி சட்டங்ககள் பிரகாரம் கிடைப்பதால் அவை காலந்தோறும் மாற்றங்களுக்கு உட்பட்டவையாக இருக்கும். விபரங்களுக்கு உங்கள் வரி ஆலோசகருடன் தொடர்பு கொள்ளுங்கள்.

நீங்கள் இந்தியாவில் பொருந்தும் வருமான வரிச் சட்டங்களின்படி, அவ்வப்போது மாறுவதற்கு உட்பட்டு வருமான வரிச் சலுகைகளுக்கு தகுதி உடையவர். மேலும் விவரங்களுக்கு, இங்கே கிளிக் செய்யவும். விவரங்களுக்கு உங்கள் வரி ஆலோசகரைத் தொடர்பு கொள்ளவும்.