மைக்ரோ டெர்ம் அஷ்யூரன்ஸ் ப்ளான்/ எஸ்பிஐ லைஃப் - குரூப் மைக்ரோ ஷீல்டு
close

By pursuing your navigation on our website, you allow us to place cookies on your device. These cookies are set in order to secure your browsing, improve your user experience and enable us to compile statistics  For further information, please view our "privacy policy"

SBI Logo

Join Us

Tool Free 1800 22 9090

எஸ்பிஐ லைஃப் - குரூப் மைக்ரோ ஷீல்டு

UIN: 111N138V01

play icon play icon
Group Micro Shield Plan Premium

அனைவருக்கும் பாதுகாப்பு
எளிதாக்கப்பட்டுள்ளது

ஒரு குரூப், நான் லிங்க்டு, நான் பார்ட்டிசிபேட்டிங் ப்யூர் ரிஸ்க் பிரீமியம், ஓர் ஆண்டு புதுப்பிக்கத்தக்க மைக்ரோ லைஃப் இன்ஷ்யூரன்ஸ் திட்டம்.

உங்கள் குழும உறுப்பினர்களுக்கு ஏற்கத்தக்க பிரீமியத்தில் ஆயுள் காப்பீட்டின் பாதுகாப்பை வழங்கிட ஆர்வமாக உள்ளீர்களா?

ஆகவே, எஸ்பிஐ லைஃப் - குரூப் மைக்ரோ ஷீல்டு என்பது ஏற்கத்தக்க விலையில் குறிப்பாக காப்பீட்டு காப்பு தேவைப்படும் நபர்களுக்காக வடிவமைக்கப்பட்ட திட்டமாகும். எஸ்பிஐ லைஃப் - குரூப் மைக்ரோ ஷீல்டு கொண்டு உங்கள் உறுப்பினர்களுக்கு ஏதேனும் துரதிர்ஷ்டவசமான நிகழ்வு நிகழ்ந்துவிடும்பட்சத்தில் அவர்களுடைய குடும்பங்களுக்கு பொருளாதாரப் பாதுகாப்பு அளிப்பதை உறுதிப்படுத்தலாம்.

திட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்கள்:
  • எஸ்பிஐ லைஃப் - குரூப் மைக்ரோ ஷீல்டு என்பது உங்கள் உறுப்பினர்களின் காப்பீட்டுத் தேவைகளுக்கு சரியான பதிலாகும்.
  • இந்தத் திட்டம் முதலாளி - தொழிலாளி குழுக்கள், நுண் நிதியுதவி நிறுவனங்களின் குழும உறுப்பினர்கள், சுய உதவிக் குழுக்கள், வங்கி/நிதி நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள், ஏதேனும் தொடர்பு குழுக்கள் (டிஜிட்டல் தளங்கள் உட்பட) ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான வகையில் வழங்குகிறது.
  • பதிவு செய்துகொள்வதும் நிர்வகிப்பதும் எளிதானதாகும்
  • நெகிழ்வான பிரீமியம் செலுத்தும் காலஇடைவெளி

சிறப்புக்கூறுகள்

எஸ்பிஐ லைஃப் - குரூப் மைக்ரோ ஷீல்டு

Group pure term micro insurance, non-linked, non-participating plan

 

சிறப்பம்சங்கள்

  • உங்கள் குழும உறுப்பினர்களுக்கான டேர்ம் இன்ஷ்யூரன்ஸ்
  • இந்தத் திட்டம் உங்களுக்கு OYRGTA (ஓர் ஆண்டு புதுப்பிக்கத்தக்க குழும டேர்ம் இன்ஷ்யூரன்ஸ்) வழங்குகிறது
  • பிரீமியம் செலுத்தும் காலஇடைவெளி வருடாந்திரம், அரையாண்டு, காலாண்டு, மாதாந்திரம்.
  • இந்தத் திட்டம் வாழ்க்கைத் துணை காப்பீட்டுப் பலனை (விருப்பத்திற்குரியது) வழங்குகிறது, இது உறுப்பினர்களின் வாழ்க்கைத் துணைக்கு இறப்புப் பலன் காப்பீட்டை வழங்குவது கட்டாயமாக அல்லது தன்னார்வத்தினால் இருக்கலாம்.

அனுகூலங்கள்:

  • பாதுகாப்பு : எதிர்பாரா நிகழ்வு ஏற்பட்டுவிடும் நிலையில் உங்கள் குழும உறுப்பினர்களின் குடும்பங்களின் பொருளாதார தேவைகளுக்கு பாதுகாப்பு வழங்குகிறது.
  • நெகிழ்வுத்தன்மை : உங்கள் உறுப்பினர்களுக்கு நீங்கள் வழங்க விரும்பும் காப்பீட்டுத் தொகையை தேர்வு செய்திட விருப்பத்தேர்வு.
  • எளிமை : மருத்துவ பரிசோதனை தேவை இல்லை, திருப்திகரமான சுகாதார அறிவிப்பு அடிப்படையில் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
  • ஏற்புடைமை : பெயரளவு பிரீமியத்தில் திட்ட பலன்.

இறப்புப் பலன் :


இறப்புப் பலன் காப்பீட்டின் காலவரையின்போது துரதிர்ஷ்டவசமாக காப்பீடு செய்துகொண்டவரின் இறப்பு நிகழ்ந்துவிடும் பட்சம், செலுத்த வேண்டிய அனைத்து பிரீமியங்களும் செலுத்தப்பட்டிருப்பின் அடிப்படை காப்பீட்டுத் தொகை மொத்தமாக செலுத்தப்படும். கடன் வழங்குபவர் - கடன் பெறுபவர் திட்டங்கள் என்னும் நிலையில், தகுதிவாய்ந்த நிறுவனங்களின்* கீழ் உறுப்பினரின் இறப்பு நிகழ்ந்துவிடும் நிலையில், தொடக்கத்தில் குழும உறுப்பினரிடமிருந்து முன் அங்கீகாரத்திற்கு உட்பட்டு, நிலுவையில் உள்ள கடன் தொகை மாஸ்டர் பாலிசிதாரருக்கு செலுத்தப்படும், மொத்த இறப்புப் பலனிலிருந்து மீதம் ஏதேனும் இருப்பின் நியமனதாரருக்கு / பயனாளிக்கு செலுத்தப்படும்.
அங்கீகாரம் இல்லாத நிலையில், இறப்புப் பலன் தொகை நியமனதாரருக்கு / பயனாளிக்கு செலுத்தப்படும். கடன் இணைக்கப்பட்ட / கடன் வழங்குபவர் - கடன் பெறுபவர் உறவுக்கான அடிப்படை காப்பீட்டுத் தொகை ஒரு குழும உறுப்பினருக்கு பாலிசியின் தொடக்கத்தில் குறைந்தது நிலுவை கடன் தொகைக்கு சமமாக இருக்கும் மற்றும் பாலிசி காலம் முழுவதும் ஒரே மாதிரியாக இருக்கும்.
*தகுதி வாய்ந்த நிறுவனங்களில் பின்வரும் நிறுவனங்கள் அடங்கும் : (i) இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஒழுங்குபடுத்தப்பட்ட அட்டவணைப்படுத்தப்பட்ட வர்த்தக வங்கிகள் (கூட்டுறவு வங்கிகள் உள்பட), (ii) வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (என்பிஎஃப்சி-கள்) இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து பதிவுச் சான்றிதழ் பெற்றவை, (iii) தேசிய வீட்டுவசதி வாரியம் (என்ஹெச்பி) ஒழுங்குபடுத்தப்பட் வீட்டுவசதி நிதி நிறுவனங்கள், (iv) தேசிய சிறுபான்மை மேம்பாட்டு நிதி நிறுவனம் (என்எம்டிஎஃப்சி) மற்றும் அதன் மாநில சேனலைசிங் முகவைகள், (v) இந்திய ரிசர்வ் வங்கியினால் ஒழுங்குபடுத்தப்படும் சிறு நிதி வங்கிகள், (vi) பரஸ்பர உதவி பெற்றுக் கொள்ளும் கூட்டுறவுச் சங்கங்கள், அத்தகைய சங்கங்கள் தொடர்புடைய பொருந்தும் மாநிலச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டு பதிவு செய்யப்பெற்றவை, (vii) நிறுவனச் சட்டம், 2013-ன் பிரிவு 8 கீழ் பதிவு செய்யப்பெற்ற நுண் நிதியுதவி நிறுவனங்கள் அல்லது அவ்வப்போது அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்ட பிற வகை.

முதிர்வுநிலைப் பலன் :

முதிர்வு நிலையில் இந்தத்திட்டத்தின் கீழ் எந்த பலனும் செலுத்தத்தக்கதல்ல.

ஒப்புவிப்புப் பலன் :

பொருந்தாது

விருப்பத்திற்குரிய காப்பீடு - வாழ்க்கைத் துணை காப்பீட்டுப் பலன்

  • குறைந்தபட்ச குழு அளவு 50 உறுப்பினர்களைக் கொண்ட திட்டங்கள் இந்த விருப்பத்தேர்வை தேர்வு செய்யலாம்.
  • இந்த விருப்பத்தேர்வு உறுப்பினர்களின் வாழ்க்கைத் துணைக்கு இறப்புப் பலன் காப்பீட்டை வழங்குவதற்கு குழும பாலிசிதாரருக்கு ஏதுவாக்குகிறது. இந்தக் காப்பீடு கட்டாயமாக அல்லது தன்னார்வலத்தினால் இருக்கலாம். பாலிசியின் தொடக்கத்தில் குழுவின் குறைந்தபட்சம் 10% பங்கேற்பு நிலையில் இருக்க வேண்டும்.
  • இந்த விருப்பத்தேர்வு மாஸ்டர் பாலிசிதாரர் மட்டத்தில் கிடைக்கிறது.
  • இந்த காப்பீடு முதன்மை உறுப்பினரின் காப்பீட்டுத் தொகைக்கு குறைவாகவோ அல்லது சமமாகவோ இருக்கும்.
  • முதன்மை உறுப்பினரின் இறப்பு நிலையில், வாழ்க்கைத் துணைக்கான காப்பீடு, பிரீமியம் வசூலிக்கப்பட்ட பாலிசி காலவரையின் இறுதி வரை தொடரும்.

புதுப்பிப்பு வசதி :

  • வருடாந்திர பிரீமியம் செலுத்தும் கால இடைவெளிக்கு பொருந்தாது.
  • வருடாந்திர பிரீமியம் செலுத்தும் கால இடைவெளி தவிர பிறவற்றிற்கு :
    முதல் செலுத்தப்படாத கெடு தேதியிலிருந்து 3 மாதங்களுக்குள்ளாக மற்றும் பாலிசி காலவரை முடியும் முன்பாக பெறப்பட்டால் பாலிசி புதுப்பிக்கப்படலாம். காப்பீடு செய்யப்பட்ட உறுப்பினரிடமிருந்து ஆயுள் காப்பீடு தொடர்வதற்கான சான்று மற்றும் செலுத்த வேண்டிய பிரீமியங்கள் வட்டியுடன் செலுத்தப்பட்டதற்கான சான்றுடன் எழுத்துபூர்வ விண்ணப்பம் பெறப்பட்டதன் பேரில் புதுப்பிப்பு பரிசீலிக்கப்படும். புதுப்பிப்பானது நிறுவனத்தின் குழு ஒப்புதல் வழங்கப்பட்ட காப்புறுதி விண்ணப்பக் கணிப்பு அடிப்படையிலான காப்புறுதி விண்ணப்ப கணிப்புக்கு உடபட்டு செயல்படுத்தப்படும். காப்பீடு செய்யப்பட்ட உறுப்பினருக்கு நிறுவனம் தங்களது முடிவை தெரிவித்த பின்னரே புதுப்பிப்பு நடைமுறைக்கு வரும்.
    சலுகைக் காலம் முடிவுற்ற பிறகு (மற்றும் புதுப்பிப்பு காலத்தின்போது) உறுப்பினரின் ஆயுள் காப்பீடு காலாவதியாகிவிடும், மேலும் உறுப்பினரின் இறப்புப் பேரில் இறப்புப் பலன் ஏதும் செலுத்தப்படாது.
    வட்டி அவ்வப்போது நிறுவனத்தினால் அறிவிக்கப்பட்ட விகிதத்தில் விதிக்கப்படும். நிறுவனத்தின் தற்போதைய பாலிசி ஆண்டுக்கு பெயரளவு வட்டி விகிதத்தின் அடிப்படையில் அமைந்தது மற்றும் ஒவ்வொரு நிதி ஆண்டின் 1 ஏப்ரல் அன்று இந்திய ரிசர்வ் வங்கியின் ரெப்போவின் பெஞ்ச்மார்க் பலனைவிட 250 அடிப்படை புள்ளிகள் அதிகமாக இருக்கும் மற்றும் இது அரையாண்டு அடிப்படையில் கூட்டப்படும். 1 ஏப்ரல் 2022 தேதிப்படி ரெப்போ விகிதம் 4.00% ஆகும். புதுப்பிற்புக்கான வட்டி விகிதத்தை நிர்ணயிப்பதற்கான அடிப்படையில் எந்த மாற்றமும் ஆயுள் காப்பீட்டு திட்டங்கள் மற்றும் ரைடர்களுக்கான பயன்பாடு மற்றும் கோப்பு சுற்றறிக்கை எண் IRDAI/ACTL/CIR/PRO/207/10/2022 தேதி 04 அக்டோபர் 2022 இடப்பட்டது.
எஸ்பிஐ லைஃப் - குரூப் மைக்ரோ ஷீல்டு-ன் இடர் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்த கூடுதல் விவரங்களுக்குப் பின்வரும் ஆவணங்களைக் கவனமாகப் படிக்கவும்.
SBI Life Group Micro Shield Premium
*கடந்த பிறந்தநாள் படி வயது
**அனைத்து எஸ்பிஐ லைஃப் குரூப் மைக்ரோ லைஃப் இன்ஷ்யூரன்ஸ் திட்டங்களுக்கான மொத்த காப்பீட்டுத் தொகை குழும உறுப்பினர் ஒருவருக்கு ரூ.2,00,000 க்கு வரம்பிடப்பட்டுள்ளது..
^பொருந்தும் வரிகள் மற்றும்/அல்லது மாநில அரசினால் அவ்வப்போது விதிக்கப்படும் வேறு இதர சட்டபூர்வ வரி/ தீர்வை/ கூடுதல் கட்டணம், பொருந்தும் வரிச் சட்டங்களின் படி செலுத்தத்தக்கதாகும்.
$பாலிசி காலவரை மாஸ்டர் பாலிசி அளவில் உள்ளது.

3B/ver1/02/23/WEB/TAM

*வரிச் சலுகைகள் :
இந்தியாவில் பொருந்தும் வருமான வரிச் சட்டங்களின் படி, அவ்வப்போது மாறுவதற்கு உட்பட்டு வருமான வரிச் சலுகைகளுக்கு தகுதி உடையவராவீர்கள். மேலும் விவரங்களுக்கு உங்கள் வரி ஆலோசகரைத் தொடர்பு கொள்ளவும்.

ஆபத்துக் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றிய அதிக விவரங்களுக்கு விற்பனையை முடிக்கும் முன்பாக தயவுசெய்து விற்பனை சிற்றேட்டை கவனமாகப் படிக்கவும்.