மைக்ரோ டெர்ம் அஷ்யூரன்ஸ் ப்ளான்/ எஸ்பிஐ லைஃப் - குரூப் மைக்ரோ ஷீல்டு - எஸ்பி
close

By pursuing your navigation on our website, you allow us to place cookies on your device. These cookies are set in order to secure your browsing, improve your user experience and enable us to compile statistics  For further information, please view our "privacy policy"

SBI Logo

Join Us

Tool Free 1800 22 9090

எஸ்பிஐ லைஃப் - குரூப் மைக்ரோ ஷீல்டு - எஸ்பி

UIN: 111N137V01

play icon play icon
Group Micro Shield - SP Plan Premium

பாதுகாப்பின் உங்கள் உறுதிமொழி
நிறைவேற்றப்பட்டது

ஒரு குரூப், நான் லிங்க்டு, நான் பார்ட்டிசிபேட்டிங் ப்யூர் ரிஸ்க் பிரீமியம், மைக்ரோ லைஃப் இன்ஷ்யூரன்ஸ் திட்டம்.

உங்கள் குழும உறுப்பினர்களுக்கு ஏற்கத்தக்க பிரீமியத்தில் ஆயுள் காப்பீட்டின் பாதுகாப்பை வழங்கிட ஆர்வமாக உள்ளீர்களா?

ஆகவே, எஸ்பிஐ லைஃப் - குரூப் மைக்ரோ ஷீல்டு - எஸ்பி என்பது ஏற்கத்தக்க விலையில் குறிப்பாக காப்பீட்டு காப்பு தேவைப்படும் நபர்களுக்காக வடிவமைக்கப்பட்ட திட்டமாகும். எஸ்பிஐ லைஃப் - குரூப் மைக்ரோ ஷீல்டு - எஸ்பி கொண்டு உங்கள் உறுப்பினர்களுக்கு ஏதேனும் துரதிர்ஷ்டவசமான நிகழ்வு நிகழ்ந்துவிடும்பட்சம் அவர்களுடைய குடும்பங்களுக்கு பொருளாதாரப் பாதுகாப்பு அளிப்பதை உறுதிப்படுத்தலாம்.

திட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்கள்:
  • எஸ்பிஐ லைஃப் - குரூப் மைக்ரோ ஷீல்டு - எஸ்பி என்பது உங்கள் உறுப்பினர்களின் காப்பீட்டுத் தேவைகளுக்கு சரியான பதிலாகும்.
  • பதிவு செய்துகொள்வதும் நிர்வகிப்பதும் எளிதானதாகும்.
  • லெவல் கவர் மற்றும் ரெடியூசிங் கவர் திட்ட விருப்பத் தேர்வுகள் ஆகிய இரண்டின் கீழும் கூட்டு ஆயுள் காப்பீடு கிடைக்கிறது.
  • இந்தத் திட்டம் முதலாளி - தொழிலாளி குழுக்கள், நுண் நிதியுதவி நிறுவனங்களின் குழும உறுப்பினர்கள், சுய உதவிக் குழுக்கள், வங்கி/நிதி நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள், ஏதேனும் தொடர்பு குழுக்கள் (டிஜிட்டல் தளங்கள் உட்பட) ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான வகையில் வழங்குகிறது.

சிறப்பம்சங்கள்

எஸ்பிஐ லைஃப் - குரூப் மைக்ரோ ஷீல்டு - எஸ்பி

Group pure term micro insurance, non-linked, non-participating plan

 

சிறப்பம்சங்கள்:

  • உங்கள் குழும உறுப்பினர்களுக்கான டேர்ம் இன்ஷ்யூரன்ஸ்
  • இந்தத் திட்டம் 2 திட்ட விருப்பத் தேர்வுகளை வழங்குகிறது - லெவல் கவர், ரெடியூசிங் கவர் (கடன் வழங்குபவர் - கடன் பெறுபவர் உறவுக்கு மட்டும் விருப்பத்தேர்வு கிடைக்கிறது மற்றும் குழும உறுப்பினரால் கடன் பெற்றுக் கொள்ளலாம்).
  • இந்தத் திட்டம் 10 ஆண்டுகள் வரை பாலிசி காலவரையுடன் சிங்கிள் பிரீமியம் செலுத்தும் வகையில் வழங்குகிறது.
  • லெவல் கவர் மற்றும் ரெடூசிங் கவர் ஆகிய இரண்டு விருப்பத்தேர்வுகள் கீழும் கூட்டு ஆயுள் காப்பீடு கிடைக்கிறது.
  • கூட்டு ஆயுள் காப்பீட்டின் கீழ், அவர்கள் வாழ்க்கைத்துணைகள், உடன்பிறப்புகள், அல்லது பெற்றோர், குழந்தை போன்ற நெருங்கிய இரத்த உறவினர்கள், அல்லது வர்த்தக பங்காளர்கள் என இரண்டு தனிநபர்கள் காப்பீடு செய்துகொள்ளலாம். நபர்களை மாற்றிக் கொள்வது அனுமதிக்கப்படாது.

 

அனுகூலங்கள்:

  • பாதுகாப்பு : எதிர்பாரா நிகழ்வு ஏற்பட்டுவிடும் நிலையில் உங்கள் குழும உறுப்பினர்களின் குடும்பங்களின் பொருளாதார தேவைகளுக்கு பாதுகாப்பு வழங்குகிறது.
  • நெகிழ்வுத்தன்மை :உங்கள் உறுப்பினர்களுக்கு நீங்கள் வழங்க விரும்பும் காப்பீட்டுத் தொகையை தேர்வு செய்திட விருப்பத்தேர்வு.
  • எளிமை :மருத்துவ பரிசோதனை தேவை இல்லை, திருப்திகரமான சுகாதார அறிவிப்பு அடிப்படையில் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
  • ஏற்புடைமை :பெயரளவு பிரீமியத்தில் திட்ட பலன்.

இறப்புப் பலன் :


காப்பீடு செய்யப்பட்ட உறுப்பினரின் துரதிர்ஷ்டவசமான இறப்பு அல்லது கூட்டு ஆயுள் பாலிசியின் கீழ் காப்பீடு செய்யப்பட்ட உறுப்பினர்களில் ஒருவரின் முதல் இறப்பு நிலையில், காப்பீட்டின் காலவரையின்போது, இறப்புப் பலன் மொத்தமாக செலுத்தப்படும். கூட்டு ஆயுள் பாலிசியில் இரண்டு உறுப்பினர்கள் ஒரே சமயத்தில் இறந்துவிட்டால் , ஒரு காப்பீட்டுத் தொகை மட்டுமே செலுத்தப்படும்.
கிரெடிட் லிங்க்டு/கடன் வழங்குபவர் - கடன் பெறுபவர் உறவுக்கான அடிப்படைத் தொகையானது, குழும உறுப்பினருக்கான பாலிசியின் தொடக்கத்தில் நிலுவையில் உள்ள கடன் தொகைக்கு குறைந்தபட்சம் சமமாக இருக்கும்.
லெவல் கவர் : இறப்புப் பேரிலான காப்பீட்டுத் தொகை வழங்கப்படும் மற்றும் காப்பீடு நிறுத்தப்பட்டுவிடும்.
ரெடியூசிங் கவர் : இறப்புப் பேரிலான காப்பீட்டுத் தொகை காப்பீட்டுச் சான்றிதழில் கடன் காப்பீட்டு அட்டவணைப் படி காப்பீட்டுத் தொகைக்கு சமமாக இருக்கும், காப்பீட்டின் தொடக்கத்தில் கடன் காப்பீட்டு அட்டவணைப் படி காப்பீடு செய்துகொண்ட உறுப்பினரின் இறப்பு தேதி அன்று படி உண்மையான கடன் நிலுவை தொகையை பொருட்படுத்தாமல் செலுத்தப்படும் மற்றும் காப்பீடு நிறுத்தப்பட்டுவிடும்.
கூட்டு ஆயுள் என்னும் நிலையில், இறப்புப் பலன் வழங்கப்பட்ட பிறகு (முதல் இறப்பு பேரில்) உயிருடன் இருக்கும் உறுப்பினருக்கு காப்பீடு நிறுத்தப்பட்டுவிடும். கடன் வழங்குபவர் - கடன் பெறுபவர் திட்டங்கள் என்னும் நிலையில், தகுதிவாய்ந்த நிறுவனங்களின்* கீழ் உறுப்பினரின்/ பணியாளரின் இறப்பு நிகழ்ந்துவிடும் நிலையில், தொடக்கத்தில் குழும உறுப்பினரிடமிருந்து முன் அங்கீகாரத்திற்கு உட்பட்டு, நிலுவையில் உள்ள கடன் தொகை மாஸ்டர் பாலிசிதாரருக்கு செலுத்தப்படும், மொத்த இறப்புப் பலனிலிருந்து மீதம் ஏதேனும் இருப்பின் நியமனதாரருக்கு / பயனாளிக்கு செலுத்தப்படும்.
அங்கீகாரம் இல்லாத நிலையில், இறப்புப் பலன் தொகை நியமனதாரருக்கு / பயனாளிக்கு செலுத்தப்படும். ஆயுள் காப்பீடு செய்துகொண்டவர் வயதுக்கு வராதவராக இருந்தால், அவர் வயதுக்கு வந்த நிலையை அடைந்ததும் பாலிசி தானாகவே ஆயுள் காப்பீடு செய்துகொண்டவரின் வாழ்க்கை மீது அமைந்துவிடும்.
*தகுதி வாய்ந்த நிறுவனங்களில் பின்வரும் நிறுவனங்கள் அடங்கும் : (i) இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஒழுங்குபடுத்தப்பட்ட அட்டவணைப்படுத்தப்பட்ட வர்த்தக வங்கிகள் (கூட்டுறவு வங்கிகள் உள்பட), (ii) வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (என்பிஎஃப்சி-கள்) இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து பதிவுச் சான்றிதழ் பெற்றவை, (iii) தேசிய வீட்டுவசதி வாரியம் (என்ஹெச்பி) ஒழுங்குபடுத்தப்பட் வீட்டுவசதி நிதி நிறுவனங்கள், (iv) தேசிய சிறுபான்மை மேம்பாட்டு நிதி நிறுவனம் (என்எம்டிஎஃப்சி) மற்றும் அதன் மாநில சேனலைசிங் முகவைகள், (v) இந்திய ரிசர்வ் வங்கியினால் ஒழுங்குபடுத்தப்படும் சிறு நிதி வங்கிகள், (vi) பரஸ்பர உதவி பெற்றுக் கொள்ளும் கூட்டுறவுச் சங்கங்கள், அத்தகைய சங்கங்கள் தொடர்புடைய பொருந்தும் மாநிலச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டு பதிவு செய்யப்பெற்றவை, (vii) நிறுவனச் சட்டம், 2013-ன் பிரிவு 8 கீழ் பதிவு செய்யப்பெற்ற நுண் நிதியுதவி நிறுவனங்கள் அல்லது அவ்வப்போது அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்ட பிற வகை.

ஃப்ரீ-லுக் காலம் :


1) மாஸ்டர் பாலிசிதாரர் பிரீமியம் செலுத்தும் பட்சம் :
பாலிசி ஆவணம் பெறப்பட்ட நாளிலிருந்து 15 நாட்கள் இலவச பரிசீலனைக்காலம் பாலிசிகளுக்கு வழங்கப்படும், மின்னணு பாலிசிகள் தவிர, அல்லது தொலைதூர சந்தைப்படுத்தல் மூலம் பெறப்பட்ட பாலிசிகளுக்கு பாலிசி ஆவணம் பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்கள் இலவச பரிசீலனைக்காலம் வழங்கப்படுகிறது, இது மின்னணு பாலிசிகள் மற்றும் தொலை தூர வகையில் பெறப்பட்ட பாலிசி ஆவணத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மறுஆய்வு செய்ய வழங்கப்படுகிறது. மாஸ்டர் பாலிசிதாரர் அந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை ஏற்கவில்லை என்றால், மாஸ்டர் பாலிசிதாரர் தன்னுடைய மறுப்புக்கான காரணத்தை குறிப்பிட்டு பாலிசியை ரத்து செய்வதற்காக காப்பீடு வழங்கியவருக்கு திருப்பி அனுப்பலாம். பின்னர் நிறுவனம் செலுத்திய பிரீமியத்தை காப்பீட்டு காலத்திற்கான விகிதாச்சார ஆபத்து பிரீமியத்தை கழித்துக்கொண்டு, முன்மொழிபவரின் மருத்துவப் பரிசோதனைகளுக்கான செலவிற்கான தொகை மற்றும் முத்திரை வரிக் கட்டணங்கள் ஆகியவை கழித்துக்கொண்டு திருப்பி அளிக்கப்படும்.
2) காப்பீடு செய்யப்பட்ட உறுப்பினர் பிரீமியம் செலுத்தும் பட்சம் :
காப்பீட்டுச் சான்றிதழ் பெறப்பட்ட நாளிலிருந்து 15 நாட்கள் இலவச பரிசீலனைக்காலம் பாலிசிகளுக்கு வழங்கப்படும், மின்னணு பாலிசிகள் தவிர, அல்லது தொலைதூர சந்தைப்படுத்தல் மூலம் பெறப்பட்ட காப்பீட்டுச் சான்றிதழுக்கு காப்பீட்டுச் சான்றிதழ் பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்கள் இலவச பரிசீலனைக்காலம் வழங்கப்படுகிறது, காப்பீடு செய்யப்பட்ட உறுப்பினர் அந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை ஏற்கவில்லை என்றால், காப்பீடு செய்யப்பட்ட உறுப்பினர் தன்னுடைய மறுப்புக்கான காரணத்தை குறிப்பிட்டு காப்பீட்டுச் சான்றிதழை ரத்து செய்வதற்காக காப்பீடு வழங்கியவருக்கு திருப்பி அனுப்பலாம். பின்னர் நிறுவனம் செலுத்திய பிரீமியத்தை காப்பீட்டு காலத்திற்கான விகிதாச்சார ஆபத்து பிரீமியத்தை கழித்துக்கொண்டு, முன்மொழிபவரின் மருத்துவப் பரிசோதனைகளுக்கான செலவிற்கான தொகை மற்றும் முத்திரை வரிக் கட்டணங்கள் ஆகியவை கழித்துக்கொண்டு திருப்பி அளிக்கப்படும். கூட்டு ஆயுள் காப்பீடு என்னும் பட்சம், இரண்டு உறுப்பினர்களுக்கான ஆயுள் காப்பீடும் ஒரே நேரத்தில் நிறுத்தப்பட்டுவிடும் மற்றும் இலவச பரிசீலனைக்காலம் ரத்து ஒரே நேரத்தில் செய்யப்படும்.

முதிர்வுநிலைப் பலன் :


முதிர்வு நிலையில் இந்தத்திட்டத்தின் கீழ் எந்த பலனும் செலுத்தத்தக்கதல்ல.

ஒப்புவிப்புப் பலன் :


உறுப்பினர் பாலிசி ஒப்புவிப்பு மதிப்பை பெறும் மற்றும் பாலிசி காலவரையின்போது எந்த நேரத்திலும் பாலிசி ஒப்புவிப்பு செய்யப்படலாம். ஒப்புவிப்பு மதிப்பு காலாவதியாகாத ஆபத்து பிரீமியத்திற்கு சமமாக இருக்கும் மற்றும் பின்வருமாறு :
  • லெவல் கவர் : (70% x செலுத்தப்பட்ட சிங்கிள் பிரீமியம்) x [காலாவதியாகாத காலவரை (மாதங்களில்) / மொத்த காலவரை (மாதங்களில்)]
  • ரெடூசிங் கவர் : (70% x செலுத்தப்பட்ட சிங்கிள் பிரீமியம்) x [காலாவதியாகாத காலவரை (மாதங்களில்) / மொத்த காலவரை (மாதங்களில்)] x (அட்டவணைப்படி காப்பீட்டுத்தொகை / தொடக்க காப்பீட்டுத் தொகை)
காலாவதியாகாத காலவரை = மொத்த பாலிசி காலவரை மாதங்களில் ஒப்புவிப்பு தேதி அன்று பாலிசி மாதங்கள் கழித்துக்கொண்டு.
ஒப்புவிப்பு பேரில் அனைத்து பலன்கள் மற்றும் உறுப்பினர்(கள்) காப்பீடு நிறுத்தப்பட்டுவிடும். ஒப்புவிப்பு மதிப்பு மொத்த தொகை பலனாக செலுத்தப்படும்.
மாஸ்டர் பாலிசிதாரர் பாலிசியை ஒப்புவிப்பு செய்யும் நிலையில், உறுப்பினரின் அந்தந்த பாலிசி காலவரையின் இறுதி வரை தங்களுடைய காப்பீட்டைத் தொடர உறுப்பினருக்கு விருப்பத்தேர்வு உள்ளது. காப்பீட்டை தொடர விரும்பாத உறுப்பினர்கள், ஒப்புவிப்பு மதிப்பு அவர்களுக்கு செலுத்தப்படும் மற்றும் காப்பீடு முடிவுக்கு வந்துவிடும்.

கூட்டு ஆயுள் காப்பீடு :

  • கூட்டு ஆயுள் காப்பீடு கடன் வழங்குபவர் - கடன் பெறுபவர் குழுமங்கள் கீழ் மட்டும் கிடைக்கிறது
  • இது லெவல் கவர் மற்றும் ரெடூசிங் கவர் விருப்பத் தேர்வுகள் இரண்டிற்கும் கிடைக்கிறது
  • இரண்டு தனிநபர்கள் காப்பீடு செய்து கொள்ளலாம், அவர்கள் வாழ்க்கைத்துணைகள், உடன்பிறப்புகள், அல்லது பெற்றோர், குழந்தை போன்ற நெருங்கிய இரத்த உறவினர்கள், அல்லது வர்த்தக பங்காளர்கள் என இருந்தால். நபர்களை மாற்றிக்கொள்வது அனுமதிக்கப்படாது.
  • கடன்தாரர்களில் ஒவ்வொருவரும் மொத்த நிலுவை கடன் தொகைக்கு காப்பீடு செய்யப்படுவர் - அதே காப்பீட்டுத் தொகை மற்றும் அதே பாலிசி காலத்திற்காக. கடன்தாரர்களில் எவரேனும் ஒருவர் இறந்துவிட்டால், இறப்புப் பலன் அளிக்கப்படும் மற்றும் எஞ்சியிருக்கும் கடன்தாரர்களுக்கான காப்பீடு நிறுத்தப்பட்டுவிடும்.

சலுகைக் காலம்:


பொருந்தாது
காப்பீடு செய்யப்பட்ட உறுப்பினர் செலுத்த வேண்டிய பிரீமியத்தை மாஸ்டர் பாலிசிதாரருக்கு செலுத்திய ஒரு நிகழ்வில் காப்பீடு செய்யப்பட்ட உறுப்பினரால் பிரீமியம் செலுத்தியதற்கான ஒப்புகை அல்லது ரசீது பெறப்படுகிறது, ஆனால் பிரீமியம் தொகை மாஸ்டர் பாலிசிதாரரால் காப்பீடு வழங்குபவருக்கு சலுகை காலத்திற்குள்ளாக செலுத்தப்படவில்லை. பின்னர் கோருரிமை செய்யப்படுமானால், வேறுவகையில் ஏற்றுக்கொள்ளத்தக்கதாய் மதிக்கப்பட்டு செலுத்தப்படும்
இருப்பினும், இது மாஸ்டர் பாலிசிதாரரால் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் சமர்ப்பிதற்கு உட்பட்டது, இது காப்பீடு செய்யப்பட்ட உறுப்பினர் செலுத்த வேண்டிய பிரீமியத்தை மாஸ்டர் பாலிசிதாரருக்கு செலுத்தப்பட்டுவிட்டது என்பதை நிரூபிக்கிறது.

தற்கொலை கோருரிமை விதிகள் :


காப்பீடு செய்யப்பட்ட உறுப்பினரின் இறப்பு தற்கொலை காரணமாக ஏற்பட்டால், உறுப்பினரின் ஆபத்து தொடங்கிய தேதியிலிருந்து 12 மாதங்களுக்குள்ளாக, பாலிசி அமலில் இருக்கும்பட்சம், பாலிசிதாரரின் நியமனதாரர் அல்லது பயனாளிக்கு இறப்பு தேதி வரை செலுத்தப்பட்ட பிரீமியத்தில் 80% க்கு அல்லது ஒப்புவிப்பு மதிப்பு, இறப்பு தேதி வரை ஏதேனும் இருப்பின் இவற்றுள் அதிகமானதற்கு உரிமை உள்ளது. பொருந்தக் கூடிய பலன் செலுத்தப்பட்ட பிறகு, உறுப்பினர் பாலிசி நிறுத்தப்பட்டுவிடும். செலுத்தப்பட்ட மொத்த பிரீமியம் என்பது ஏதேனும் கூடுதல் பிரீமியம் மற்றும் வரிகள் நீங்கலாக அந்த உறுப்பினருக்கு செலுத்தப்பட்ட அனைத்து பிரீமியங்களின் மொத்தம் ஆகும்.

புதுப்பிப்பு வசதி :


பொருந்தாது

எஸ்பிஐ லைஃப் - குரூப் மைக்ரோ ஷீல்டு - எஸ்பி-ன் இடர் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்த கூடுதல் விவரங்களுக்குப் பின்வரும் ஆவணங்களைக் கவனமாகப் படிக்கவும்.

SBI Life- Group Micro Shield - SP Plan Premium
*கடந்த பிறந்தநாள் படி வயது
**அனைத்து எஸ்பிஐ லைஃப் குரூப் மைக்ரோ லைஃப் இன்ஷ்யூரன்ஸ் திட்டங்களுக்கான மொத்த காப்பீட்டுத் தொகை குழும உறுப்பினர் ஒருவருக்கு ரூ.2,00,000 க்கு வரம்பிடப்பட்டுள்ளது..
^பொருந்தும் வரிகள் மற்றும்/அல்லது மாநில அரசினால் அவ்வப்போது விதிக்கப்படும் வேறு இதர சட்டபூர்வ வரி/ தீர்வை/ கூடுதல் கட்டணம், பொருந்தும் வரிச் சட்டங்களின் படி செலுத்தத்தக்கதாகும்.
$குறிப்பிடப்பட்டுள்ள பாலிசி காலவரை உறுப்பினர் நிலையில் பொருந்தும். உறுப்பினர் நிலையில் சிங்கிள் பிரீமியம் பாலிசி கீழ் வழங்கப்படும் பாலிசி காலவரை 1 முதல் 120 மாதங்கள் (இரண்டும் உள்ளடங்கியது) மற்றும் 1 மாதத்தின் மடங்குகளில் ஆகும் (அதாவது 1 மாதம், 2 மாதங்கள்....119 மாதங்கள் மற்றும் 120 மாதங்கள் (இரண்டும் உள்ளடங்கியது). மாஸ்டர் பாலிசி அனைத்து உறுப்பினர்களின் காலவரை வாலாவதியாகும் வரை தொடரும். கிரெடிட் லிங்க்டு/கடன் வழங்குபவர் - கடன் பெறுபவர் உறவுக்கான, பாலிசி காலவரை குறைந்தது குழும உறுப்பினருக்கான பாலிசி தொடக்கத்தில் நிலுவை கடன் காலவரைக்கு சமமானது.

 

3A/ver1/02/23/WEB/TAM

*வரிச் சலுகைகள் :
இந்தியாவில் பொருந்தும் வருமான வரிச் சட்டங்களின் படி, அவ்வப்போது மாறுவதற்கு உட்பட்டு வருமான வரிச் சலுகைகளுக்கு தகுதி உடையவராவீர்கள். மேலும் விவரங்களுக்கு உங்கள் வரி ஆலோசகரைத் தொடர்பு கொள்ளவும்.

ஆபத்துக் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றிய அதிக விவரங்களுக்கு விற்பனையை முடிக்கும் முன்பாக தயவுசெய்து விற்பனை சிற்றேட்டை கவனமாகப் படிக்கவும்.