எஸ்பிஐ லைஃப் – கல்யாண் யுஎல்ஐபி பிளஸ் என்பது முதலாளி-பணியாளர் குழுக்களுக்கான ஃபண்ட் அடிப்படையிலான திட்டமாகும்.
எஸ்பிஐ லைஃப் - பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பிமா யோஜனா மூலம் உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தைப் பாதுகாத்திடுங்கள். பெயரளவுக்கான தொகை செலுத்தி ரூபாய் 2 லட்சத்திற்கு ஆயுள் காப்பீட்டைப் பெற்றிடுங்கள்.
நிறுவனங்கள்/ அறங்காவலர்கள்/ மாநில அரசுகள்/ மத்திய அரசு/ PSU ஆகியவற்றின் பணியாளர்களின் ஒய்வுப் பலன்களான பணிக்கொடை, விடுப்பிற்கான பணம் பெறுதல் மற்றும் வயது முதிர்வு காரணமாக ஓய்வெடுத்தல் போன்ற பணி ஒய்வுத் திட்டங்களுக்கு நிதியளிக்கும் தேவைகளை எஸ்பிஐ லைஃப் – கேப்அஷுர் கோல்ட் திட்டமானது பூர்த்தி செய்கிறது.
எஸ்பிஐ லைஃப் - சம்பூர்ண சுரக்ஷா திட்டம் ஒரு வருடாந்திரம் புதுப்பிக்கத்தக்க குழும காலவரை காப்பீட்டுத் திட்டம். வெவ்வேறு முறையான மற்றும் முறைசாராத குழுமங்களுக்காக கிடைக்கிறது. இது உங்களுடைய தேவைகளுக்கு ஏற்ப வடிவமைத்துக்கொள்ளத்தக்க ஒரு விரிவான காப்பீட்டு பலன் தொகுப்பை வழங்குகிறது.
எஸ்பிஐ லைஃப் - சுவர்ண ஜீவன் ப்ளஸ், பிரத்தியேகமாக தங்களுடைய ஆண்டளிப்பு பொறுப்பை நிறைவேற்றுவதற்காக ஆண்டளிப்பை வாங்க விரும்பும் கார்ப்பொரேட் வாடிக்கையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டது.