Safety Guidelines for School
5 நிமிடங்கள் படித்தது
வாழ்க்கை யுக்திகள்

பள்ளிகள், கல்லூரிகள் & அலுவலகங்களை மீண்டும் திறப்பதற்கான வழிகாட்டல்கள்

பள்ளிகள், கல்லூரிகள் & அலுவலகங்களை மீண்டும் திறப்பதற்கான வழிகாட்டல்கள்

பள்ளிகள், கல்லூரிகள் & அலுவலகங்களை மீண்டும் திறப்பதற்கான வழிகாட்டல்கள்

கோவிட்-19 மக்களின் சுகாதாரத்தை மட்டுமல்ல, பணி, பள்ளி அல்லது கல்லூரிக்குச் செல்லும் ஆற்றலையும் வெகுவாகப் பாதித்துள்ளது. உண்மையில், கொரோனா வைரஸ் தொடர்பான கட்டுப்பாடுகளால் சுமார் 32 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் ஆன்லைன் வகுப்புகளில் படிக்கின்றனர், ஆனால் மற்றவர்களுக்கு கல்வி பெறுவதே பயங்கரச் சிரமமாகிவிட்டது. அதேபோல், அலுவலகத்தில் பணிபுரியும் கோடிக்கணக்கான பேருக்கு வீட்டிலிருந்தே வேலைசெய்யும் நிர்ப்பந்தம்.

ஆனால் நற்செய்தி என்னவென்றால், கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்படுகின்றன. மே 18 முதல் அலுவலகங்கள் 50% ஆட்களைக் கொண்டு இயங்கலாம். ஆகஸ்ட் 15-க்குப் பிறகு பள்ளிகள் திறக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது, என்றாலும் இது படிப்படியாகவே நிகழும் மற்றும் கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியேயுள்ள பள்ளிகளுக்கே பொருந்தும்.

ஆனால் அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மீண்டும் திறக்கும் போது, அங்கு வருபவர்கள் தங்கள் பாதுகாப்பிற்காக சில வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும். இதோ அந்த வழிகாட்டல்கள்:

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் தீர்மானிக்கப்படவிருக்கும் சில பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் பின்வருமாறு:

  • ஒவ்வொரு மாணவர், ஆசிரியர் மற்றும் பணியாளரும் எல்லா நேரங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட வேண்டும். ஆசிரியர்கள் கையுறைகளையும் அணிந்திருக்க வேண்டும்.
  • பள்ளி அல்லது கல்லூரி வளாகத்திற்குள் நுழையும் ஒவ்வொரு நபரின் உடல் வெப்பநிலையையும் பரிசோதிக்கவும். யாருக்கேனும் காய்ச்சல் இருந்தால், அவர்களை உள்ளே அனுமதிக்கக் கூடாது.
  • மாணவர்கள் எல்லா நேரங்களிலும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். இதற்காக, மூன்று மாணவர்கள் அமரும் மேசையில் அதிகபட்சமாக இரண்டு மாணவர்கள் மட்டுமே அமர வைக்கப்பட வேண்டும். ஒருவேளை இரண்டு மாணவர்கள் அமரும் மேசையாக இருந்தால், அதில் ஒரே ஒரு மாணவர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். பள்ளிப் பேருந்துகளிலும் சமூக இடைவெளி கட்டாயமாகப் பின்பற்றப்பட வேண்டும்.
  • ஒவ்வொரு சுற்றுக்குப் பிறகும் பள்ளிப் பேருந்துகளும் கிருமி நீக்கம் செய்யப்பட வேண்டும்.
  • பள்ளியில் எல்லா நேரங்களிலும் ஒரு மருத்துவரும் செவிலியரும் இருக்க வேண்டும். ஒருவேளை, யாருக்கேனும் கொரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டால், அவர்கள் நிலைமையை முறையாகக் கையாண்டு, நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த அவர்களைத் தனிமைப்படுத்தும் அறையில் வைக்க வேண்டும்.

இந்த நடவடிக்கைகளைத் தவிர, கொரோனா வைரஸ் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்கும், இந்தச் சூழ்நிலையால் அவர்களுக்கு ஏற்படக்கூடிய எந்தவொரு கவலையையும் போக்குவதற்கும் அமர்வுகள் நடத்தப்பட வேண்டும்.

அலுவலகங்களுக்கு

அலுவலகங்களுக்கு

அலுவலகங்களைப் பொறுத்தவரை, பின்வரும் பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றலாம்:

  • அனைத்து நுழைவு வாயில்களிலும் வெப்பநிலைப் பரிசோதனை செய்ய வேண்டும். இயல்பு வெப்பநிலை உள்ளவர்களை மட்டுமே உள்ளே அனுமதிக்க வேண்டும்.
  • அலுவலகம் முழுவதும் கை சுத்திகரிப்பான்களை வைக்க வேண்டும். மேலும், குறைந்தது 20 வினாடிகள் கைகளைக் கழுவும்படி சொல்லுங்கள்.
  • எல்லா நேரங்களிலும் குறைந்தது 1 மீட்டர் உடல் இடைவெளி அவசியம்.
  • உங்கள் ஊழியர்களை இயன்றவரை வீட்டிலிருந்தே வேலைசெய்யுமாறு கூறுங்கள்.
  • சுவாச ஒழுங்குகளைப் பின்பற்ற வேண்டும். அனைத்து ஊழியர்களும் இருமல் அல்லது தும்மல் ஏற்பட்டால் தங்கள் வாயை ஒரு டிஷ்யூ மூலம் அல்லது கைகளை வளைத்து மூடிக்கொள்ள வேண்டும். பிறகு, அந்த டிஸ்யூவை முறையாகக் குப்பையில் போட வேண்டும்.
  • பணியிடங்கள் மற்றும் பொது வசதி இடங்களை தொடர்ந்து சுத்திகரிக்க வேண்டும். கதவுக் கைப்பிடிகள் போன்ற அடிக்கடி மனிதர்கள் தொடும் இடங்களுக்கு தனி முக்கியத்துவம் அளித்து துப்புரவு பேண வேண்டும்.

அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மெதுவாக மீண்டும் திறக்கத் தொடங்கியிருக்கலாம். எனினும், அச்சுறுத்தல் இன்னும் ஓயவில்லை என்பதை நினைவில் கொள்வது முக்கியம். அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் மீண்டும் திறக்கும் போது முறையான பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றுவதே பாதுகாப்புக்கான ஒரே வழி

சம்பந்தப்பட்ட கட்டுரைகள்