Mental Health Care during Pandemic
5 நிமிடங்கள் படித்தது
வாழ்க்கை யுக்திகள்

கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் மன நலமும் மனோதிடமும்

கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் மன நலமும் மனோதிடமும்

கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் மன நலமும் மனோதிடமும்

கோவிட்-19 என்பது சோர்வு, இருமல், மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகளைக் கொண்ட ஒரு நோய். ஆனால் கோவிட்-19 மக்களின் மன நலத்தையும் கடுமையான பாதித்துள்ளது. உண்மையில், அமெரிக்காவில் சுமார் 63% மக்கள் கொரோனா வைரஸ் காரணமாக பதற்றம் அல்லது மனச்சோர்வு அடைந்துள்ளதாகத் தெரிவித்தனர் என்று மெக்கின்சி தேசிய நுகர்வோர் கணக்கெடுப்பு கூறுகிறது.கோவிட் பெருந்தொற்று காலத்தில் வேலை இழந்தவர்களிடையே மனநலப் பிரச்சினைகள் இன்னும் அதிகமாகக் காணப்படுகின்றன.

ஒரு பெருந்தொற்று நோயின் தாக்கம்

ஒரு பெருந்தொற்று நோயின் தாக்கம்

மாஸ்லோவின் மனித உந்துதல் கோட்பாட்டின் படி, ஒரு மனிதனுக்கு வெவ்வேறு தேவைகள் உள்ளன, அவற்றை முக்கியத்துவத்திற்கு ஏற்ப வகைப்படுத்தலாம். மிக முக்கியமான மற்றும் அடிப்படைத் தேவை, உணவு மற்றும் உறைவிடம். வாழ்க்கையில் நிச்சயத்தன்மை, ஒழுங்கமைப்பு உணர்வு, நிம்மதி ஆகியவற்றின் மூலம் இது கிடைக்கிறது. மூன்றாவதாக, மனிதர்களுக்கு அன்பு மற்றும் சொந்த பந்தம் குறித்து ஆழ்ந்த வேட்கை உள்ளது. இது மற்ற மனிதர்களுடனான உணர்ச்சி மற்றும் உடல் ரீதியான தொடர்பு மூலம் கிடைக்கிறது.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று இந்த படிநிலையின் ஒவ்வொரு அடுக்கையும் உலுக்கிவிட்டது. வேலை இழப்புகள் அல்லது பொருளாதார எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மை, நமது ஒழுங்கமைப்பு, உணவு மற்றும் உறைவிடத்துக்கான வேட்கையை அச்சுறுத்துகிறது. மேலும், தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற தொடர்ச்சியான பயமும் உள்ளது, இதனால் நமது பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. அது மட்டுமல்ல, ஊரடங்கு மற்றும் சமூக இடைவெளி காரணமாக பிறருடன் உடல் மற்றும் உணர்ச்சி ரீதியான தொடர்புகளை ஏற்படுத்துவது சிரமமாகியுள்ளது. இவை அனைத்தும் நமது மன நலத்தின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் வயோதிகர்களும் குழந்தைகள் அல்லது பதின்பருவத்தினர் உள்ள குடும்பங்களும் தான். இது பலருக்குப் பீதியூட்டுவதாக இருக்கலாம். மேலும், அதிக ஆபத்துக்கு ஆளாகக்கூடியவர்கள் அதிகக் கண்டிப்புடன் சமூக இடைவெளியை பேண வேண்டியுள்ளது. இது அவர்களை தனிமை மற்றும் பதற்றத்திற்கு ஆளாக்குகிறது.

குழந்தைகளைப் பொறுத்தவரை, பள்ளிகள் மற்றும் பூங்காக்கள் மூடப்படுவது அவர்களின் அன்றாட வாழ்க்கைச் சுழற்சியில் தடங்கல் ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸால் ஏற்படும் தடங்கல் குழந்தைகளின் மன நலத்தை மட்டுமல்ல, பெற்றோரின் மன நலத்தையும் பாதிக்கிறது.

மன நலம் காப்போம்

மன நலம் காப்போம்

ஊரடங்கு காலத்தில் ஆரோக்கியமாக இருப்பதன் ஒரு முக்கியப் பகுதி, நட்புக்கான நமது தேவையைப் பூர்த்தி செய்வது. பெருந்தொற்று காலத்தில் மன நலம் பேண இதோ சில நடவடிக்கைகள்:

1. உங்கள் அன்புக்குரியவர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்

நீங்கள் வேலை நிமித்தமாக ஆன்லைனில் அதிக நேரம் செலவிடலாம். அதன் பிறகு, தொடர்ந்து திரையையே பார்ப்பது வெறுப்பாக இருக்கலாம்! என்றாலும், உங்கள் மன நலம் பேண நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்புகொள்வது மிகவும் முக்கியம். தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் உங்களுக்கு தொடர்புகொள்ள உதவும் அதே வேளை, வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் உணர்ச்சி ரீதியான இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

2. தியானத்திற்கு நேரம் ஒதுக்குங்கள்

துயர் செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன, நோயுற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது, மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தைத் தக்கவைக்க அல்லல்படுகின்றனர், உலகின் சில பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களும் நடைபெறுகின்றன. இவை அனைத்தும் நாம் உணர்வதை விட அதிகமாக மன நலத்தை பாதிக்கலாம். உங்கள் அன்றாட வழக்கத்தில் 30 நிமிடங்களை ஒதுக்கி உடலுக்கும் மனதுக்கும் ஓய்வளிப்பது பெரும் பலனைத் தர முடியும். தியானம் செய்வது மன அழுத்தம், பதற்றம் மற்றும் மனச்சோர்வைப் போக்கி நமது ஒட்டுமொத்த மன நலத்தை மேம்படுத்துவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

3. ஒரு புதிய அன்றாட வழக்கத்தை கடைப்பிடியுங்கள்

உங்கள் பெரும்பாலான நேரம் வீட்டிலேயே கழிந்தாலும், ஓர் அன்றாட வழக்கத்தைப் பின்பற்றுவது முக்கியம். புதிய இயல்புநிலைக்கு ஏற்ப புதியதொரு அன்றாட வழக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஆம், தொடர்ந்து உரிய நேரத்தில் எழுந்திருப்பது, குளிப்பது, அழகுபடுத்திக் கொள்வது, உடற்பயிற்சி செய்வது, இவை யாவும் மன நலத்தின் மீது சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

4. நிதித் திட்டம் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்

உங்களுக்கு நிதிப் பாதுகாப்பு இருந்தால், நிச்சயமற்ற காலங்களிலும் மன அழுத்தத்தைத் ஓரளவு தவிர்க்கலாம். இதற்கு, உங்கள் சேமிப்பை அதிகரிப்பது அவசியம். நிலையான வைப்புத்தொகை, மியூச்சுவல் ஃபண்ட் அல்லது உங்கள் சேமிப்புக் கணக்கில் பணத்தைப் போடுவது ஆகியவற்றைச் செய்யுங்கள். சிறு துளி பெரு வெள்ளம்.

கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் உங்கள் மன நலம் குன்றுவதாக உணர்ந்தால், ஒரு மருத்துவ நிபுணரின் உதவி தேடுவது ஒரு நல்ல யோசனை.

சம்பந்தப்பட்ட கட்டுரைகள்