துர்கா பூஜையைச் சிறப்பாக ஏற்பாடு செய்வது எப்படி
துர்கா பூஜையைச் சிறப்பாக ஏற்பாடு செய்வது எப்படி
தொற்றுநோய் தொடங்கியதாலும் அதைத் தொடர்ந்து ஊரடங்கு அமலுக்கு வந்ததாலும் 2020 ஆம் ஆண்டு மிகவும் கடினமாக இருந்தது; நம் அனைவருக்கும் கூட்டாக ஓர் உத்வேகம் தேவைப்படுகிறது. துர்கா பூஜை பண்டிகை விரைவில் வரவிருப்பதால், கொண்டாட இதைவிடச் சிறந்த காரணம் என்ன இருக்க முடியும்?
ஊரடங்கு அல்லது மக்கள் நடமாட்டத்திற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் பண்டிகைக் கொண்டாட்டத்தைக் குறைக்க விடாதீர்கள். உங்கள் அன்புக்குரியவர்களுடன் மீண்டும் இணைந்து, வீட்டிலேயே துர்கா பூஜை நிகழ்வைக் கொண்டாடலாம். அனைவரும் மகிழ்ந்திருக்கும் நேரமாக அதனை மாற்ற பின்வரும் குறிப்புகளை மனதில் கொள்ளுங்கள்.
அலங்காரங்களைச் செய்யவும்
நுழைவாயிலைத் தொங்கும் விளக்குகளால் அலங்கரித்து, பல வண்ண ரங்கோலி வரைந்து முதல் தோற்றத்திலேயே முத்திரை பதியுங்கள். இந்தச் சூழல் நிச்சயமாக ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தும்; உங்கள் சொந்த DIY விளக்குகளைத் தொங்கவிட்டு கூடுதல் அரவணைப்பைச் சேருங்கள். உங்கள் விருந்தினர்களை மேலும் ஆச்சரியப்படுத்த, நடுவில் உள்ள மேசையைப் பூக்கள் நிறைந்த சாடியின் மூலம் அழகூட்டுங்கள். இடத்தை பிரகாசமாக்கவும், அதற்கு ஒரு பிரத்தியேக பண்டிகைச் சூழ்நிலையை அளிக்கவும், புதிய கம்பளங்கள் மற்றும் ஷோ பீஸ்களை வைத்து பரிசோதித்துப் பார்க்கலாம்!
விருந்தினர் பட்டியலைத் தயாரிக்கவும்
உங்கள் அன்புக்குரியவர்களையும் நெருங்கிய உறவினர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் சந்திப்பதற்கான இந்தப் புனிதமான பண்டிகை ஒரு சிறந்த வழியாகும். நீங்கள் WhatsApp மூலம் அழைப்பிதழ்களை அனுப்பலாம் அல்லது நீங்கள் நீண்ட காலமாக செய்ய வேண்டும் என்று நினைத்த தொலைபேசி அழைப்பை மேற்கொள்ளலாம்! உங்கள் வீட்டில் நடக்கும் விருந்துக்கு உங்கள் நெருங்கிய நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களை அழைக்கலாம். இருப்பினும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுங்கள் மற்றும் சமூக இடைவெளி விதிமுறைகளைக் கவனத்தில் கொள்ளுங்கள்.
வேடிக்கையான செயல்பாடுகளைத் திட்டமிடுங்கள்
நீங்கள் துர்கா பூஜை விழாவுக்கான பொழுதுபோக்கு யோசனைகளைத் தேடுகிறீர்கள் என்றால், தூபக்கலசத்துடன் ஆடும் 'தூனுசினாச்' உங்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்க வேண்டும். இது திறந்தவெளியில் சிறப்பாகச் செயல்படும் என்றாலும், சரியான இசை இருக்கும் பட்சத்தில், வீட்டிற்குள்ளும் இது நன்றாகவே அமையும். பலகை விளையாட்டுகளைக் கொண்டுவந்து குழந்தைகளை மகிழ்விக்கலாம், பெரியவர்களும் இந்த வேடிக்கையில் கலந்துகொள்ளலாம்!
துர்கா பூஜையின் நான்கு புனித நாட்களை ஆன்மீகத்தில் ஈடுபடுவதற்கும், உங்கள் அன்புக்குரியவர்களுடன் மீண்டும் இணைவதற்கும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். வீட்டில் விருந்து நடத்துவதன் மூலம், நீங்கள் நட்பைப் புதுப்பித்து, பழைய நினைவுகளை மீட்டெடுக்கலாம். நீங்கள் உங்கள் படைப்பாற்றலைப் பயன்படுத்தி, துர்கா பூஜைக்காக சுவாரஸ்யமான வீட்டு விருந்து யோசனைகளை உருவாக்கலாம்.
ஊரடங்கில் துர்கா பூஜைக்காக வீட்டில் விருந்து நடத்தும்போதும், மற்ற பண்டிகைகளைக் கொண்டாடும்போதும், பெருந்தொற்று தொடர்பான அனைத்து விதிகளையும் ஒழுங்குமுறைகளையும் நீங்கள் பின்பற்றுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.