Nutrition Week
5 நிமிடங்கள் படித்தது
வாழ்க்கை யுக்திகள்

தேசிய ஊட்டச்சத்து வாரம் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள்

தேசிய ஊட்டச்சத்து வாரம் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள்

தேசிய ஊட்டச்சத்து வாரம் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள்

இந்தியா எல்லாத் துறைகளிலும் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது.அது உலகின் வளர்ச்சிமிக்க பொருளாதார நாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.எனினும், ஊட்டச்சத்துக் குறையைத் தீர்ப்பதில் பிற நாடுகளை விட பின்தங்கியே உள்ளது.லான்செட் ஆய்வின் படி, உணவுத் தொடர்பான மிகக் குறைந்த இறப்புகள் விகிதத்தில் இந்தியா 118ஆவது இடத்தில் உள்ளது.மேலும், உணவு மற்றும் வேளாண் அமைப்பின் (எஃப்ஏஓ) அறிக்கைப் படி, மொத்த மக்கள் தொகையில் சுமார் 14.5% பேருக்கு ஊட்டச்சத்துக் குறை உள்ளது.

இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்கும் வண்ணம் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியமான உணவின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, இந்திய அரசு நம் நாட்டில் நான்கு தசாப்தங்களாக செப்டம்பரில் தேசிய ஊட்டச்சத்து வாரம் கொண்டாடி வருகிறது.தேசிய ஊட்டச்சத்து வாரம் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ஐந்து விஷயங்கள்-.
 

தேசிய ஊட்டச்சத்து வாரம் என்றால் என்ன?

தேசிய ஊட்டச்சத்து வாரம் என்றால் என்ன?

ஆரோக்கியமான உடலுக்கு ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தேசிய ஊட்டச்சத்து வாரத்தை நடத்துகிறது.

தேசிய ஊட்டச்சத்து வாரம் எப்போது கொண்டாடப்படுகிறது?

தேசிய ஊட்டச்சத்து வாரம் எப்போது கொண்டாடப்படுகிறது?

தேசிய ஊட்டச்சத்து வாரம் செப்டம்பர் முதல் வாரத்தில் 1 முதல் 7 வரை கொண்டாடப்படுகிறது. சிலர் இந்தக் காலகட்டத்தில் தேசிய ஊட்டச்சத்து தினத்தையும் அனுஷ்டித்து உடல்நலம் மற்றும் உணவு தொடர்பான மையக் கருத்துக்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.

தேசிய ஊட்டச்சத்து வாரத்தைக் கொண்டாடுவதன் நோக்கம் என்ன?

தேசிய ஊட்டச்சத்து வாரத்தை கொண்டாடுவதன் நோக்கம் என்ன?

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு மக்கள் ஆரோக்கியமாக இருப்பது அவசியம்.ஆரோக்கியமாக இருப்பதற்கு முறையான ஊட்டச்சத்து இன்றியமையாதது.எனவே, ஆரோக்கியமான மக்களை உருவாக்க ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வூட்ட தேசிய ஊட்டச்சத்து வாரம் கொண்டாடப்படுகிறது, இது உற்பத்தித் திறனை அதிகரித்து நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
 

தேசிய ஊட்டச்சத்து வாரம் எவ்வாறு கொண்டாடப்படுகிறது?

தேசிய ஊட்டச்சத்து வாரம் எவ்வாறு கொண்டாடப்படுகிறது?

அரசு ஒவ்வொரு ஆண்டும் ஊட்டச்சத்து வாரத்திற்கான ஒரு மையக்கருத்தை அறிவிக்கிறது.2017இல் ஊட்டச்சத்து வாரத்துக்கு, 'பச்சிளங் குழந்தைகள் & இளங் குழந்தைகளுக்கு உகந்த உணவளிப்பு முறைகள்: சிறந்த குழந்தை ஆரோக்கியம்' என்பது மையக்கருத்து; 2018இல் 'உணவை மேம்படுத்துவோம்' என்பது மையக்கருத்து; 2020 தேசிய ஊட்டச்சத்து வாரத்த்துக்கு இன்னும் மையக்கருத்து அறிவிக்கப்படவில்லை.
 

உணவு மற்றும் ஊட்டச்சத்து வாரியம் நாடு முழுவதுமுள்ள அதன் சமூக உணவு மற்றும் ஊட்டச்சத்து விரிவாக்கக் கிளைகள் (சிஎஃப்என்இயூ) மூலம் பட்டறைகள், விழிப்புணர்வு இயக்கங்கள் மற்றும் கூட்டங்களை நடத்தி வருகிறது.சிஎஃப்என்இயூ-கள் மாநில அரசுகளுடனும் அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்து வாரம் முழுவதும் ஊட்டச்சத்து தொடர்பான அனைத்தையும் குறித்து பட்டறைகள், கருத்தரங்குகள், திரைப்படங்கள் மற்றும் கண்காட்சிகளை நடத்துகின்றன.இந்தப் பட்டறைகள் மற்றும் கருத்தரங்குகளில் நோய்த்தடுப்பு, தடுப்பூசி, தாய்ப்பால், சுத்திகரிப்பு, சுகாதாரம் போன்றவை விவாதிக்கப்படுகின்றன.
 

இந்தியா தனது ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்த ஏன் அதிக கவனம் செலுத்த வேண்டும்?

இந்தியா ஏன் தனது ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்த அதிகக் கவனம் செலுத்த வேண்டும்?

இந்தியா தனது ஊட்டச்சத்து நிலை மேம்பாட்டு முயற்சிகளை இரட்டிப்பாக்க இதோ சில காரணங்கள்

  • 'உலகளாவிய ஊட்டச்சத்து அறிக்கை 2018'-இன் படி, உலகின் மொத்த வளர்ச்சி குன்றிய குழந்தைகளுள் ஏறத்தாழ மூன்றில் ஒருவர் இந்தியாவில் உள்ளனர்.
  • மெலிதல் என்றும் அழைக்கப்படுகிற குறைந்த உயரம்-எடை விகிதம் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதத்தைக் கணிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இது கடுமையான உணவுப் பற்றாக்குறை அல்லது நோய்களின் விளைவாகும். 'உலகளாவிய ஊட்டச்சத்து அறிக்கை 2018'-இன் படி, உலகளவில் உள்ள 50.5 மில்லியன் மெலிந்த குழந்தைகளுள் சுமார் 25.5 மில்லியன் குழந்தைகள் இந்தியாவில் உள்ளனர்.
  • தேசிய குடும்பச் சுகாதார கணக்கெடுப்பு (என்எஃப்ஹெச்எஸ்-4) ஆய்வு, பீகார், மத்தியப் பிரதேசம், மேகாலயா, ஜார்கண்ட், உத்தரப் பிரதேசம் மற்றும் தாத்ரா & நகர் ஹவேலியில் 40%க்கும் அதிகமான குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்கள் எனக் கண்டறிந்துள்ளது.
  • ஊட்டச்சத்துக் குறையை தணிக்க தாய்ப்பால் ஒரு பயனுள்ள வழிமுறை என நிரூபிக்கப்பட்டுள்ளது. எனினும், என்எஃப்ஹெச்எஸ்-4 ஆய்வின் படி, 54.9% குழந்தைகளுக்கே தாய்ப்பால் ஊட்டப்படுகிறது.
  • தாய்மார்களின் இரத்தச் சோகைக்கும் குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்கும் தொடர்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கைப் படி, இந்தியாவில் இனப்பெருக்க வயதிலுள்ள சுமார் 51.4% பெண்களுக்கு இரத்தச் சோகை உள்ளது.

எனவே, இந்தியாவின் இந்த அதிமுக்கியப் பிரச்சனை குறித்து மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி தீர்வுகாண தேசிய ஊட்டச்சத்து வாரம் ஒரு முக்கியமான முன்முயற்சி.

சம்பந்தப்பட்ட கட்டுரைகள்