Office exercise - Banner Image
7 நிமிடங்கள் படித்தது
வாழ்க்கை யுக்திகள்

உங்கள் மேஜையில் நீங்கள் செய்யக்கூடிய 5 அலுவலக உடற்பயிற்சிகள் - வேலையில் ஃபிட்டாக இருங்கள்

உங்கள் மேஜையில் நீங்கள் செய்யக்கூடிய 5 அலுவலக உடற்பயிற்சிகள் - வேலையில் ஃபிட்டாக இருங்கள்

உங்கள் மேஜையில் நீங்கள் செய்யக்கூடிய 5 அலுவலக உடற்பயிற்சிகள் - வேலையில் ஃபிட்டாக இருங்கள்

நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும், உடற்பயிற்சி செய்யவோ அல்லது ஒவ்வொரு இரவும் நீண்ட நேரம் தூங்கவோ உங்களால் நேரம் ஒதுக்க முடியவில்லை. உடற்பயிற்சி செய்ய, ஓய்வெடுக்க, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அரட்டை அடிக்க, அல்லது நீங்கள் விரும்பும் வேகத்தில் சாப்பிடுவதற்கான நேரத்தைக் கூட உங்கள் பரபரப்பான வேலை காலஅட்டவணை பறித்துக் கொள்கிறது. நேர நெருக்கடியை எதிர்கொள்ளும் போது உங்கள் ஆரோக்கியம் மற்றும் நீங்கள் எவ்வாறு ஃபிட்டாக இருக்க முடியும் என்பதைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள்.

உதவியைத் தேடுபவர்களுக்கு உதவி கிடைக்கும் - உங்கள் கால அட்டவணையில் மாற்றம் எதுவும் செய்யாமல் நீங்கள் செய்யக்கூடிய 5 அலுவலக உடற்பயிற்சிகளின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். நீங்கள் உங்கள் உடையை மாற்றவோ அல்லது யோகா பாயில் முதலீடு செய்யவோ அல்லது எந்த ஆடம்பரமான உபகரணங்களையும் வாங்கவோ தேவையில்லை. உங்கள் தோள்களை நேராக்கிவிட்டு தயாரானால் போதுமானது –

1 ஸ்ட்ரெட்ச் உடன் தொடங்குங்கள்.

1 ஸ்ட்ரெட்ச் உடன் தொடங்குங்கள்.

நீங்கள் அலுவலகத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து உங்கள் மடிக்கணினியில் வேலை செய்கிறீர்கள், அறிக்கைகள் மற்றும் விளக்கக்காட்சிகளை மதிப்பாய்வு செய்கிறீர்கள், மேலும் நேரத்தை சேமிக்க வேலையிடத்திலேயே சாப்பிடுகிறீர்கள். ஆனால் தொடர்ந்து அமர்ந்திருப்பது உங்கள் கழுத்து, தோள்கள், முதுகு, இடுப்பு மற்றும் முழங்கால்களில் மிகப்பெரிய அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. ஒரு எளிய ஸ்ட்ரெட்ச் மூலம் மூட்டுகளின் விறைப்பைக் குறைக்கலாம்: உங்கள் விரல்களை ஒன்றாக இணைத்து, உங்கள் கைகளை நேராக வானத்தை நோக்கி உயர்த்தவும். இப்போது உங்கள் கால்களை நேராக நீட்டவும். இந்த நிலையில் 5 வினாடிகள் இருக்கவும், மூச்சை வெளியேற்றி, ரிலாக்ஸ் செய்யவும். இதை மேலும் 10 முறை செய்யவும், ஒவ்வொரு முறையும் இரண்டு கைகளையும் கால்களையும் சற்று அதிகமாக ஸ்ட்ரெட்ச் செய்யவும். ஸ்ட்ரெட்ச் இரத்த ஓட்டத்தைச் சிறப்பாக ஊக்குவிக்கிறது.

2 தோளுயர்த்துங்கள்.

2 தோளுயர்த்துங்கள்.

உங்கள் சோர்வடைந்த தோள்களுக்கு ஓய்வு தேவை, ஆனால் உங்களுக்குச் சாய்ந்து படுக்க நேரமில்லை. உங்கள் நாற்காலியில் நேராக உட்கார்ந்து, உங்கள் கைகளை உங்கள் பக்கவாட்டில் வைத்திருங்கள். இப்போது உங்கள் தோள்களை உங்கள் காதுகளை நோக்கி உயர்த்தி, 2 வினாடிகள் வைத்திருங்கள். அதை விடுவித்து, பின்னர் 15 முறை மீண்டும் செய்யுங்கள். தோள்களை உயர்த்துவது அதன் அழுத்தத்தை நீக்கி அவற்றை வலுப்படுத்துகின்றது. தோள்களில் அழுத்தத்தைச் சேர்க்க நீங்கள் ஒவ்வொரு கையிலும் கனமான புத்தகங்களைப் பிடித்துக் கொள்ளலாம்.

3 மார்புகளைத் திறங்கள்.

3 மார்புகளைத் திறங்கள்.

மார்பு மற்றும் முதுகு உங்கள் மேல் உடலை சமநிலையில் வைத்திருக்கிறது ஆனால் நாற்காலியில் அதிகமாக சாய்வது உங்கள் போஸ்சரைக் கெடுத்து முதுகுவலியை ஏற்படுத்துகிறது. நீங்கள் சமாளிப்பதற்கான வழி இதோ: தோள்பட்டை மட்டத்தில் உங்கள் கைகளை நீட்டி, உள்ளங்கைகளை வெளிப்புறமாகப் பிடித்துக் கொள்ளுங்கள். தோள்களை நேராக வைத்து, மெதுவாக இரண்டு உள்ளங்கைகளையும் ஒன்றாகக் கொண்டு வாருங்கள். இது மார்பு தசைகளைத் திறந்து, முதுகுக்கு மென்மையான பயிற்சியை அளிக்கிறது. நீங்கள் மார்பு அழுத்தத்தை மேலும் அதிகரிக்க விரும்பினால் லேசான எடைகளைச் சேர்த்துக் கொள்ளலாம்.

4 உங்கள் முழங்கால்களைக் கட்டிப்பிடியுங்கள்.

4 உங்கள் முழங்கால்களைக் கட்டிப்பிடியுங்கள்.

உங்கள் முழங்கால்களைக் கட்டிப்பிடிப்பதன் மூலம் உங்கள் முதுகு மற்றும் இடுப்புக்கு கொஞ்சம் அன்பைக் காட்டுங்கள்! உங்கள் நாற்காலியில் உட்கார்ந்து, உங்கள் வலது காலை முடிந்தவரை உங்கள் மார்புக்கு அருகில் கொண்டு வந்து, அதை உங்கள் உடலுடன் அணைத்துக் கொள்ளுங்கள். இப்போது இடது காலால் இதோ போல செய்யுங்கள். இந்த உடற்பயிற்சி உங்கள் மைய மற்றும் முதுகு தசைகளுக்குப் பயிற்சி அளிக்கிறது.

5 நின்று கொண்டு கால்விரல் தொடுதல்.

5 நின்று கொண்டு கால்விரல் தொடுதல்.

நேராக எழுந்து நின்று மெதுவாக குனிந்து உங்கள் கால் விரல்களைத் தொடுங்கள். உங்கள் கால் விரல்களை உடனடியாகத் தொட முடியாவிட்டால், அதிக முயற்சி எடுக்காதீர்கள், ஆனால் உங்கள் ஹேம்ஸ்டிரிங்குகளில் அழுத்தம் ஏற்படுத்தும் அளவுக்கு வளைத்தால் போதுமானது. 5 வினாடிகள் அப்படியே இருங்கள், பின்னர் நிமிருங்கள், இதையே மேலும் 5 முறை செய்யுங்கள்.

மேலே பட்டியலிடப்பட்டுள்ளவற்றில் நன்கு தேர்ச்சி பெற்ற பிறகு, நீங்கள் கூடுதல் அலுவலக உடற்பயிற்சிகளை ஆராயலாம். வேலையில் ஃபிட்டாக இருக்க இது ஒரு சிறந்த வழியாகும்!

சம்பந்தப்பட்ட கட்டுரைகள்