அப்னே லியே, அவுர் அப்னோ கே லியே… பாப்பா ஹை நா
அப்னே லியே, அவுர் அப்னோ கே லியே… பாப்பா ஹை நா
தந்தைமார்களைக் கொண்டாடி குழந்தையின் வாழ்வில் அவர்களின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள வருடத்தில் ஒருசில நாட்களே உள்ளன. அவற்றுள் ஒன்று தந்தையர் தினம். உலகெங்கும் உள்ள குடும்பங்கள் தங்கள் தந்தைமார்களைக் கொண்டாடி அவர்கள் தங்களுக்கு எவ்வளவு நேசம் மிக்கவர்கள் என்பதைக் கூற இந்நாள் ஒரு நல்ல தருணம்.
ஹமாரே பாப்பா
அவர்களின் அன்பு அப்பா அக்குழந்தையின் வாழ்வில் ஈடு இணையற்றவர்.அவர் தாயுடன் சேர்ந்து ஒரு வாழ்வாதாரம் அளிப்பவராகவும் கவனிப்பாளராகவும் பங்காற்றி தனது குழந்தைக்குப் பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதிசெய்கிறார்.
ஒவ்வொரு பாப்பா கி கஹானியும் ஒரேவிதமாகத் தொடங்கலாம், ஆனால் ஒவ்வொன்றுக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. அவரது மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அதைத் தொடர்ந்து வரும் அனைத்துப் பொறுப்புகளையும் அவர் நன்கு அறிந்துள்ளார், அவற்றில் ஒன்று, அவரது ஆனந்தமான குட்டீஸின் விருப்பங்களையும் தேவைகளையும் புரிந்துகொண்டு பூர்த்திசெய்வது.
எனினும், தந்தை வாழ்வாதாரம் அளிப்பவர் மட்டுமல்ல. அவர் தனது குடும்பத்திற்கு நிதி மற்றும் நம்பிக்கை ரீதியான ஆதார அடித்தளம். அவர் வாழ்வின் அனைத்து ஏற்றத்தாழ்வுகளையும் சமாளித்து அவர்களை கவனித்துக்கொள்கிறார், அதேவேளை தனது சொந்தக் கனவுகளையும் லட்சியங்களையும் நிறைவேற்றப் பாடுபடுகிறார்.
எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் - பாப்பா கி நயி கஹானி
இந்த தந்தையர் தினத்தன்று எங்கள் பாப்பா ஹை நா பிரச்சாரத்தின் மூலம், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், பெற்றோரின் பொறுப்புகளை நிறைவேற்றும் அதேவேளை தங்கள் சொந்தக் கனவுகளையும் விட்டுக்கொடுக்காத அப்பாக்களை கௌரவிக்கிறது. எங்கள் சிந்தனையைத் தூண்டும் சிறுகதையில், எழுத்தாளராகும் தனது கனவை நனவாக்க தைரியமாகச் செயல்படும் தந்தை இடம்பெறுகிறார்.
அவர் முதலில் தனது புத்தகத்தை வெளியிடுகிறார், ஆனால் அதை விநியோகிப்பதில் வெற்றி கிடைக்கவில்லை. மாதந்தோறும் அவர் முயற்சி செய்து தோல்வியடைகிறார். இருப்பினும், அவர் அதைக் கைவிடவில்லை. தனது மகள் மூலம், சவாலைச் சாதனையாக்கும் ஊக்கம் அவருக்கு வாழ்க்கைப் பரிசாகக் கிடைக்கிறது. அவரே தனது கதைகளைச் சொல்லும் போது அதில் மிகுந்த சுவாரஸ்யம் இருப்பதாக அவள் அவரை உணர வைக்கிறாள்.
இந்த உத்வேகத்தால் உந்தப்பட்டு, அவர் பாட்காஸ்ட் பரப்பில் இறங்கி, தான் எழுதிய கதைகளை ஆடியோ பதிவுகளாக மாற்றுகிறார். ஓர் எழுத்தாளர் இப்போது தொகுப்பாளராகவும் வர்ணனையாளராகவும் மாறுகிறார். கதை சொல்லும் பேரார்வத்தால் தூண்டப்பட்டு, அவர் தனது கனவை நனவாக மாற்றுகிறார். அதேவேளை, தனது குடும்பத்தை எப்படிப் பாதுகாப்பாக வைத்திருப்பது என்பதை அறிந்த ஒரு நித்திய தந்தை மற்றும் கணவராக இருக்கிறார். மேற்குறிப்பிட்டது போல, பெற்றோருக்கான தனது பணிகள் மற்றும் பொறுப்புகளை அறிந்துள்ளார்.
அவர் தனது குழந்தையை (அப்னோன் கே லியே) கவனித்துக்கொள்வதில் தனது கனவுகள் குறுக்கிடாமல் பார்த்துக்கொள்ளும் அதேநேரம், தந்தைக்கான பொறுப்பினால் தனது கனவையும் விட்டுவிடவில்லை (அப்னே லியே). மாறாக, வாழ்வில் சரியான சமநிலை பேணி தனக்கும் தனது மகளுக்கும் மகிழ்ச்சியை உருவாக்குகிறார்.அப்னே லியே, அப்னோ கே லியே என்பதன் ஓர் உண்மையான உதாரணம்.
பாப்பா ஹாய் நா
எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், தனது மனதைத் தொடும் வீடியோவில் காட்டப்பட்டுள்ள கதையும் செய்தியும் “ஒவ்வொரு அப்பாவின் கதையாகவும்” இருக்க வேண்டும் என நம்புகிறது. இளம் தந்தையர்கள் இந்தச் சமநிலையை அடைய உதவும் பாலிசிகளையும் எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் வழங்குகிறது. எங்களின் குழந்தைத் திட்டங்கள் மூலம், தந்தையர்கள் தங்கள் பிள்ளையின் எதிர்காலம் குறித்து உறுதியுடன் இருக்கலாம் மற்றும் தங்கள் சொந்தக் கனவுகளைத் தொடரலாம். தற்போது, எஸ்பிஐ லைஃப் தேர்ந்தெடுப்பதற்காக இரண்டு குழந்தைத் திட்டங்களை வழங்குகிறது – எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் சாம்பியன் இன்சூரன்ஸ் மற்றும் எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் ஸ்காலர்.
இந்தத் திட்டங்களின் மூலம், உங்கள் குழந்தையின் வெற்றிக் கதையோடு சேர்ந்து உங்கள் சொந்த வெற்றிக் கதையையும் நீங்கள் எழுதலாம். எஸ்பிஐ ஆயுள் காப்பீட்டு நிறுவனம் உங்களுக்கு இனிய தந்தையர் தின வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு, உங்கள் எதிர்காலத்திற்கும் உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்கும் எது சிறந்ததோ அதைத் தேர்ந்தெடுக்குமாறு உங்களை ஊக்குவிக்கிறது.