குடும்பத்தில் புற்றுநோய் வரலாறு உள்ளதா? இதோ உங்களுக்கான தடுப்பு நடவடிக்கைகள்
குடும்பத்தில் யாருக்காவது புற்றுநோய் பாதிப்பு உள்ளதா? உங்களுக்கான தடுப்பு நடவடிக்கைகள்.
புற்றுநோய் ஒரு தீவிரமான நோயாகும், மேலும் இது ஒருவரின் உடல்நலத்தைப் பாதகமாகப் பாதிக்கக்கூடும். இருப்பினும், எல்லா வகையான புற்றுநோய்களும் உயிரிழப்பை ஏற்படுத்துவதில்லை. இந்த நோய்க்கும் மரபணுத் தொடர்பும் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது, ஒரு குடும்பத்தின் முந்தைய தலைமுறைகளில் யாருக்காவது ஏதேனும் ஒரு வகை புற்றுநோய் இருந்திருந்தால், அடுத்தடுத்த தலைமுறையினருக்கும் அது தொற்றிக்கொள்ள வாய்ப்புள்ளது. ஆனால், மரபணு காரணங்களைத் தவிர, நடைமுறையில் யாருக்கு வேண்டுமானாலும் புற்றுநோய் வரலாம். எனவே, ஒரு புற்றுநோய் காப்பீட்டுத் திட்டத்தை வாங்குவது உதவியாக இருக்கும். நீங்கள் பின்பற்றக்கூடிய ஒரு செயல் திட்டம் இதோ:
சுறுசுறுப்பாக இருங்கள்.
உடற்பயிற்சி புற்றுநோய்க்கு ஒரு முழுமையான தீர்வாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அது தடுப்பு விளைவைக் கொண்டிருக்கலாம். வாரத்திற்கு மிதமான மற்றும் தீவிரமான உடற்பயிற்சி செய்வது, உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், நோய்களைத் தடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும் என்பது குறித்து எண்ணற்ற ஆய்வுகள் உள்ளன. ஆரோக்கியமான உடல், புற்றுநோய் மற்றும் அதன் சிகிச்சை முறைகளின் (அதாவது கதிர்வீச்சு, மருந்துகள் மற்றும் கீமோதெரபி) தீய விளைவுகளையும் எதிர்த்துப் போராடுகிறது. எனவே, உங்கள் குடும்பத்தில் யாருக்காவது புற்றுநோய் இருந்திருந்தால், உங்கள் அன்றாட வாழ்வில் உடற்பயிற்சியை இணைத்துக்கொள்வது சிறந்தது.
* வருடாவருடம் ஸ்கிரீனிங் செய்துகொள்ளுங்கள்.
புற்றுநோய்க்கான மரபியல் சாய்வு உள்ளவர்கள், எப்போதுமே புற்றுநோய் சார்ந்த அறிகுறிகள் குறித்து விழிப்பாக இருக்க வேண்டும். 30 வயதைத் தாண்டிய பெண்கள் வருடம் ஒரு முறையாவது மார்பக, கருப்பை மற்றும் கர்ப்பப்பைவாய் புற்றுநோய்க்கான (குறிப்பாக 40 வயதுக்குப் பிறகு) பரிசோதனை செய்துகொள்ள வேண்டும், அதேபோல் ஆண்கள் 40 வயதைத் தாண்டிய பின் புராஸ்டேட் மற்றும் பித்தப்பை புற்றுநோய்க்கான பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். முழுமையான நலப் பரிசோதனை மேற்கொள்வது, இயல்பற்ற தன்மைகளை வெளிப்படுத்தி முன்கூட்டியே எச்சரிக்கை வழங்கும். அதற்கேற்ப நீங்கள் தாமதிக்காமல் உரிய சிகிச்சையைத் தொடங்கலாம்.
* உணவுமுறை மற்றும் வாழ்க்கைமுறையை மேம்படுத்துங்கள்.
பல சமயங்களில், முறையற்ற உணவும் சீரற்ற வாழ்க்கைமுறையும் புற்றுநோயை மோசமாக்கலாம். உணவுக்கும் புற்றுநோய்க்கும் இடையே நேரடித் தொடர்பு இன்னும் நிறுவப்படவில்லை என்றாலும், முறையற்ற உணவு நிச்சயமாக புற்றுநோய்க் காரணிகளை அதிகரிக்கலாம். உடல் பருமனுக்கும் புற்றுநோய்க்கும் இடையே கூட தொடர்பு இருக்கலாம். உப்பு மற்றும் பதப்படுத்திய சர்க்கரை குறைவாக உள்ள உணவை உட்கொள்வதும், தீட்டிய மாவு மற்றும் ட்ரான்ஸ் கொழுப்புகள் நிறைந்த உணவைத் தவிர்ப்பதும் எப்போதுமே நல்லது. உணவில் அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் நிறைந்திருக்க வேண்டும், மேலும் பருவகாலக் கனிகள், கிரீன் டீ ஆகியன மூலம் ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். போதுமான ஓய்வும் தரமான உறக்கமும் நல்ல வாழ்க்கைமுறை பேணுவதில் இதர முக்கியக் காரணிகளாகும்.