5 fun way stay fit
5 நிமிடங்கள் படித்தது
வாழ்க்கை யுக்திகள்

ஜிம்முக்குச் செல்லாமலே திடமாக இருக்க 5 ஆனந்தமான வழிகள்

ஜிம்முக்குச் செல்லாமலே திடமாக இருக்க 5 ஆனந்தமான வழிகள்

ஜிம்முக்குச் செல்லாமலே திடமாக இருக்க 5 ஆனந்தமான வழிகள்

அந்த அடக்கமான அரங்குக்குள் ஆண்களும் பெண்களும் அருகருகே மூச்சுவிடும் போது அதிகமாக கார்பன் டை ஆக்சைடை சுவாசிப்பதையும், அதே சலிப்புத் தட்டும் தசைப் பயிற்சி செய்வதையும் யார் தான் விரும்புவார்கள், நிச்சயமாக அதில் சுவாரஸ்யம் இருக்காது. எளிய வாழ்க்கைமுறை மாற்றங்கள் மூலம் நீங்கள் திடமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கலாம்.

1.உடலை அசைத்தாட்டுங்கள்

1.உடலை அசைத்தாட்டுங்கள்

நடன தளத்தில் நாசூக்கான அசைவுகளுடன் ஆடுபவரைப் பார்ப்பதே கண்களுக்குக் குளிர்ச்சி. நடனம் மிகச்சிறந்த உடற்பயிற்சி மட்டுமின்றி மன அழுத்தத்தையும் போக்கும் என்று நம்பப்படுகிறது. அது உடல் வளைவதையும் தோற்ற நிலையையும் மேம்படுத்துகிறது. அது ஒரு முழுவுடல் பயிற்சி. சனிக்கிழமை தோறும் இசையைத் தட்டிவிட்டு சல்சா, ஸ்விங், பாலே, ஜாஸ் என எந்த வகை நடனத்தையும் கற்றுக்கொண்டு சுறுசுறுப்பாக இருங்கள்.

2.விளையாடத் தயாராகுங்கள்

2.விளையாடத் தயாராகுங்கள்

பூங்காவில் சிறு குழந்தைகளுடன் விளையாடி இருக்கிறீர்களா அல்லது உங்கள் அழகான செல்லப்பிராணியை தடவிக்கொடுத்து ஓடி விளையாடி இருக்கிறீர்களா? உங்களுக்குச் சௌகரியமான எந்த நேரத்தில் வேண்டுமானாலும் உள்ளரங்கில் டேபிள் டென்னில் அல்லது முற்றத்தில் கூடைப்பந்து விளையாடி சுறுசுறுப்பும் உற்சாகமும் பெறுங்கள். நீங்கள் தீவிர வீடியோ கேம் பிரியரா? அப்படியென்றால் அந்த விளையாட்டை உடற்பயிற்சியாக மாற்றுங்கள். வீடியோ கேம்கள் மூலம் பல்வேறு உடல்திடம் மற்றும் பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபடலாம். ஏதாவது லேசர் டேக் கேம்களை விளையாடி, மன அழுத்தத்தைப் போக்குங்கள், அதேவேளை கலோரிகளையும் குறைத்திடுங்கள்.

3.நடைபோடத் தயாராகுங்கள்

3.நடைபோடத் தயாராகுங்கள்

கவனத்தை ஒருமுகப்படுத்தி முன்னணியில் இருக்க, நடைபோட்டு நகரவலம் செல்லுங்கள் அல்லது ஆன்லைன் நடைபோடுவோர் குழுக்களில் சேருங்கள். பலகாரப் பத்தியை நோக்கி நடப்பதற்குப் பதிலாக தெருவில் இறங்கி சற்று நடக்கலாமே? உங்கள் செல்லப்பிராணியை நீண்ட நடைப்பயணம் அழைத்துச் செல்லுங்கள் அல்லது லிஃப்டுக்கு பதிலாக படிக்கட்டில் ஏறுங்கள் அல்லது சைக்கிளில் வேலைக்குச் செல்லுங்கள், உங்களுக்கு இப்படிப் பல வழிகள் உள்ளன. நடைபயிற்சி அல்லது இந்தப் பரிந்துரைக்கப்பட்ட பிற வகை கார்டியோ பயிற்சிகள் பக்கவாதத்துக்கான ஆபத்தைக் குறைக்கும், இருதய மற்றும் நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

கவனத்தை ஒருமுகப்படுத்தி முன்னணியில் இருக்க, நடைபோட்டு நகரவலம் செல்லுங்கள் அல்லது ஆன்லைன் நடைபோடுவோர் குழுக்களில் சேருங்கள். பலகாரப் பத்தியை நோக்கி நடப்பதற்குப் பதிலாக தெருவில் இறங்கி சற்று நடக்கலாமே? உங்கள் செல்லப்பிராணியை நீண்ட நடைப்பயணம் அழைத்துச் செல்லுங்கள் அல்லது லிஃப்டுக்கு பதிலாக படிக்கட்டில் ஏறுங்கள் அல்லது சைக்கிளில் வேலைக்குச் செல்லுங்கள், உங்களுக்கு இப்படிப் பல வழிகள் உள்ளன. நடைபயிற்சி அல்லது இந்தப் பரிந்துரைக்கப்பட்ட பிற வகை கார்டியோ பயிற்சிகள் பக்கவாதத்துக்கான ஆபத்தைக் குறைக்கும், இருதய மற்றும் நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும் சுவாரஸ்யமாக இருக்க, உங்களுக்கு ஏற்றவாறு ஒரு புதிய பாணியில் நடைபோடுங்கள். சொல்ல முடியாது, ஒருவேளை நீங்களும் ஒரு யூடியூப் பிரபலமாக மாறலாம்.

4. காதல் வயப்படுங்கள், அதாவது தரையுடன் (கண் சிமிட்டல்)

4. காதல் வயப்படுங்கள், அதாவது தரையுடன் (கண் சிமிட்டல்)

அதி பராமரிப்பு சோபாக்களை அகற்றிவிட்டு, கம்பளப் பிரியராக மாறுங்கள். உங்கள் உடல் தரையைத் தொடுவதை அதிகரிக்கவும். வீட்டில் உள்ளபோது அல்லது இயன்றால் மற்ற இடங்களிலும் உணவு மேசைக்குப் பதிலாக 'இந்திய முறையில்' கீழே அமர்ந்து உண்ணுங்கள். கீழே உட்கார்ந்து வேலை செய்யுங்கள். வீட்டுப் பராமரிப்பு, சில்லறை வேலைகள் போன்றவற்றை நீங்களே செய்யுங்கள். ஒவ்வொரு முறை எழுந்துநிற்கும் போதும், உடல் தசைகள் அனைத்துக்கும் வேலை கொடுத்து உடலை நீட்டி மடக்குங்கள். அதிகச் சிரத்தை எடுக்காமல் திடமாக இருப்பதற்கு இது ஒரு சுலபமான, அருமையான வழி.

5.உங்கள் உடலின் சமிக்கைகளை சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்

5.உங்கள் உடலின் சமிக்கைகளை சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்

உடற்பயிற்சி செய்வது பெரிய விஷயமல்ல, ஆனால் உங்கள் உடலின் தேவையை புரிந்துகொள்ளாவிட்டால் எல்லாம் வீணாகிவிடும். சாப்பாடு 70%, செயல்பாடு 30% ஆகியவை அடங்கியதே உங்கள் உடல். சரிவர உண்ணுங்கள், நிறைய நீர் அருந்துங்கள். பல சமயங்களில் நமக்கு ஏற்படும் பசி உணர்வு உண்மையில் தண்ணீர் தாகமே ஆகும். ஆரோக்கியமற்ற, அவசியமற்ற உண்ணுதலைத் தடுக்க சிறந்த வழி, அதிகத் தண்ணீர் குடியுங்கள், அந்த ஆரோக்கியமற்ற பலகாரங்களை பார்வைக்குப் படாத இடத்தில் வையுங்கள், அதற்குப் பதிலாக நார்ச்சத்து நிறைந்த உணவை உண்ணுங்கள். இந்தச் சுவாரஸ்யமான, பலனுள்ள வழிகள் நீங்கள் திடமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உதவும் என்று நம்புகிறோம், சற்று நேரம் எடுத்து உங்கள் அனுபவங்களை இங்கே பகிர்ந்துகொள்ளுங்கள்.

சம்பந்தப்பட்ட கட்டுரைகள்