உங்கள் குழந்தையின் எதிர்காலத்தைப் பாதுகாக்க சைல்டு பிளான்ஸ் எவ்வாறு உதவுகின்றன
உங்கள் குழந்தையின் எதிர்காலத்தைப் பாதுகாக்க சைல்டு பிளான்ஸ் எவ்வாறு உதவுகின்றன
குழந்தை காப்பீட்டுத் திட்டம் உங்கள் குழந்தையின் கனவுகளைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், அவர்கள் தேர்ந்தெடுத்த பாதையில் வெற்றிபெற அவர்களுக்கு உதவுவதற்காக உங்களுக்குத் தேவையான நிதிசார்ந்த ஊக்கத்தையும் வழங்குகிறது.
ஒரு பெற்றோராக, உங்கள் குழந்தையின் ஒவ்வொரு தேவையும் போதுமான அளவு பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்வதே உங்கள் முதன்மைப் பொறுப்பாகும். ஒரு மருத்துவராக அல்லது விமானியாக ஆக வேண்டும் அல்லது இசையைக் கற்றுக்கொள்ள வேண்டும் என உங்கள் குழந்தைக்குக் கனவுகள் உள்ளன. கேள்வி என்னவென்றால், உங்கள் குழந்தையின் கனவுகளை நனவாக்குவதற்கான நிதி வசதி உங்களிடம் இருக்கிறதா?
உங்களிடம் இல்லையென்றால், குழந்தை காப்பீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டிய நேரம் இதுவாகும்.
குழந்தை காப்பீடு என்றால் என்ன?
குழந்தை காப்பீட்டுத் திட்டங்கள் என்பது உங்கள் குழந்தையின் எதிர்கால கல்வித் தேவைகளுக்கு கணிசமான நிதியை உருவாக்கும் ஒரு வழியாகும். உயர்கல்விச் செலவுகள் ஒவ்வொரு ஆண்டும் அதிவேகமாக அதிகரித்து வருவதால், கல்விக் கட்டணம், தங்குமிடம், ஸ்டடி மெட்டீரியல்கள் மற்றும் புராஜெக்ட் செலவுகள், ஃபீல்டு செலவுகள் போன்றவற்றிற்காக குறுகிய காலத்தில் அதிக அளவு நிதியைச் சேர்க்க வேண்டிய நிலையைப் பல பெற்றோர்கள் எதிர்கொள்கின்றனர்.
உயர்கல்வியின் அனைத்து அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்வது பெற்றோரின் கடமை, ஆனால் நிதி நெருக்கடி உங்கள் திட்டங்களைத் தடுக்கலாம். தேவையான நிதியைச் சேகரிக்க பிற்காலத்தில் கஷ்டப்படுவதற்குப் பதிலாக, எதிர்காலக் கல்விக்கான செலவுகளை வழங்கக்கூடிய குழந்தை காப்பீட்டு பாலிசியில் முதலீடு செய்வது மிகவும் விவேகமானதாகும் - எனவே நீங்கள் பின்னர் கஷ்டப்பட வேண்டியதில்லை.
குழந்தை காப்பீட்டுத் திட்டத்தில் என்ன அடங்கும்?
- சைல்டு பிளான் உங்கள் குழந்தையின் கல்விக் கனவுகளுக்குத் தேவையான நிதியை வழங்கி அவற்றைப் பாதுகாக்கிறது.
- சரியான கல்வி வழிகாட்டுதல் மற்றும் கருவிகள் இருந்தால், உங்கள் குழந்தை தேர்வுசெய்யும் துறையில் அவரது வாழ்க்கை வளர்ச்சியடையும் - மேலும் சைல்டு பிளான் அவர்களுக்குத் தேவையான கல்வித் தரத்தை வழங்க உதவுகிறது.
- ஒரு பெற்றோராக, அதிகமதிப்பிலான கல்விக் கடன்களை வாங்குவது அல்லது உங்கள் குழந்தையின் எதிர்காலக் கல்விக்குப் பணம் செலுத்த உங்கள் சேமிப்பைப் பயன்படுத்த வேண்டிய தொந்தரவிலிருந்து நீங்கள் விடுபடுகிறீர்கள்.
- உங்கள் குழந்தை 18 வயதை எட்டியவுடன் குழந்தை காப்பீட்டுத் திட்டம் பே-அவுட்டை வழங்கும். இருப்பினும், இதன் முக்கிய நன்மை என்னவென்றால், நீங்கள் அவர்களின் வாழ்க்கையில் இருக்கிறீர்களா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல் அது குழந்தைக்கத் தேவையான பணத்தை வழங்குகிறது. உதாரணமாக, திட்டம் இன்னும் செயல்பாட்டில் இருக்கும்போது துரதிர்ஷ்டவசமாக உங்கள் மரணம் ஏற்பட்டால், காப்பீட்டு நிறுவனம் அனைத்து எதிர்கால பிரீமியங்களையும் நிறுத்திவிட்டு, காப்பீட்டு பாலிசியைச் செயல்பாட்டிலேயே வைத்திருக்கும். பே-அவுட் மற்றும் பிற தொடர்புடைய அனைத்து சலுகைகளும் திட்டமிட்டபடி வழங்கப்படும். இந்த வழியில், நீங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சைல்டு பிளான் உங்கள் குழந்தையின் வாழ்க்கையைப் பாதுகாக்கிறது.
- இந்தியாவில் சிறந்த குழந்தை காப்பீட்டுத் திட்டங்கள் முதிர்வு மற்றும் இறப்பு சலுகைகள் இரண்டையும் உள்ளடக்கியது, அவற்றுடன் பிரீமியம் தள்ளுபடி வசதி, விரைவான மற்றும் நெகிழ்வான பே-அவுட் விருப்பங்கள் மற்றும் குறைந்த விலை பிரீமியங்களும் கிடைக்கின்றன. நீங்கள் விரும்பினால் குறிப்பிட்ட இடைவெளியில் பே-அவுட்டைப் பெற முடியும். மதிக்கத்தகுந்த காப்பீட்டு நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்து, ஆன்லைன் பிரீமியம் கால்குலேட்டரைப் பயன்படுத்தி திட்டத்திற்கு நீங்கள் செலுத்த வேண்டிய வருடாந்திர பிரீமியங்களை தீர்மானிக்கவும்.
- சில குழந்தை காப்பீட்டு பாலிசிகள் சந்தையுடன் இணைக்கப்பட்ட திட்டங்களாகும். கடன் மற்றும் ஈக்விட்டியில் முதலீடு செய்வது சந்தை நிலைமைகளுக்கு ஏற்ப முதலீடு வளர்வதை உறுதி செய்கிறது, ஆனால் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்வது (அதாவது, குழந்தை மிகவும் சிறிய வயதாக இருக்கும்போது பாலிசியை எடுப்பது) பணம் மேலும் வளர உதவும்.
- சைல்டு பிளானில் உள்ள பாலிசித் தொகை, கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே பணத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று கட்டுப்படுத்தாது. உதாரணமாக, ஒரு வணிக யோசனைக்கு நிதி ஏற்பாடு செய்வதற்கும் அவர்கள் அந்தப் பணத்தைப் பயன்படுத்தலாம்.