ஊரடங்கு காலத்தில் ஆரோக்கியமாக இருக்க அத்தியாவசிய குறிப்புகள் | எஸ்.பி.ஐ லைஃப் இன்சூரன்ஸ்
ஊரடங்கு காலத்தில் ஆரோக்கியமாக இருப்பது எப்படி
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு, நம் அனைவரையும் வீட்டிலேயே வைத்திருக்க வைத்துள்ளது. வீட்டிலேயே இருப்பதால், வழக்கமான நடைப்பயிற்சி, ஜிம், யோகா வகுப்பு அல்லது நடன வகுப்புக்கு போன்றவைக்கு நீங்கள் செல்ல முடியாது. ஊரடங்குக் காலத்தில் ஆரோக்கியமாக இருப்பது எப்படி என்று யோசிக்கிறீர்களா? உங்களுக்குத் தேவையானது சரியான திட்டம் மற்றும் ஆரோக்கியமான வழக்கம் மட்டுமே, நீங்களாகவே இதனைச் செய்து கொள்ளலாம். தனிமைப்படுத்தலின்போது ஆரோக்கியமாக இருக்க சில உதவிக்குறிப்புகளை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்-
உடற்பயிற்சி காலஅட்டவணையைத் தயாரியுங்கள்
உடற்பயிற்சி செய்வதற்கான காலஅட்டவணையைத் தயாரிப்பது தனிமைப்படுத்தலுக்கான மிக முக்கியமான ஆரோக்கிய குறிப்புகளில் ஒன்றாகும். உடற்பயிற்சி செய்வதற்கு ஜிம் அல்லது பூங்காவிற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. நீங்கள் உங்கள் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்யலாம். வீட்டிலேயே உடற்பயிற்சி செய்வதில் அதிக பலனைப் பெற இணையத்தில் கிடைக்கும் பல்வேறு செயலிகள் மற்றும் உடற்பயிற்சி வீடியோக்களைப் பார்க்கலாம்.
ஆரோக்கியமான உணவைப் பின்பற்றுங்கள்
நீங்கள் சுய தனிமைப்படுத்தலில் ஆரோக்கியத்திற்கான ஆலோசனையைத் தேடுகிறீர்களானால் இது மிக முக்கியமான விஷயமாகும். சரியான நேரத்தில் ஆரோக்கியமான உணவை உட்கொள்வது மிகவும் முக்கியம், குறிப்பாக நீங்கள் வீட்டில் இருக்கும்போது. ஒவ்வொரு உணவுப் பிரிவைச் சேர்ந்த உணவுப் பொருட்களைக் கொண்ட ஆரோக்கியமான சமைத்த உணவை நீங்கள் சாப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஜங்க் உணவுகளை சாப்பிடுவதையோ அல்லது சிப்ஸ் மற்றும் குளிர்பானங்களை உண்டு வாழ்வதையோ தவிர்க்கவும். இவை ஆரோக்கியமற்ற கொழுப்புகள் மற்றும் சர்க்கரை நிரம்பியிருப்பது மட்டுமல்லாமல், அவை உங்களைச் சோர்வடையச் செய்து சோம்பலாக்குகின்றன. நிபுணர்கள் சொல்வதைக் கடைப்பிடிக்கவும் - ராஜாவைப் போல காலை உணவு, இளவரசனைப் போல மதிய உணவு, பிச்சைக்காரனைப் போல இரவு உணவு சாப்பிடுங்கள். உணவுக்கு இடையில் ஆரோக்கியமான சீட்கள் மற்றும் பழங்களை நீங்கள் சிற்றுண்டியாக சாப்பிடலாம்.
நீங்கள் வீட்டிலிருந்து வேலை செய்தால் இடையில் சிறிய இடைவெளிகளை எடுத்துக் கொள்ளுங்கள்
அலுவலகத்தில், நீங்கள் ஒரு காபி இடைவேளை, புகைபிடிக்கும் இடைவேளை அல்லது ஸ்ட்ரெட்ச் செய்வதற்காக எழுந்து செல்வீர்கள். இருப்பினும், வீட்டில் இவை அனைத்தையும் எளிதாக அணுக முடியும் என்பதால், நீங்கள் இடைவேளை இல்லாமல் மணிக்கணக்கில் அமர்ந்திருக்கக்கூடும். மணிக்கணக்கில் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது உங்கள் உடலை விறைப்பாக்கும். இது உங்கள் மூட்டுகள், முதுகு மற்றும் முதுகெலும்பில் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். எனவே, நீங்கள் சிறிது நேரம் நடக்க இடைவெளி எடுத்துக்கொண்டு பென்டிங் மற்றும் ஸ்ட்ரெட்சிங் பயிற்சிகளைச் செய்ய வேண்டும். நீங்கள் சிறிது நேரம் டிவி பார்க்கலாம், ஒரு நண்பருடன் பேசலாம் அல்லது ஒரு பொழுதுபோக்கில் ஈடுபடலாம். இந்த இடைவேளைகளின் நேரத்தையும் கால அளவையும் திட்டமிடுங்கள், இடைவேளைகளை நீட்டிக்க வேண்டாம்.
போதுமான தூக்கம் பெறுங்கள்
உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியையும் வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்துவதிலும், உங்களை உச்சபட்ச செயல்திறனில் வைத்திருப்பதிலும் தூக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. இருப்பினும், இதுபோன்ற காலங்களில், இரவு வெகு நேரம் வரை தொலைக்காட்சித் தொடர்களைத் தொடர்ச்சியாகப் பார்ப்பது, நண்பர்களுடன் பேசுவது அல்லது விளையாடுவது போன்றவை சாதாரணமாக நடக்கின்றன. இது உங்கள் தூக்க நேரத்தைக் குறைப்பது மட்டுமல்லாமல், அடுத்த நாள் நீங்கள் சோர்வாகவும் ஆற்றல் இழந்தவராகவும் எழுவீர்கள். எனவே, நீங்கள் சரியான 8 மணி நேரத் தூக்கத்தைப் பெறும் வகையில், தூங்கச் செல்வதற்கான ஒரு நேரத்தை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்.
நீங்கள் முன்பு போல் சுறுசுறுப்பாக இல்லாததால், உங்கள் உடலை இன்னும் அதிகமாகக் கவனிக்க வேண்டிய நேரம் இது. வீட்டிலேயே இருப்பதற்கான இந்த வழிகாட்டுதலைப் பின்பற்றுங்கள், இந்த ஊரடங்கிலிருந்து நீங்கள் ஆரோக்கியமாகவும் நலமாகவும் வெளிவருவீர்கள்.
கொரோனா வைரஸ் பற்றியும், அதைத் தவிர்ப்பது எப்படி என்பது குறித்தும் மேலும் படிக்கவும்.