மளிகைக் கடைக்குச் செல்லும்போது செலவைக் குறைப்பது எப்படி
மளிகைக் கடைக்குச் செல்லும்போது செலவைக் குறைப்பது எப்படி
மளிகைப் பொருட்களை வாங்குவது நமது அன்றாட வாழ்வின் அத்தியாவசியப் பகுதி. மளிகைச் செலவுக்கான பணத்தை கவனமாக ஒதுக்கி பட்ஜெட்டுக்கு ஏற்ற நடைமுறைகளைப் பின்பற்றினால் மளிகை ஷாப்பிங் செலவை குறைக்க முடியும். மளிகை ஷாப்பிங் செலவை குறைப்பது எப்படி என்ற கேள்விக்கு இதோ சில சிறந்த குறிப்புகள்.
மளிகைப் பொருட்கள் வாங்கும்போது பணத்தை எவ்வாறு சேமிப்பது என்பது குறித்த உங்கள் கேள்விக்கான பதிலாக இங்கே சிறந்த குறிப்புகள் உள்ளன.
1. கீழே மற்றும் மேல் அலமாரிகளில் உள்ள மலிவான பொருட்களைத் தேர்ந்தெடுக்கவும்.
மளிகைக் கடைகள் பயன்படுத்தும் ஒரு புத்திசாலித்தனமான தந்திரம் என்னவென்றால், அதிக விலை கொண்ட பொருட்களை நடுத்தர அலமாரிகளில் வைப்பது, அவை கண்ணுக்குத் தெரியும் அளவுக்கு இருக்கும். நீங்கள் பார்வைக்கு எட்டக்கூடிய பொருட்களை ஆராய்ந்து எடுக்க முனைகிறீர்கள். கீழே மற்றும் மேல் அலமாரிகளில் உள்ள பொருட்களை ஆய்வு செய்ய நீங்கள் குனிந்து அல்லது நீட்டி, கையை நீட்டி அரிதாகவே அக்கறை கொள்வீர்கள். மளிகைக் கடைகள் எங்கள் இந்த பழக்கத்தை தங்கள் நன்மைக்காகப் பயன்படுத்திக் கொள்கின்றன, அதே நேரத்தில் குறைந்த விலையில் உள்ள பொருட்கள் கீழ் அல்லது மேல் அலமாரிகளில் வைக்கப்படுகின்றன. மேலும், நடுத்தர அளவிலான அலமாரிகளில் உள்ள பொருட்கள் பெரும்பாலும் பெரியதாக இருக்கும்; எனவே, அதிக விலை. அடுத்த முறை நீங்கள் மளிகைப் பொருட்களை வாங்கச் செல்லும்போது, கீழ் மற்றும் மேல் அலமாரிகளைப் பார்த்து, நியாயமான விலை வரம்பிற்குள் மற்றும் பொருத்தமான அளவிலான பொதிகளில் பொருட்களைக் கண்டறிந்து மளிகைப் பொருட்களில் பணத்தைச் சேமிக்கவும்.
2. இலவச சேம்பிள்களைக் கண்டு மயங்கிவிடாதீர்
புதிதாக வந்துள்ள அல்லது புது அறிமுக உணவுப் பொருட்களின் இலவச சேம்பிள்களை சுவைத்துப் பார்ப்பது பாதிப்பற்றது போலத் தோன்றலாம். விற்பனை ஊழியர்கள் புனைகை பூத்த இன்முகத்துடன் உணவுப் பொருட்களின் இலவச சேம்பிள்களை வழங்குவது, அந்தத் தயாரிப்பு மீது உங்கள் அபிமானத்தைப் பெறுவதற்கான ஒரு தேர்ந்த வழிமுறை. சேம்பிளை பயன்படுத்திய பின் உங்களுக்கு அந்தப் பொருள் பிடித்திருந்தால், இயல்பாகவே நீங்கள் அதை அப்போது அல்லது அடுத்த முறை வாங்க நினைக்கலாம். உணவுப் பொருட்களின் இலவச சேம்பிள்கள், வாடிக்கையாளர்களைக் கவர்ந்து அதை வாங்க வைப்பதற்கு ஒரு வழி. எனவே, இலவச சேம்பிள்களைத் தவிர்த்து அவசியமின்றி அதிகப் பணம் செலவழிக்காமல் பார்த்துக்கொள்வது மளிகைக் கடையில் செலவைக் குறைக்க ஒரு சிறந்த வழி.
3. தொகுப்புச் சலுகைகளைத் தவிர்ப்பீர்
தொகுப்புச் சலுகைகளில், பல பொருட்களைச் சேர்த்து ஒன்றாக விற்பார்கள். தொகுப்புப் பொருட்களின் விலை தனித்தனிப் பொருட்களைக் காட்டிலும் குறைவாக இருக்கும். இது ஒரு புத்திசாலித்தனமான தெரிவு போல் தோன்றலாம், ஏனென்றால் தனித்தனிப் பொருட்களாக வாங்கி அதிக விலை கொடுப்பதற்குப் பதிலாக தொகுப்புப் பொருட்களை வாங்கி குறைந்த விலை கொடுக்கிறீர்கள். இதேபோல், 'ஒன்று வாங்கினால் ஒன்றுக்குத் தள்ளுபடி' அல்லது 'ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்' போன்ற சலுகைகள் உங்களைக் கவர்ந்து தேவையில்லாத பொருட்களை வாங்கத் தூண்டலாம். உண்மை என்னவென்றால், கடைகள் பொதுவாக தங்களுக்குக் குறைவாக விற்பனையாகும் பொருட்களை இத்தகு சலுகைகள் மூலம் வழங்கி அதை வாடிக்கையாளர்களுக்குக் கவர்ச்சியாக ஆக்குவார்கள். மேலும், இந்தச் சலுகைகள் உங்களுக்குத் தேவையில்லாத பொருட்களுக்குச் செலவழிக்கத் தூண்டலாம். இதுபோன்ற கவர்ச்சிச் சலுகைகள் மற்றும் தள்ளுபடி விலை பொருட்களை வாங்கும் முன் நன்கு கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்.
4. உங்கள் மளிகைப் பட்டியலை பின்பற்றுவீர்
மளிகைச் செலவைக் குறைக்க ஒரு மிக நேரடியான, சிறந்த தீர்வு என்னவென்றால், மளிகைப் பட்டியல் ஒன்றை உருவாக்கி அதைப் பின்பற்றுவது. கடைக்குச் செல்லும் முன், நீங்கள் வாங்க வேண்டிய அத்தியாவசியப் பொருட்களைப் பட்டியலிடுங்கள். இது மொத்தச் செலவு குறித்து ஒரு மதிப்பீட்டை வழங்கும். இந்தப் பட்டியலை கறாராகப் பின்பற்றுங்கள். திடீர் முடிவெடுத்து அல்லது உணர்ச்சிவசப்பட்டு பட்டியலில் இல்லாத ஒன்றை வாங்காதீர். திட்டமிடாத சிலவற்றை வாங்கினால் கூட, அந்தப் பொருள் உங்களுக்குத் தேவையா என்று யோசித்துப் பாருங்கள். திட்டமிட்டு ஷாப்பிங் செய்வது, கடையில் உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தி குறிக்கோளின்றி பத்திகள் வழியாகத் திரிவதைத் தவிர்க்க உதவும்.
5. ஷாப்பிங் கூடையில் உள்ள பொருட்களை கவனத்தில் வைப்பீர்
ஷாப்பிங் கூடையில் பொருட்களை அள்ளிப் போடாதீர். ஷாப்பிங் கூடையில் பொருட்களைப் போடப் போட, மனக்கணக்கில் விலைகளைக் கூட்டிக் கொள்ளுங்கள். இதன் மூலம், ஒவ்வொரு பொருளும் கூட்டுகிற செலவை கண்காணிப்பில் வைக்க முடியும். இதன் மூலம், புத்திசாலித்தனமாக ஷாப்பிங் செய்யும் சூழல் ஏற்படும். மக்கள் பெரும்பாலும் ஷாப்பிங் சமயத்தில் மொத்த மளிகைச் செலவைக் கணக்கிடாமல், பிறகு பில்லிங் கவுண்டரில் மொத்தச் செலவைக் கண்டு அதிர்ச்சி அடைவார்கள். இந்தக் குறிப்பு, உங்கள் பட்ஜெட்டுக்குள் ஷாப்பிங் செய்து வரம்பைத் தாண்டுவதைத் தவிர்க்க உதவும். எனவே, புத்திசாலித்தனமாக இருந்து பத்திகள் வழியே செல்லும்போது செலவைக் கணக்கிட்டபடி இருந்தால் மளிகைச் செலவைக் குறைக்கலாம்.
6. ரொக்கப் பணம் செலுத்துவீர்
கார்டு, ஆன்லைன் பேமென்ட் ஆகியவை சௌகரியமாக இருக்கும், விற்பனையாளர்களும் அதை ஊக்குவிப்பார்கள், ஆனால் ரொக்கப் பணம் செலுத்தி வாங்குவது விவேகமாக ஷாப்பிங் செய்ய உதவும். நீங்கள் ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை எடுத்துச் செல்லும்போது, வரம்பைத் தாண்டாமலும் பணப் பற்றாக்குறை ஏற்படாமலும் பார்த்துக்கொள்வீர். உங்களிடம் எவ்வளவு உள்ளது, எவ்வளவு அதிகபட்சம் செலவழிக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியும். எனவே, மளிகைக் கடையில் செலவைக் குறைக்க ரொக்கப் பணம் எடுத்துச் செல்லுங்கள்.
மளிகை ஷாப்பிங்கிற்கு இந்தப் புத்திசாலித்தனமான குறிப்புகளைப் பின்பற்றுவது, உங்கள் செலவைக் குறைத்து சாதுரியமாக பட்ஜெட்டை சமாளிக்க உதவும். ஷாப்பிங் செய்து மகிழுங்கள்!