மைக்ரோ டெர்ம் அஷ்யூரன்ஸ் ப்ளான்/ எஸ்பிஐ லைஃப் க்ராமீன் சூப்பர் சுரக்க்ஷா
close

By pursuing your navigation on our website, you allow us to place cookies on your device. These cookies are set in order to secure your browsing, improve your user experience and enable us to compile statistics  For further information, please view our "privacy policy"

SBI Logo

Join Us

Tool Free 1800 22 9090

எஸ்பிஐ லைஃப் - கிராமீன் சூப்பர் சுரக்‌ஷா

UIN: 111N039V04

திட்ட கோடு : 96

எஸ்பிஐ லைஃப் - கிராமீன் சூப்பர் சுரக்‌ஷா

ஏற்கத்தக்க பிரீமியத்தில் வாழ்க்கையில் அதிகம்
பெற்று பயனடைந்து அனுபவியுங்கள்.

ஒரு குரூப் நான் லிங்க்டு, நான்-பார்ட்டிசிபேட்டிங், ப்யூர் ரிஸ்க் பிரீமியம், மைக்ரோ லைஃப் இன்ஷ்யூரன்ஸ் திட்டம்


குறைவான பிரீமியத்துடன் உங்கள் குழு உறுப்பினர்களுக்கு வாழ்நாள் காப்பீட்டுப் பாதுகாப்பை வழங்க ஆர்வமுடன் உள்ளீர்களா?

குறைவான பிரீமியத்துடன் உங்கள் குழு உறுப்பினர்களுக்கு காப்பீட்டுப் பாதுகாப்பை இப்போது எஸ்பிஐ லைஃப் - கிராமீன் சூப்பர் சுரக்‌ஷாவுடன் அளிக்கலாம். ஏதேனும் நிகழ்வின்போது, உங்கள் குழு உறுப்பினர்களுடைய குடும்பங்களின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்த திட்டம் உதவுகிறது.

எஸ்பிஐ லைஃப் – கிராமீன் சூப்பர் சுரக்‌ஷா திட்டம் வழங்கும் சலுகைகள் –
  • பாதுகாப்பு – ஏதேனும் நிகழ்வின்போது உங்கள் உறுப்பினர்களைப் பாதுகாக்கிறது மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு பாதுகாப்பளிக்கிறது
  • வசதி – பிரீமியம் செலுத்தும் முறையை தேர்வு செய்தல்
  • எளிமையானது – எளிதாக விண்ணப்பிக்கும் செயல்முறை
  • கட்டுப்படியானது – சரியான பிரீமியங்கள்

உங்கள் குழு உறுப்பினர்களுக்கு பாதுகாப்பை பரிசாக வழங்குங்கள்.

சிறப்புக்கூறுகள்

எஸ்பிஐ லைஃப் - கிராமீன் சூப்பர் சுரக்‌ஷா

மைக்ரோ இன்சூரன்ஸ் திட்டம், குரூப் மைக்ரோ இன்சூரன்ஸ் திட்டம், எஸ்பிஐ லைஃப் – கிராமீன் சூப்பர் சுரக்‌ஷா, குரூப் டெர்ம் அஷுரன்ஸ்

சிறப்பம்சங்கள்

  • உங்கள் குழு உறுப்பினர்களுக்கான டெர்ம் இன்ஷ்யூரன்ஸ்
  • சிங்கிள் அல்லது ரெகுலர் வருடாந்திர பிரீமியம் செலுத்தும் வகைக்கான விருப்பத்தேர்வு
  • மருத்துவ ஆய்வு எதுவும் தேவையில்லை
  • காலவரை காப்பு
  • 3 மாதங்கள் முதல் 60 மாதங்கள் சிங்கிள் பிரீமியம் பாலிசிகளுக்காக (1 மாதத்தின் மடங்குகளில்)
  • 2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள்  ரெகுலர் பிரீமியம் பாலிசிகளுக்காக (1 ஆண்டின் மடங்குகளில்)
 

அனுகூலங்கள்


பாதுகாப்பு
  • ஏதேனும் நிகழ்வின்போது உங்கள் குழு உறுப்பினர்களின் குடும்பங்களின் நிதி தேவைகளைப் பாதுகாத்திடுங்கள்

வசதி
  • உங்கள் உறுப்பினர்களுக்கு எவ்வளவு காப்பீடு  தொகையை வழங்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வு செய்து கொள்ளலாம்
  • சிங்கிள் பிரீமியம் அல்லது ஆண்டு பிரீமியம் செலுத்தும் முறையை தேர்வு செய்யும் வசதி

எளிமை
  • மருத்துவப் பரிசோதனை தேவையில்லை, உடல் நலன் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் திருப்திகரமாக இருந்தால் போதுமானது

கட்டுப்படியானது
  • குறைவான பிரீமியங்களில் திட்டப் பலன்கள்
 

வரிச்சலுகைகளை பெற்று பயனடையுங்கள்*

இறப்பு பலன்கள் :

பாலிசி காலவரையின்போது ஆயுள் காப்பீடு செய்துகொண்டவரின் இறப்பு நிகழ்ந்துவிடும் நிலையில், பாலிசி அமலில் இருக்கும்பட்சத்தில், தேர்வு செய்யப்பட்டபடி காப்பீட்டுத்தொகை செலுத்தத்தக்கதாகும்


முதிர்வுநிலை பலன்கள்:

இது ப்யூர் ரிஸ்க் பிரீமியம் திட்டம் என்பதால், இந்தத் திட்டத்தின் கீழ் முதிர்வுநிலை பலன் ஏதும் அளிக்கப்பட மாட்டாது.

பிற தகவல்
  • சரண்டர்
    ஒப்புவிப்பு பலன் மாஸ்டர் பாலிசிதாரரின் அல்லது காப்பீடு செய்துகொண்ட தனிநபரின் வேண்டுகோளின்  பேரிலோ மட்டுமே 12 மாதங்கள் நிறைவுற்றதன் பிறகு, பாலிசி அமலில் இருக்கும் பட்சத்தில் அளிக்கப்படும். ஒப்புவிப்பு மதிப்பு  பாலிசி காலவரை 13 மாதங்கள் அல்லது அதிகம் கொண்டு வழங்கப்பட்ட சிங்கிள் பிரீமியம் பாலிசிகள் என்னும் நிலையில் அளிக்கத்தக்கதாகும்.
  • சலுகை காலம்
    ரெகுலர் பிரீமியம் பாலிசிகளுக்காக,  பிரீமியம் செலுத்த வேண்டிய கெடு தேதியிலிருந்து 30 நாட்கள் சலுகை காலம்  அனுமதிக்கப்படுகிறது.
  • புதுப்பித்தல்
    ரெகுலர் பிரீமியம் செலுத்தும் வகை என்னும் நிலையில், குழும உறுப்பினர் பாலிசி காலவரை காலாவதி ஆகும் முன்பாக உறுப்பினரின் ஆயுள் காப்பு புதுப்பிப்பதற்கு தேர்வு செய்திருப்பின்,  குழு ஒப்புதல் வழங்கிய காப்புறுதி விண்ணப்ப கணிப்புக்கு உட்பட்டு மற்றும் பொருந்தும் படிக்கு வட்டியுடன்..
  • பரிசீலனைக் காலம் (ஃப்ரீலுக் பீரியட்)
    குழும உறுப்பினர் (தன்னார்வ திட்டங்களின் கீழ்)/மாஸ்டர் பாலிசிதாரர் காப்பீட்டு சான்றிதழின்/மாஸ்டர் பாலிசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுடன் திருப்தியடையவில்லை  என்ற நிலையில், மற்றும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய விரும்பினால், அவர் டிஸ்டன்ஸ் மார்க்கெட்டிங் தவிர எந்த சேனல் மூலமாக பெறப்பட்ட பாலிசிகளுக்காக மற்றும் எலெக்ட்ரானிக் பாலிசிகளுக்காக காப்பீட்டு சான்றிதழ்/மாஸ்டர் பாலிசி பெற்ற 15 நாட்களுக்குள்ளாக மற்றும் டிஸ்டன்ஸ் மார்க்கெட்டிங் மூலம் பெறப்பட்ட மற்றும் எலெக்ட்ரானிக் பாலிசிகளுக்காக காப்பீட்டு சான்றிதழ்/மாஸ்டர் பாலிசி பெற்ற 15 நாட்களுக்குள்ளாக காப்பீட்டு சான்றிதழ்/மாஸ்டர் பாலிசி பெற்ற 30 நாட்களுக்குள்ளாக ரத்து செய்வதற்கான  காரணங்களை குறிப்பிட்டு ஒரு  கடிதத்துடன் நிறுவனத்திற்கு பாலிசியை திருப்பி அனுப்பலாம். செலுத்தப்பட்ட பிரீமியம் காப்பீட்டாளரால்  மருத்துவ பரிசோதனைக்காக  செய்யப்பட்ட செலவினங்கள், ஏதேனும் இருப்பின், முத்திரை வரி செலவு மற்றும் பொருந்தும் வரிகள் ஏதேனும் இருப்பின் கழித்துக்கொண்டு திருப்பி அளிக்கப்படும்.  உறப்பினர்களைப் பொறுத்தவரை காப்பு காலத்திற்கான விகிதாச்சார ரிஸ்க் பிரீமியம் கூட கழித்துக்கொள்ளப்படும்.
  • கடன் வசதி
    இந்தத் திட்டத்தின் கீழ், கடன் பெறும் வசதி இல்லை
    • விலக்குகள் தற்கொலை கோருரிமை ஏற்பாடுகள்
      உறுப்பினர் பாலிசி கீழ் ரிஸ்க் துவங்கிய/ புதுப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து 12 மாதங்களுக்குள்ளாக, காப்பீடு செய்துகொண்ட குழும உறுப்பினர் தற்கொலை செய்து கொண்டால், இறந்துபோன குழும  உறுப்பினருக்கான இறப்பு பலன்கள் அளிக்கப்பட மாட்டாது. இத்தகைய நிலையில், உறுப்பினருக்கான பாலிசி கீழ் இறப்பு தேதி வரை செலுத்தப்பட்ட மொத்த பிரீமியத்தின் 80% (பொருந்தும் வரிகள் போக)  அல்லது இறப்பு தேதி அன்று உள்ள ஒப்புவிப்பு மதிப்பு  (ஏதேனும் இருப்பின்), இவற்றுள் அதிகமானதை,  உறுப்பினர் பாலிசி அமலில் இருக்கும் பட்சத்தில், உறுப்பினரின் நியமனதாரருக்கு அல்லது பயனாளிக்கு திருப்பி அளிக்கப்படும்.

எஸ்பிஐ லைஃப் – கிராமீன் சூப்பர் சுரக்‌ஷா-ன் இடர் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்த கூடுதல் விவரங்களுக்குப் பின்வரும் ஆவணங்களைக் கவனமாகப் படிக்கவும். 

null
**வயது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளவை யாவும் உங்களின் கடந்த பிறந்தநாளின் அடிப்படையிலானதாகும்.
^எஸ்பிஐ லைஃப் குரூப் மைக்ரோ இன்ஷ்யூரன்ஸ் தயாரிப்புகள் அனைத்துக்கும் காப்பீடு மொத்த தொகை, காப்பீடு செய்யும் நபர் ஒருவருக்கு அதிகபட்சம் ` 2,00,000 ஆகும் (குழும உறுப்பினர்). 

NW/96/ver1/05/22/WEB/TAM

*வரிச்சலுகைகள் :
இந்தியாவில் பொருந்தும் வருமான வரிச் சட்டங்களின் படி, அவ்வப்போது மாறுவதற்கு உட்பட்டு வருமான வரிச் சலுகைகளுக்கு தகுதி ஆகும். விபரங்களுக்கு உங்கள் வரி ஆலோசகருடன் தொடர்பு கொள்ளுங்கள்.

இடர் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றிய மேலதிக விபரங்களுக்கு விற்பனையை முடிக்கும் முன்பாக தயவு செய்து விற்பனை சிற்றேட்டைக் கவனமாகப் படிக்கவும்.