எம்ப்ளாயீ ரிட்டையர்மெண்ட் பெனிபிஃட்ஸ் இன்ஷ்யூரன்ஸ்/ கேப் அஷ்யூர் கோல்ட்
SBI Logo

Join Us

Tool Free 1800 22 9090

எஸ்பிஐ லைஃப் - கேப்அஷ்யூர் கோல்டு

UIN: 111N091V03

புராடக்ட் கோடு : 73

எஸ்பிஐ லைஃப் - கேப்அஷ்யூர் கோல்டு

"எங்களுடைய அர்ப்பணிப்பு மிக்க நிதி நிபுணர்களின்
உதவி கொண்டு உங்கள் பணியாளர்கள்
நலனை பாதுகாத்திடுங்கள்."

  • பணியாளர் பலன் தீர்வுகள்
  • தனிப்பயனாக்கப்பட்ட சேவைகள்
  • அர்ப்பணிக்கப்பட்ட சேவைக் குழு

ஒரு நான்-லிங்க்டு, நான்-பார்ட்டிசிபேட்டிங், குரூப் பேஸ்டு ஃபண்ட், லைஃப் இன்ஷ்யூரன்ஸ் புராடக்ட்.

 

உங்கள் பணியாளர்களுக்கு நீங்கள் ஃபண்டு மேலாண்மையின் தொல்லைகளை நீக்கும் அதே வேளையில் உறுதியான வருவாய்களுடன் குழும காப்பீடு வழங்க விரும்புகிறீர்களா?

 

எஸ்பிஐ லைஃப் - கேப்அஷ்யூர் கோல்டு ப்ளான் என்பது முதலாளிகள்/ அறங்காவலர்கள்/ மாநில அரசுகள்/ மத்திய அரசு/ பொதுத்துறை நிறுவனங்கள் தங்களுடைய பணியாளர்களுக்கு பணிக்கொடை, விடுப்பிற்கு ஈடான பணம் பெறுதல், மூப்படைவு பலன், ஓய்வுக்குப் பிறகான மருத்துவ பலன் திட்டம் (PRMBS) ஓய்வுக்கால பலன் திட்டங்கள் மற்றும் இதர சேமிப்பு திட்டத்தின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள உதவுகிறது.

 

இந்தத் திட்டம் இவற்றை வழங்குகிறது -

  • பாதுகாப்பு - தொழில்ரீதியான மற்றும் தொகுப்பாக்கப்பட்ட ஃபண்டு மேலாண்மை மூலம் நிலையான வருவாய்
  • நம்பகத்தன்மை - அர்ப்பணிக்கப்பட்ட சேவைக் குழு
  • நெகிழ்வுத்தன்மை - திட்ட விதிமுறைகளின் விரிவான அணிவரிசையை நிர்வகிக்கலாம்
 

உங்களுடைய பணியாளர்களின் பொதுநலம் மற்றும் பொருளாதார எதிர்காலத்தை பாதுகாத்திடுங்கள்.

சிறப்புக்கூறுகள்

எஸ்பிஐ லைஃப் - கேப்அஷ்யூர் கோல்டு

ஒரு நான்-லிங்க்டு, நான்-பார்டிசிபேட்டிங், குரூப் சேவிங்ஸ் இன்ஷ்யூரன்ஸ் திட்டம்

சிறப்பம்சங்கள்

  • பணியாளர் பலன்கள் திட்டங்களுக்காக அனுபவமிக்க மற்றும் தொழில்ரீதியான நிதி மேலாண்மை
  • ஓர் ஒற்றை வழி தொடர்பாக அர்ப்பணிக்கப்பட்ட சேவைக் குழு
  • திட்ட விதிமுறைகளின் விரிவான அணிவரிசை; வரையறுக்கப்பட்ட பலன்கள், வரையறுக்கப்பட்ட பங்களிப்புகள், அல்லது இரண்டின் கலவையான கலப்பு
  • பன்மடங்கு பிரீமியம் செலுத்தும் காலஇடைவெளி

அனுகூலங்கள்

பாதுகாப்பு
  • உங்கள் பங்களிப்புகள் மீது நிலையான வருவாய்
நம்பகத்தன்மை
  • உங்களுடைய செயல்பாட்டுத் தேவைகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சேவைகளை வழங்குதல்
நெகிழ்வுத்தன்மை
  • உங்களுடைய வசதிக்கேற்ப பிரீமியம் செலுத்தும் காலஇடைவெளி
 

வரிப் பலன்களைப் பெறுங்கள்*

திட்ட பலன்:

திட்ட விதிமுறைகளைப் பொறுத்து, இறப்பு, ஓய்வு, இராஜினாமா, விலகிக்கொள்ளல் அல்லது இதர வழியில் வெளியேறுதல் போன்ற நிகழ்வில் பலன்கள் செலுத்தப்படும். ஓய்வு பெற்ற பிறகான மருத்துவப் பலன் திட்டங்கள் என்னும் நிலையில் திட்ட விதிமுறைகள் படி வரையறுக்கப்பட்ட நிகழ்வு நிகழும்போது, ஓய்வுபெற்றவர்களுக்கு மருத்துவ பலன்கள் அளிக்கப்படுகிறது. இத்தகைய பலன்கள் மாஸ்டர் பாலிசிதாரரின் கணக்கிலிருந்து அல்லது உறுப்பினரின் கணக்கிலிருந்து பொருந்தும் வகையில் பாலிசி கணக்கில் நிதியின் கிடைக்கும் தன்மையைப் பொறுத்து அளிக்கப்படும்.

காப்பீட்டு பலன் :

உறுப்பினரின் இறப்பு என்னும் நிலையில், மாஸ்டர் பாலிசிதாரரின் அறிவுரைப்படி, காப்பீட்டுத்தொகை நியமனதாரருக்கு அளிக்கப்படும். பணிக்கொடை, விடுப்பிற்கு ஈடான பணம், மூப்படைவு பலன், ஓய்வு பெற்ற பிந்தைய மருத்துவப் பலன் திட்டங்கள் (PRMBS) மற்றும் இதர சேமிப்புத் திட்டங்களுக்கு காப்பீட்டுப் பாதுகாப்பு கட்டாயமாகும். இத்தகைய பலன்கள் எஸ்பிஐ லைஃப்-ஆல் அளிக்கப்படும்.

எஸ்பிஐ லைஃப் - கேப்அஷ்யூர் கோல்டு-ன் இடர் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றிய விவரங்களை மேலும் அறிந்துகொள்ள கீழ்க்கண்ட ஆவணங்களைக் கவனமாகப் படிக்கவும்.

null

73/ver1/08/24/WEB/TAM

இடர் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றிய அதிக விபரங்களுக்கு விற்பனையை முடிக்கும் முன்பாக தயவு செய்து விற்பனை சிற்றேட்டை கவனமாகப் படிக்கவும்.

*வரிச்சலுகைகள்:
வரிச் சலுகைகள் வருமான வரி சட்டங்ககள் பிரகாரம் கிடைப்பதால் அவை காலந்தோறும் மாற்றங்களுக்கு உட்பட்டவையாக இருக்கும். விபரங்களுக்கு உங்கள் வரி ஆலோசகருடன் தொடர்பு கொள்ளுங்கள்.

நீங்கள் இந்தியாவில் பொருந்தும் வருமான வரிச் சட்டங்களின்படி, அவ்வப்போது மாறுவதற்கு உட்பட்டு வருமான வரிச் சலுகைகளுக்கு தகுதி உடையவர். மேலும் விவரங்களுக்கு, இங்கே கிளிக் செய்யவும். விவரங்களுக்கு உங்கள் வரி ஆலோசகரைத் தொடர்பு கொள்ளவும்.