யூனிட் லிங்க்ட் குரூப் இன்ஷ்யூரன்ஸ் ப்ளான்/ கல்யாண் யூலிப் ப்ளஸ்- எஸ்பிஐ லைஃப்
close

By pursuing your navigation on our website, you allow us to place cookies on your device. These cookies are set in order to secure your browsing, improve your user experience and enable us to compile statistics  For further information, please view our "privacy policy"

SBI Logo

Join Us

Tool Free 1800 22 9090

எஸ்பிஐ லைஃப் - கல்யாண் யுஎல்ஐபி பிளஸ்

UIN: 111L079V02

null

அக்கறை, வெளிப்படைத்தன்மை மற்றும்வளைந்து கொடுக்கும் தன்மை!

 • சந்தையுடன் தொடர்புடையது
 • லாயல்ட்டி சேர்ப்புகள்
 • சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்ஃபர் விருப்பம்
 • தனிப்பயனாக்கப்பட்ட சேவைகள் மற்றும் பிரத்யேக தொடர்பு மேலாளர்
'நான் பார்டிசிபேட்டிங், யூனிட் லிங்க்டு ஃபண்ட் அடிப்படையிலான குரூப் இன்சூரன்ஸ் திட்டம்'.

இந்த ஃபண்ட்களை நிர்வகிப்பதில் உள்ள சிக்கலை அகற்றி, கட்டாயம் கொண்டிருக்க வேண்டிய பாதுகாப்பு மற்றும் சேமிப்புத் திட்டங்களின் தொகுப்பிலிருந்து ஒன்றை உங்கள் பணியாளர்களுக்கு வழங்க விரும்புகிறீர்களா?

எஸ்பிஐ லைஃப் – கல்யாண் யுஎல்ஐபி பிளஸ் என்பது முதலாளி-பணியாளர் குழுக்களுக்கான ஃபண்ட் அடிப்படையிலான திட்டமாகும். நீங்கள் செயல்திறன்மிக்க ஃபண்ட் மேலாண்மையிலிருந்து பயனடையும் அதேவேளையில், இது உங்கள் பணியாளர்கள் பணிக்கொடை, ஓய்வுறுகால ஊதியம் மற்றும் உங்கள் பணியாளர்களுக்காக விடுப்பிற்கீடான பணம் பெறும் திட்டங்கள் ஆகியவற்றின் பலன்களை ஒன்றிணைத்து வழங்குகிறது.

இந்தத் திட்டம் வழங்குபவை –
 • பாதுகாப்பு – உங்கள் பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் ஓய்வுக்காலத் தேவைகளைப் பார்த்துக்கொள்ளலாம்
 • நம்பகத்தன்மை – பிரத்யேக சேவை குழு
 • வசதி – உங்கள் தேவைகளுக்கு ஏற்ப உங்கள் பணியாளர்களுக்கான திட்டத்தை வடிவமைக்கலாம்

பொருளாதார ரீதியாக உங்கள் பணியாளர்களின் எதிர்காலத்தை உத்திரவாதமளிப்பதன் மூலம் அவர்களின் வாழ்வைச் சிறந்த முறையில் வாழ்வதற்கான அதிகாரத்தை வழங்குங்கள்.

ஹைலைட்ஸ்

null

நான் பார்டிசிபேட்டிங், யூனிட் லிங்க்டு ஃபண்ட் அடிப்படையிலான குரூப் இன்சூரன்ஸ் திட்டம்

அம்சங்கள்

 • பணியாளர் பலன் திட்டங்களுக்கான அனுபவமிக்க மற்றும் கைதேர்ந்த ஃபண்ட் மேலாண்மை
 • அதிக லாயல்டி சேர்ப்பு விகிதம் வழங்கும் ஒன்றிணைந்த பயன்
 • சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்ஃபர் விருப்பம் உட்பட ஆறு ஃபண்ட் விருப்பங்கள்
 • வரையறுக்கப்பட்ட பலன் (DB) அல்லது வரையறுக்கப்பட்ட பங்களிப்புகள் (DC) திட்டங்கள் அல்லது இணைப்புகளை நிர்வகிக்கலாம்
 • விடுப்பிற்கீடான பணம் பெறும் மற்றும் பணிக்கொடை திட்டங்களின் கீழ் இலவச வரம்பற்ற ஆன்லைன், ஃபண்ட் மாற்றங்கள் மற்றும் பங்களிப்புகளின் ரிடைரக்‌ஷன்கள்

பயன்கள்

பாதுகாப்பு
 • பணியில் இருக்கும் காலத்தில் திரட்டப்பட்ட தொகையை பணியாளர்கள் பெறுவர்
 • ஏதேனும் நிகழ்வின்போது அவர்களின் பயனாளிக்குப் பொருளாதார ரீதியான பாதுகாப்பு
 • ஒரே முதன்மை பாலிசிதாரரின் ஒற்றை அல்லது குழு நிறுவனங்கள் கொண்டுள்ள பல்வேறு பாலிசிகளை ஒன்றிணைப்பதன் மூலம் அதிக லாயல்டி சேர்ப்புகள்
நம்பகத்தன்மை
 • உங்கள் செயல்பாட்டுத் தேவைகளுக்குத் தேவைப்படும் பிரத்யேக சேவைகள்
வசதிக்கேற்றது
 • சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்ஃபர் விருப்பத்தின் மூலம் முதலீட்டு ஆபத்தைக் குறைக்கலாம்
 • திட்டத்தின் வகையைப் பொறுத்து மாஸ்டர் பாலிசி அல்லது உறுப்பினர் நிலைக்கான ஃபண்ட் மேலாண்மை
வரிப் பலன்களைப் பெறுங்கள்*
திட்டப் பலன்
இறப்பு, ஓய்வுபெறுதல், ராஜினாமா, பணம்பெறுதல் அல்லது இதர காரணங்கள் காரணமாக வெளியேறுவது ஆகிய நிகழ்வுகளின்போது பலன்கள், திட்டத்தின் விதிகளின்படி செலுத்தப்படும். முதன்மை பாலிசிஹோல்டர் அல்லது உறுப்பினர் இவற்றில் பொருத்தமான பாலிசி கணக்கிலிருந்து இந்தப் பலன்கள் செலுத்தப்படும்
காப்பீட்டுப் பலன்
உறுப்பினர் இறக்கும்போது, உத்திரவாதம் அளிக்கப்பட்ட தொகையான ₹1,000 நாமினிக்கு செலுத்தப்படும்.
இந்தப் பலனானது விடுப்பிற்கீடான பணம் பெறும் மற்றும் பணிக்கொடை திட்டங்களின் கீழ் கிடைக்கிறது. மேலும் இதைத் திட்டப் பலனுடன் சேர்த்துச் செலுத்தப்பட வேண்டும்.

இந்தப் பாலிசியின் கீழ் கீழுள்ள முதலீடுகளின் ஆபத்துத் தொடர்பான குறிப்பு
 • யூனிட் லிங்க்டு லைஃப் இன்சூரன்ஸ் திட்டங்கள், வழக்கமான காப்பீட்டுத் திட்டங்களைக் காட்டிலும் வித்தியாசமானது, சந்தை அபாயக் காரணிகளுக்கு உட்பட்டது.
 • யூனிட் லிங்க்டு லைஃப் இன்சூரன்ஸ் பாலிசிகளில் செலுத்தப்படும் பிரீமியம் தொகையானது, சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது, மூலதனச் சந்தைகளுடன் தொடர்புடையது. நிதியின் செயல்பாட்டின் அடிப்படையில், அல்லது மூலதனச் சந்தையை மாற்றும் காரணிகளின் அடிப்படையில் NAV மதிப்பில் ஏற்றம் அல்லது இறக்கம் இருக்கும். காப்பீட்டுத்தாரர் எடுக்கும் முடிவுகளுக்கு அவர்களே முழுப் பொறுப்பாவார்.
 • இந்த ஒப்பந்தத்தின்கீழ் வழங்கப்படும் பல்வேறு ஃபண்ட்கள், அந்த ஃபண்ட்களின் பெயர்களாகும். இந்தத் திட்டங்களின் தரத்தையோ, எதிர்கால வளர்ச்சி மற்றும் லாபத்தையோ எந்த வகையிலும் குறிப்பிடுவது கிடையாது.
 • எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் என்பது காப்பீட்டு நிறுவனத்தின் பெயர் மட்டுமே, எஸ்பிஐ லைஃப் - கல்யாண் யுஎல்ஐபி பிளஸ் என்பது யூனிட் லிங்க்டு லைஃப் இன்சூரன்ஸ் ஒப்பந்தத்தின் பெயர் மட்டுமே. ஒப்பந்தத்தின் தரத்தையோ, எதிர்கால வளர்ச்சி மற்றும் லாபத்தையோ எந்த வகையிலும் குறிப்பிடுவது கிடையாது.
 • உங்கள் காப்பீட்டு முகவர் அல்லது இடைத்தரகர் அல்லது காப்பீடுதாரரின் பாலிசி ஆவணத்தில் இருந்து தொடர்புடைய அபாயங்களையும், செலுத்த வேண்டிய கட்டணங்களையும் தெரிந்து வைத்திருக்கவும்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகவல் எஸ்பிஐ லைஃப் - கல்யாண் யுஎல்ஐபி பிளஸ் திட்டத்தின் சுருக்க விவரமாகும். இவை திட்டம் குறித்த சுருக்கமான அம்சங்கள் மட்டுமே. அபாயக் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்த கூடுதல் விவரங்களுக்கு, வாங்குவதற்கு முன்பு, விற்பனைச் சிற்றேட்டைப் படிக்கவும்.

வரிப் பலன்கள்*:
பொருந்தக்கூடிய இந்திய வருமான வரிச் சட்டங்களுக்கு இணங்க வருமான வரிப் பலன்கள்/விலக்குகளைப் பெறலாம். இது அவ்வப்போது மாறக்கூடியதாகும். விவரங்களுக்கு உங்கள் வரி ஆலோசகரைத் தொடர்பு கொள்ளவும்.

எஸ்பிஐ லைஃப் – கல்யாண் யுஎல்ஐபி பிளஸின் ஆபத்துக் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்த கூடுதல் விவரங்களுக்குப் பின்வரும் ஆவணங்களைக் கவனமாகப் படிக்கவும்.

*The Premium shall be paid by the Master Policyholder as per the funding valuation report in accordance with AS15 (Revised) guidelines or as per scheme rules.

64.ver.03-06/17 WEB TAM

ஆபத்துக் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பற்றிய அதிக விவரங்களுக்கு, ஒப்புதல் தெரிவிப்பதற்கு முன்னர், விற்பனைச் சிற்றேட்டைக் கவனமாகப் படிக்கவும்.

*வருமான வரிச்:
வருமான வரிச் சட்டங்களின்படி வரிப் பலன்கள் வழங்கப்படுகிறது. அவை அவ்வப்போது மாற்றத்திற்குரியது. விவரங்களுக்கு, உங்களின் வரி ஆலோசகரின் ஆலோசனையைப் பெறவும்.
ஒவ்வொரு திட்டப் பக்கத்திலும் திட்டப் பலன்களுக்குக் கீழே மேலும் ஒரு வரிப் பொறுப்புத் துறப்பு உள்ளது. இந்தியாவில் பொருந்தக்கூடிய வருமான வரி சட்டங்களின்படி, நீங்கள் வருமான வரிப் பலன்கள் / விலக்குகள் ஆகியவற்றைப் பெற தகுதியுடையவராவீர். இது அவ்வப்போது மாற்றத்திற்குரியது. மேலும் விவரங்களுக்கு எங்களின் இணையதளத்தைப் பார்வையிடலாம் விவரங்களுக்கு, உங்கள் வரி ஆலோசகரின் ஆலோசனையைப் பெறவும்.

என்ற இலவச எண்ணில் தொடர்புகொள்ளவும்

1 800 267 9090(தினமும் காலை 9.00 மணிமுதல் இரவு 9.00 மணிவரை தொடர்புகொள்ளலாம்)

எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும்:

info@sbilife.co.in