லைஃப் இன்சூரன்ஸ் பாலிசி ஃபார் இண்டிப்பென்டண்ட் வித் கிட்ஸ் | எஸ்பிஐ லைஃப்
close

By pursuing your navigation on our website, you allow us to place cookies on your device. These cookies are set in order to secure your browsing, improve your user experience and enable us to compile statistics  For further information, please view our "privacy policy"

SBI Logo

Join Us

Tool Free 1800 22 9090

இன்சூரன்ஸைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

WE ARE HERE FOR YOU !

வசதியான எதிர்காலத்திற்கு உங்கள் செல்வத்தைப் பெருக்குங்கள்

உங்கள் தொழில் வாழ்க்கையில் புதிய உயரத்தை அடைந்துள்ளீர்கள். உங்கள் குழந்தைகள் வளர்ந்துவிட்டார்கள். தற்போது சிறகை விரித்து பறக்கத் தயாராக உள்ளார்கள். நீங்கள் சிறுவயதில் ஆசைப்பட்ட வாழ்க்கையை தற்போது வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். பல போராட்டங்கள் மற்றும் கடின உழைப்பிற்குப் பிறகே இந்த நிலையை அடைந்துள்ளீர்கள். தற்காலத்தில் தொடர்ந்து அதிகரித்து கொண்டிருக்கும் பணவீக்கத்தின் விளைவாக விலை உயர்வு ஏற்படுகிறது. இதனால் வரும் காலங்களில் இதே வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது என்பது சிரமமாக இருக்கும். ஆனால், இப்போதே நீங்கள் திட்டமிட தொடங்கினால் இது சாத்தியமாகும்.

இந்த நிலையில், உங்கள் கடனைச் செலுத்திவிட்டு, உங்களுக்காகவும் உங்களின் குழந்தையின் எதிர்காலத்திற்காகவும் நிதியைச் சேமிக்க விரும்புவீர்கள். மேலும், சராசரி ஆயுட்காலம் அதிகரிப்பதால், ஓய்வுகாலத்தின்போது பெரும்பான்மையான செலவுகள் உடல் ஆரோக்கியத்திற்காகவே இருக்கும். எனவே, இன்றே உங்கள் ஓய்வுகாலத்தைத் திட்டமிடுவது அவசியமாகும்.

உங்கள் குழந்தையின் எதிர்காலத்தைப் பாதுகாக்க காப்பீட்டுத் திட்டங்களைத் தேடுகிறீர்களா?

இதோ நீங்கள் சிந்திக்க வேண்டிய விஷயங்களில் சில

சந்தையுடன் தொடர்புடைய வருமானங்கள் அல்லது போனஸ் ஆகியவற்றின் மூலமாக உங்கள் செல்வத்தைப் பெருக்கவும்

உங்களின் ஆபத்து மேலாண்மையின் படி, உங்கள் சேமிப்புகளைப் பெருக்குவதற்கு சந்தையுடன் தொடர்புடைய அல்லது வழக்கமான திட்டங்களைத் தேர்ந்தெடுக்கவும்.

பணப்புழக்கத்தையும் கருத்தில் கொள்ளவும்

பணம் எடுக்கும் விருப்பம்/கடன் பெறுவதற்கான விருப்பம் இருக்கும்போது, இது பாலிசி காலத்தில் ஏற்படும் எதிர்பாராத செலவுகளை சமாளிக்க உதவுகிறது.

தனி ஓய்வுக்காலத் திட்டம் ஒன்றிற்கு அர்ப்பணித்துக்கொள்ளுங்கள்

இன்று நீங்கள் பெறும் அதே வருமானம் இல்லையென்றால், நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கைமுறையை முன்னதாக திட்டமிடவில்லையெனில் பின்பற்றுவது கடினமானது. இப்போது உங்கள் ஓய்வுகால நிதிக்கான முதலீட்டை அதிகரிக்கத் தொடங்க வேண்டிய நேரமாகும். இந்த நிதியானது உடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் எதிர்பாராத நிதி தேவைகளுக்கும் பயன்படுத்தப்படாது.

வரிச் சலுகைகளைப் பெறுங்கள்

1961 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தின் கீழுள்ள நடப்பு விதிகளின்படி வரிச் சலுகைகளைப் பெறலாம்

உங்களின் முக்கிய நிதி இலக்குகள்

 

1 Build a contingency fund

அவசரகால நிதியை உருவாக்குதல்

 

2 Start planning for retirement

ஓய்வுகாலத்திற்குத் திட்டமிட தொடங்குதல்

 

3 Prepare for child's wedding

உங்கள் குழந்தையின் திருமணத்திற்க்கு ஏற்பாடு செய்தல்

 

4 Pay off your Debts

உங்கள் கடனை அடைத்தல்

ஆபத்துக் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பற்றிய அதிக விவரங்களுக்கு, ஒப்புதல் தெரிவிப்பதற்கு முன்னர், விற்பனைச் சிற்றேட்டைக் கவனமாகப் படிக்கவும்.
ரைடர்கள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பற்றிய அதிக விவரங்களுக்கு, ரைடர் சிற்றேட்டைப் படிக்கவும்.

*வருமான வரிச்:
வருமான வரிச் சட்டங்களின்படி வரிப் பலன்கள் வழங்கப்படுகிறது. அவை அவ்வப்போது மாற்றத்திற்குரியது. விவரங்களுக்கு, உங்களின் வரி ஆலோசகரின் ஆலோசனையைப் பெறவும்.
ஒவ்வொரு திட்டப் பக்கத்திலும் திட்டப் பலன்களுக்குக் கீழே மேலும் ஒரு வரிப் பொறுப்புத் துறப்பு உள்ளது. இந்தியாவில் பொருந்தக்கூடிய வருமான வரி சட்டங்களின்படி, நீங்கள் வருமான வரிப் பலன்கள் / விலக்குகள் ஆகியவற்றைப் பெற தகுதியுடையவராவீர். இது அவ்வப்போது மாற்றத்திற்குரியது. மேலும் விவரங்களுக்கு எங்களின் இணையதளத்தைப் பார்வையிடலாம். விவரங்களுக்கு, உங்கள் வரி ஆலோசகரின் ஆலோசனையைப் பெறவும்.