இன்சூரன்ஸ் பாலிசி ஃபார் ரிட்டையர்மெண்ட்| ரிட்டையர்மெண்ட் பிளானிங்| எஸ்பிஐ லைஃப்
SBI Logo

Join Us

Tool Free 1800 22 9090

இன்சூரன்ஸைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

WE ARE HERE FOR YOU !

உங்கள் வாழ்க்கையின் அழகான வருடங்களுக்குப் பொருளாதார ரீதியாக தயாராகவும்

ஓய்வுகாலத்தை அன்பான தருணங்களிலும், நீங்கள் விரும்பும் செயல்களிலும் செலவிட வேண்டும். நிதிநிலை கவலைகள் மற்றும் பொறுப்புகள் பற்றி ஓய்வுகாலத்தில் சிந்திக்க கூடாது. ஆனால், கூட்டுக்குடும்பம் இந்தக் காலக்கட்டத்தில் இல்லாததாலும், பணவீக்க விகிதங்கள் விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்வதாலும், முன்னதாகவே முந்தைய வருமானங்களில் பணம் ஈட்டும் ஆற்றலின் பலன்களைப் பெறுவதற்கு ஓய்வுக்கால நிதியில் திட்டமிட்டு முதலீடு செய்யத்தொடங்க வேண்டும்.

சராசரி ஆயுட்காலம் அதிகரிப்பதாலும், உடல் ஆரோக்கியம், வாழ்க்கை முறை ஆகியவற்றிற்கான செலவுகள் அதிகரிப்பதாலும், ஓய்வுகாலத்திற்குப் பிறகும் சீரான வருமானம் உள்ளதை உறுதிசெய்ய வேண்டும். இந்த நேரத்தில்தான் சரியான திட்டத்தில் முன்னதாகவே முதலீடு செய்வது உதவும்.

ஓய்வுகாலத்திற்குப் பிறகு கவலையில்லாத/எளிமையான வாழ்க்கையை வாழ இன்சூரன்ஸ் திட்டங்களைத் தேடுகிறீர்களா?

இதோ நீங்கள் சிந்திக்க வேண்டிய விஷயங்களில் சில

ஏற்ற வகையில் ஆன்னியுட்டி செலுத்தும் வசதியைத் தேடுங்கள்

உங்கள் வாழ்க்கைத்துணை பொருளாதார ரீதியில் பிறரைச் சார்ந்திருக்காமல் இருப்பதை உறுதிசெய்ய இணை ஆயுள் ஆன்னியுட்டி மற்றும் உங்கள் குழந்தைக்குச் சொத்துக்கள் விட்டுச் செல்வதை உறுதிசெய்ய வாங்கும் விலையைத் திருப்பி கொடுக்கும் ஆயுள் ஆன்னியுட்டி போன்ற நிதி தேவைக்கு ஏற்ப பணம் செலுத்துவதைத் தேர்வுசெய்யும் வசதியை வழங்கும் திட்டங்களை ஆராயுங்கள்.

உங்களைச் சார்ந்திருப்பவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும்

உங்கள் வாழ்க்கைத் துணையின் எதிர்காலத்தைப் பாதுகாக்க, நீங்கள் இல்லாதபோதும் அவர்களுக்கு வருமானம் அளிக்கும் திட்டத்தில் முதலீடு செய்வதைப் பற்றி சிந்திப்பது புத்திசாலித்தனமானது.

அதிகரிக்கும் உடல் ஆரோக்கியம் தொடர்பான செலவுகளுக்கு ஒதுக்கீடு செய்யுங்கள்

குறிப்பட்ட தொகையைப் பாதுகாத்து வைப்பதன் மூலம் அதிகரிக்கும் உடல் ஆரோக்கியம் தொடர்புடைய செலவுகளுக்கு நிதி ஒதுக்கியுள்ளதை உறுதிசெய்யவும்

வரிச் சலுகைகளைப் பெறுங்கள்

1961 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தின் கீழுள்ள நடப்பு விதிகளின்படி வரிச் சலுகைகளைப் பெறலாம்

உங்களின் முக்கிய நிதி இலக்குகள்

 

1 Build a contingency fund

அவசரகால நிதியை உருவாக்குதல்

 

2 Regular income post-retirement

ஓய்வுகாலத்திற்குப் பிறகும் தொடர்ச்சியான வருமானம் பெறுதல்

 

3 Save for healthcare costs

உடல் ஆரோக்கியம் தொடர்புடைய செலவுகளுக்குச் சேமித்தல்

 

4 Protect your partner

உங்கள் வாழ்க்கைத்துணையின் எதிர்காலத்தைப் பாதுகாத்தல்

ஆபத்துக் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பற்றிய அதிக விவரங்களுக்கு, ஒப்புதல் தெரிவிப்பதற்கு முன்னர், விற்பனைச் சிற்றேட்டைக் கவனமாகப் படிக்கவும்.
ரைடர்கள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பற்றிய அதிக விவரங்களுக்கு, ரைடர் சிற்றேட்டைப் படிக்கவும்.

*வருமான வரிச்:
வருமான வரிச் சட்டங்களின்படி வரிப் பலன்கள் வழங்கப்படுகிறது. அவை அவ்வப்போது மாற்றத்திற்குரியது. விவரங்களுக்கு, உங்களின் வரி ஆலோசகரின் ஆலோசனையைப் பெறவும்.
ஒவ்வொரு திட்டப் பக்கத்திலும் திட்டப் பலன்களுக்குக் கீழே மேலும் ஒரு வரிப் பொறுப்புத் துறப்பு உள்ளது. இந்தியாவில் பொருந்தக்கூடிய வருமான வரி சட்டங்களின்படி, நீங்கள் வருமான வரிப் பலன்கள் / விலக்குகள் ஆகியவற்றைப் பெற தகுதியுடையவராவீர். இது அவ்வப்போது மாற்றத்திற்குரியது. மேலும் விவரங்களுக்கு எங்களின் இணையதளத்தைப் பார்வையிடலாம். விவரங்களுக்கு, உங்கள் வரி ஆலோசகரின் ஆலோசனையைப் பெறவும்.