ஸ்மார்ட் உமன் அட்வான்டேஜ்/ சேமிப்பு மற்றும் பெண்கள் காப்பீட்டுத் திட்டம் இணைந்த – எஸ்பிஐ லைஃப்
SBI Logo

Join Us

Tool Free 1800 22 9090

எஸ்பிஐ லைஃப் – ஸ்மார்ட் உமென் அட்வான்டேஜ்

UIN: 111N106V01

Product Code: 2C

null

பெண்கள் பிறப்பிலேயே சாமர்த்தியசாலிகள். அவர்களைப் போன்ற சாமர்த்தியமான ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை வழங்குகின்றோம்.

  • பெண்களுக்கான திட்டம்
  • மூன்று மடங்கு பலன்கள்
  • பிரீமியம் தள்ளுபடி விருப்பம் உள்ளது
  • இரட்டைத் திட்ட விருப்பங்கள்
நீங்கள் ஒரு பெண்ணாக, உங்களுக்கு நெருக்கமானவர்களுக்கும் அன்பானவர்களுக்கும் முக்கியப் பங்காற்றுகிறீர்கள். உங்கள் அத்தியாவசியத் தேவையான பாதுகாப்பு மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றை உங்களுக்கு வழங்குவதில் நீங்கள் முதலில் கவனம் செலுத்தியுள்ளீர்களா?

எஸ்பிஐ லைஃப் – ஸ்மார்ட் உமென் அட்வான்டேஜ் மூலம் பெண்களுக்காக வடிவமைக்கப்பட்ட பிரத்யேகமான, ஓர் திட்டம் – ஆயுள்காப்பீடு,சேமிப்புகள் மற்றும் ஆபத்தான உடல்நலக் குறைபாடு (CI) பலன் ஆகியவற்றின் மூன்று பலன்களைப் பெறலாம். இந்த மும்முனைத் திட்டத்தின் மூலம், உங்கள் சிறகுகளை விரித்து உயரப் பறந்திடுங்கள்.

இந்தத் திட்டத்தில் எண்ணற்றப் பலன்கள் பின்வருமாறு: –
  • பாதுகாப்பு -ஏதேனும் நிகழ்வின்போது உங்கள் குடும்பத்தைப் பாதுகாக்கிறது
  • நம்பகத்தன்மை –விரிவான காப்பீட்டின் மூலம் நம்பகத்தன்மை
  • வசதி –இரண்டு திட்டங்களிலிருந்து தேர்வு செய்யும் வசதி மற்றும் கருத்தரித்தல் தொடர்பான சிக்கல்கள் மற்றும் குழந்தைப் பிறப்பு தொடர்புடைய கோளாறுகள் ஆகியவற்றிற்கு எதிரான பாதுகாப்பையும் தேர்வுசெய்யும் வசதி

கீழே உள்ள எங்களின் விவரங்கள் அடங்கிய விளக்கத்தில் உங்கள் தனிப்பட்ட மற்றும் பாலிசி தொடர்பான விவரங்களை உள்ளிட்டு, உங்களுடைய மற்றும் உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் சுதந்திரமாகச் செயல்படுவதைக் கவனியுங்கள்.

ஹைலைட்ஸ்

null

பார்டிசிபேட்டிங் தனிநபர் பாரம்பரியமான என்டோவ்மென்ட் திட்டம்

அம்சங்கள்

  • லைஃப் இன்சூரன்ஸ் கவரேஜ்
  • நடப்பில் உள்ள பாலிசிகளுக்கு ஆபத்தான உடல்நலக் குறைப்பாட்டின் தீவிர நிலையின்போது பிரீமியம் தள்ளுபடி செய்யும் பலன் உள்ளது
  • முதிர்வின்போது, உத்திரவாதம் அளிக்கப்பட்ட தொகையுடன் வழக்கமான போனஸ்கள் (ஏதேனும் இருப்பின்) வழங்கப்படும்
  • இரண்டு திட்ட விருப்பங்கள்* – கோல்ட் மற்றும் பிளாட்டினம்
  • இறப்பு மற்றும் ஆபத்தான உடல்நலக் குறைபாட்டின் நிலையைத் தேர்வுசெய்யவும்
  • கூடுதல் கர்ப்பக் கால சிக்கல்கள் மற்றும் பிறப்பிலேயே உண்டாகும் கோளாறுகள் (APC&CA) விருப்பம்

* தேர்வுசெய்யப்படும் திட்டத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட ஆபத்தான உடல்நலக் குறைபாடுகள் (CI) ஈடுசெய்யப்படும். தொடக்கத்தில் ஒருமுறை தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டத்தைப் பாலிசி டெர்மின்போது மாற்ற முடியாது.

பயன்கள்

பாதுகாப்பு

  • உங்கள் குடும்பத்தின் பொருளாதார தேவைகளை உறுதிசெய்யுங்கள்
  • உங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க பொருளாதார ரீதியான பாதுகாப்பு
  • ஏதேனும் கருத்தரித்தல் தொடர்பான சிக்கல்கள் மற்றும் குழந்தைப் பிறப்பு தொடர்புடைய கோளாறுகள் உருவாகும்போது கூடுதல் பாதுகாப்பைப் பெறுங்கள்

நம்பகத்தன்மை

  • விரிவான, பாதுகாப்பின் மும்மடங்கு பலன்கள், சேமிப்புகள் மற்றும் CI பலன்கள் ஆகியவற்றை அனுபவியுங்கள்
  • ஆபத்தான உடல்நலக் குறைபாட்டின் தீவிர நிலையின்போது, மேலும் பிரீமியம் செலுத்தும் கட்டாயம் எதுவுமில்லாமல் தொடர்ந்து திட்டத்தின் பலன்களைப் பெறுவீர்கள்.

வசதிக்கேற்றது

  • உங்கள் விருப்பத்திற்கேற்ப CI அல்லது இறப்பு இழப்பீட்டின் நிலையைத் தேர்ந்தெடுங்கள்
  • இரண்டு வேறுபட்ட திட்டங்களுக்கிடையே தேர்ந்தெடுங்கள்– கோல்ட் மற்றும் பிளாட்டினம் – பெண்கள் தொடர்பான CI அல்லது பெண்கள் தொடர்பான மற்றும் மற்ற பாதுகாப்பளிக்கப்படும் CI ஆகிய இரண்டையும் தேர்வுசெய்யலாம்

வரிப் பலன்களைப் பெறுங்கள்~

முதிர்வுப் பலன் (நடப்பில் உள்ள பாலிசிகளுக்கு மட்டும்):

முதிர்வு காலம் வரை ஆயுள் காப்பீடு செய்தவர் உயிருடன் இருப்பின், உத்திரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படைத் தொகை* + வெஸ்டட் எளிய ரிவர்ஷனரி போனஸ்கள் + டெர்மினல் போனஸ், ஏதேனும் இருந்தால், அவை காப்பீட்டுத்தாரருக்கு அளிக்கப்படும்.
* இங்கு, உத்திரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படைத் தொகையானது, முதிர்வின்போது உத்திரவாதம் அளிக்கப்பட்ட நிச்சயத் தொகைக்கு சமமாக இருக்கும்.

இறப்பு இழப்பீடு (நடப்பு பாலிசிகளுக்கு மட்டும்):

காப்பீட்டுத்தாரரின் எதிர்பாராத இறப்பின்போது, 'இறப்பின்போது உத்திரவாதம் அளிக்கப்பட்ட தொகையுடன்' வெஸ்டட் ரிவர்ஷனரி போனஸ்கள் மற்றும் டெர்மினல் போனஸ் (ஏதேனும் இருந்தால்) அல்லது செலுத்தப்பட்ட பிரீமியத்தின் 105% இவற்றில் எது அதிகமோ அது காப்பீட்டின் பயனாளிக்கு வழங்கப்படும். இறப்பின்போது உத்திரவாதம் அளிக்கப்பட்ட தொகை பின்வருவனவற்றை விட அதிகமாக இருக்கும் வேளைகளில்:

  • ஆண்டு பிரீமியத்தில் 10 மடங்கு,
  • முதிர்வின்போது உத்திரவாதம் அளிக்கப்பட்ட நிச்சயத் தொகை,
  • இறப்பின்போது செலுத்தவேண்டிய உத்திரவாதம் அளிக்கப்பட்ட மொத்தத் தொகையானது, SAMF x முதிர்வின்போது உத்திரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படைத் தொகையாகும்.

இறப்பு பலன் செலுத்தப்படும்போது, பாலிசியானது முடிவுபெறும்.

ஆபத்தான உடல்நலக் குறைபாடு (நடப்பில் உள்ள பாலிசிகளுக்கு மட்டும்):

நோயின் தீவிரத்தைப் பொறுத்து செலுத்தப்படும்:-

  • CI இன் ஆரம்ப நிலையில், CI இன் உத்திரவாதம் அளிக்கப்பட்ட தொகையில் 25% பலன் செலுத்தப்படும்.
  • CI இன் தீவிர நிலையில், பாலிசியின் கீழ் உள்ள ஏதேனும் முன்னதாகச் செலுத்திய CI கிளைம்கள், CI இன் உத்திரவாதம் அளிக்கப்பட்ட தொகையில் 100% பலன் செலுத்தப்படும்.
  • CI இன் அதிதீவிர நிலையில், பாலிசியின் கீழ் உள்ள ஏதேனும் முன்னதாகச் செலுத்திய CI கிளைம்கள், CI இன் உத்திரவாதம் அளிக்கப்பட்ட தொகையில் 150% பலன் செலுத்தப்படும்.

* இங்கு, CI உத்திரவாதம் அளிக்கப்பட்ட தொகை = SAMF x முதிர்வின்போது உத்திரவாதம் அளிக்கப்பட்ட நிச்சயத் தொகை.
CI உத்திரவாதம் அளிக்கப்பட்ட தொகையும், இறப்பின் போது உத்திரவாதம் அளிக்கப்பட்ட மொத்தத் தொகையும் சமமாக இருக்கும்.

உள்ளமைந்த பலன்:

  • பிரீமியம் தள்ளுபடி பலன் (நடப்பில் உள்ள பாலிசிகளுக்கு மட்டும்): CI இன் தீவிர நிலை குறித்த கிளைம் நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டால், மருத்துவ நிலை கண்டறியப்பட்ட தேதியிலிருந்து, பாலிசிக்கான APC&CA விருப்பப் பிரீமியம் ஏதேனும் இருந்தால் அவை உட்பட, அனைத்து எதிர்கால பிரீமியங்களும் மீதமுள்ள பாலிசி டெர்மிற்குத் தள்ளுபடி செய்யப்படும். மீதமுள்ள பாலிசி பலன்கள் பாலிசி டெர்ம் முழுவதும் தொடரும்.
  • கூடுதல் கர்ப்பக் கால சிக்கல்கள் மற்றும் பிறப்பிலேயே உண்டாகும் கோளாறுகள் (APC&CA) விருப்பம்: உத்திரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படைத் தொகையின் உத்திரவாதம் அளிக்கப்பட்ட தொகை 20% தீர்மானிக்கப்பட்டபோது, கர்ப்பக் காலம் தொடர்பான சிக்கல்கள் மற்றும் குழந்தைப் பிறப்பு தொடர்புடைய கோளாறுகள் ஆகியவற்றின் மீது பாதுகாப்பை வழங்குகிறது. இந்தப் பலனானது பாலிசி விருப்பத்தின் பாலிசி டெர்மின்போது ஒருமுறை மட்டுமே செலுத்தப்படும். இந்த விருப்பத்திற்குச் செலுத்தப்படும் பிரீமியமும் முடிவுக்கு வரும்.

~வரிப் பலன்கள்:

  • அவ்வப்போது மாறும் பொருந்தக்கூடிய இந்திய வருமான வரிச் சட்டங்களின்படி வருமான வரிச் சலுகைகள்/விலக்குகளைப் பெறத் தகுதி உள்ளது. மேலும் விவரங்களுக்கு எங்கள் இணையதளத்தைப் பார்வையிடவும்:
    http://www.sbilife.co.in/sbilife/content/21_3672#5. விவரங்களுக்கு உங்கள் வரி ஆலோசகரைத் தொடர்பு கொள்ளவும்.

ஆபத்தான உடல்நலக் குறைபாடு (CI) காப்பீடு மற்றும் APC & CA விருப்பம் ஆகியவற்றின் காப்பீடு, விளக்கங்கள், காத்திருப்புக் காலம், விலக்குகள் தொடர்புடைய விவரங்களுக்கு விற்பனைச் சிற்றேட்டைப் பார்க்கவும்.
இதர ஆபத்துக் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்த கூடுதல் விவரங்களுக்கு, வாங்குவதற்கு முன்பு, விற்பனைச் சிற்றேட்டைப் படிக்கவும்.
எஸ்பிஐ லைஃப் – ஸ்மார்ட் உமென் அட்வான்டேஜ் ஆபத்துக் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்த கூடுதல் விவரங்களுக்குப் பின்வரும் ஆவணங்களைக் கவனமாகப் படிக்கவும்.
null
** கடைசி பிறந்த நாளின்படி வயது தொடர்பான அனைத்து குறிப்புகளும் கணக்கிடப்படுவதாகும்.
## மாதாந்திர முறைக்கு, 3 மாத பிரீமியங்கள் முன்னதாகச் செலுத்தப்பட வேண்டும் மற்றும் எலக்ட்ரானிக் கிளியரிங் சிஸ்டம் (ECS) அல்லது நடப்பில் உள்ள வழிமுறைகள் (வங்கிக் கணக்கு அல்லது கிரெடிட் கார்டில் இருந்து நேரடி டெபிட்டாகக் கட்டணம் செலுத்தப்படுதல்) மூலம் புதுப்பித்தல் பிரீமியத்தைச் செலுத்த வேண்டும். மாத வருமானச் சேமிப்புத் திட்டத்திற்கு (SSS), 2 மாத பிரீமியங்கள் முன்னதாகச் செலுத்தப்பட வேண்டும் மற்றும் புதுப்பித்தல் பிரீமியத்தை வருமானத்தில் இருந்து கழிப்பாக மட்டுமே செலுத்த வேண்டும்.
^ APC&CA விருப்பம் தேர்வுசெய்யப்படும்போது, பொருத்தமான பாலிசி டெர்ம் தேர்வுசெய்யப்பட வேண்டும். எனவே, பாலிசி விருப்பத்தின் அதிகபட்ச முதிர்வு வயதை மீறாமல் இருக்கும்.

2C.ver.03-10/17 WEB TAM

**லாப விகிதங்கள் முறையே 4% மற்றும் 8% வீதம் என்று கருதப்பட்டது, இது பொருந்தும் அனைத்து கட்டணங்களும் கணக்கில் கொள்ளப்பட்ட பிறகு இந்த விகிதங்களில் விளக்கிக் காட்டுவதற்காக மட்டும். போனஸ் விகிதங்கள் போனஸ் குவிப்பு காலத்தில் நிலையாக கருதப்பட்டது, நிறுவனத்தின் முதலீட்டு அனுபவத்தின் பேரில் உண்மையான போனஸ் மாறுபடலாம். இவை உத்தரவாதமானவை அல்ல மற்றும் இவை லாபத்தின் உச்ச அல்லது கீழ் வரம்பு அல்ல. எதிர்கால முதலீட்டு செயலாற்றல் உள்பட எண்ணற்ற காரணிகள் பொருத்து லாபம் அமைகிறது.

ஆபத்துக் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பற்றிய அதிக விவரங்களுக்கு, ஒப்புதல் தெரிவிப்பதற்கு முன்னர், விற்பனைச் சிற்றேட்டைக் கவனமாகப் படிக்கவும்.

*வருமான வரிச்:
வருமான வரிச் சட்டங்களின்படி வரிப் பலன்கள் வழங்கப்படுகிறது. அவை அவ்வப்போது மாற்றத்திற்குரியது. விவரங்களுக்கு, உங்களின் வரி ஆலோசகரின் ஆலோசனையைப் பெறவும்.
ஒவ்வொரு திட்டப் பக்கத்திலும் திட்டப் பலன்களுக்குக் கீழே மேலும் ஒரு வரிப் பொறுப்புத் துறப்பு உள்ளது. இந்தியாவில் பொருந்தக்கூடிய வருமான வரி சட்டங்களின்படி, நீங்கள் வருமான வரிப் பலன்கள் / விலக்குகள் ஆகியவற்றைப் பெற தகுதியுடையவராவீர். இது அவ்வப்போது மாற்றத்திற்குரியது. மேலும் விவரங்களுக்கு எங்களின் இணையதளத்தைப் பார்வையிடலாம் விவரங்களுக்கு, உங்கள் வரி ஆலோசகரின் ஆலோசனையைப் பெறவும்.