SBI Life – Smart Platina Supreme – Guaranteed Long Term Income & Savings Plan
SBI Logo

Join Us

Tool Free 1800 22 9090

எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் பிளாட்டினா சுப்ரீம்

UIN: 111N171V01

Product Code: 3G

play icon play icon
SBI Life - Smart Platina Supreme Savings Plan

உங்கள் கனவுகளுக்கு,
ஸ்மார்ட் கியாரன்டீ
அளித்திடுங்கள்.

Calculate Premium
ஒரு தனிநபர், நான்-லிங்க்டு, நான்-பார்ட்டிசிபேட்டிங், லைஃப் இன்ஷ்யூரன்ஸ் சேமிப்புத் திட்டம்.

நீங்கள் உங்களுக்காகவும், உங்கள் அன்புக்கு உரியவர்களுக்காகவும் ஒரு நிலையான மற்றும் பாதுகாப்பான வாழ்க்கையை வழங்கிட தொடர்ந்து பாடுபடுகிறீர்கள். நீங்கள் வாழ்க்கையில் பல கால கட்டங்களில் முன்னேறிச் செல்லும்போது, உங்கள் தேவைகளும் பொறுப்புகளும் உருவாகிக்கொண்டே இருக்கின்றன, அப்படியே வாழ்க்கையில் நிச்சயமற்ற தன்மைகளும் உருவாகிய வண்ணம் உள்ளன.

எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் பிளாட்டினா சுப்ரீம் தேர்வு செய்வீர். இது முறையான உத்தரவாதமான பலன்களுடன் உங்கள் எதிர்காலத்தை பொருளாதார ரீதியாக பாதுகாப்பதற்கு உத்தரவாதமான வருமானம் வழங்கும் காப்பீட்டுத் திட்டமாகும். உங்கள் அன்புக்கு உரியவர்களுக்கு உங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றவும், உங்கள் சொந்த அபிலாஷைகளை மெய்ப்படச் செய்யவும் ஒவ்வொரு கட்டத்திலும் நம்பிக்கையை உணருங்கள்.

சிறப்பம்சங்கள்:

SBI Life - Smart Platina Supreme

Smart Platina Supreme - Guaranteed Long Term Income Savings Plan

Buy Online
plan profile

Aryan has invested his funds while being assured of its growth with just limited premium payments.

You too can secure your future with SBI Life - Smart Platina Supreme. Fill in the form fields below to know how

Name of Life assured:

DOB:

Gender:

Male Female Third Gender

Staff:

Yes No

A little information about the premium options...

Distribution Channels

Premium Frequency

Annual Premium

50,000 No Limit

Premium Paying Term


A little information about the policy options...

Income Plan

Level Guaranteed Income
Increasing Guaranteed Income

Guaranteed Income Frequency

Payout Period

Policy Term


SBI Life – Accident Benefit Rider (111B041V01)

Term for ADB

8 8

ADB Sum Assured

50,000 1650000

Term for APPD

8 8

APPD Rider Sum Assured

50,000 550000

Reset
sum assured

Sum Assured


premium frequency

Premium frequency

Premium amount
(excluding taxes)


premium paying

Premium Payment Term


policy term

Policy Term

Give a Missed Call

சிறப்பம்சங்கள்:

  1. பாதுகாப்பு: குடும்பத்தின் பொருளாதார பாதுகாப்புக்காக பாலிசி காலவரையின்போது ஆயுள் காப்பீட்டுப் பாதுகாப்பு.
  2. நெகிழ்வுத்தன்மை: பிரீமியம் செலுத்தும் காலவரை, மற்றும் காலஇடைவெளி, பாலிசி காலவரை, பட்டுவாடா காலம் மற்றும் வருமான காலஇடைவெளி ஆகியவற்றின் விருப்பத்தேர்வுகளுடன் உங்கள் வாழ்க்கை இலக்குகளின் அடிப்படையில் வடிவமைத்துக்கொள்ளும் உங்கள் உத்தரவாதமான வருமான காப்பீட்டுத் திட்டம்.
  3. முதிர்வுநிலை பலன்கள்$: உத்தரவாதமான சேமிப்புத் திட்டம், பட்டுவாடா காலத்தில் லெவல் அல்லது அதிகரிக்கும் உத்தரவாதமான வருமானத்தின்^ வடிவத்தில் அத்துடன் செலுத்தப்பட்ட# மொத்த பிரீமியங்களின் 110%-ஐ பட்டுவாடா காலத்தின் முடிவில் முதிர்வு நிலை பலனாக வழங்குகிறது.
  4. எஸ்பிஐ லைஃப் - ஆக்ஸிடென்ட் பெனிஃபிட் ரைடர்* மூலம் பாதுகாப்பை மேம்படுத்திக் கொள்ள விருப்பத்தேர்வு.
  5. அதிகமான பிரீமியங்களுக்கு மேம்படுத்தப்பட்ட உத்தவாதமான வருமானம்
  6. பாலிசி பேரில் கடன் கிடைக்கிறது

$மொத்தத் தொகை வடிவில் எதிர்கால பலன்களின் தள்ளுபடி செய்யப்பட்ட மதிப்பை (எதிர்கால உத்தவாதமான வருமானம் மற்றும் மொத்தம் செலுத்தப்பட்ட பிரீமியங்களின் 110%) பெற்றுக் கொள்வதற்கான விருப்பத்தேர்வு.
^பாலிசிதாரர் உத்தரவாதமான வருமானத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட வருமான இடைவெளியின் தொடக்கத்தில் அல்லது இறுதியில் பெற்றுக் கொள்வதற்கான விருப்பத்தேர்வு.
#இதில், செலுத்தப்பட்ட மொத்த பிரீமியங்கள் என்பது வெளிப்படையாக வசூலிக்கப்பட்டு இருந்தால், ஏதேனும் கூடுதல் பிரீமியம் மற்றும் வரிகள் தவிர்த்து, அடிப்படை திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட அனைத்து பிரீமியங்களின் மொத்தம் ஆகும்.
*எஸ்பிஐ லைஃப் - ஆக்ஸிடென்ட் பெனிஃபிட் ரைடர்: (UIN: 111B041V01), விருப்பத்தேர்வு அ : ஆக்ஸிடென்டல் டெத் பெனிஃபிட் (ADB), விருப்பத்தேர்வு ஆ : ஆக்ஸிடென்டல் பார்ஷியல் பர்மனென்ட் டிஸெபிலிட்டி பெனிஃபிட் (APPD)

பலன்கள்

 

பாதுகாப்பு -

  • உத்தரவாதமான வருமானத் திட்டங்கள் (அடிப்படை காப்பீட்டுத் திட்டம் மற்றும் ஆக்ஸிடென்ட் பெனிஃபிட் ரைடர் கீழ் வழங்கப்படுகிறது) கொண்டு இந்த ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஆயுள் காப்பீட்டின் மூலம் குடும்பத்தின் பொருளாதார பாதுகாப்பு.

நெகிழ்வுத்தன்மை:

  • உங்கள் வாழ்க்கை இலக்குகளுக்கு ஏற்ப இந்தத் திட்டத்தில் பட்டுவாடா காலம் மற்றும் காலஇடைவெளியை தேர்வு செய்துகொள்ளலாம்.

வெளிப்படைத்தன்மை:

  • நிலையான மற்றும் நம்பகமான வருமானத்தை வழங்குகிறது

முதிர்வுநிலை பலன் (அமலில் உள்ள பாலிசிகளுக்கு):

பாலிசி காலவரையின் இறுதியில் ஆயுள் காப்பீட்டுதாரர் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், பாலிசி அமலில் இருப்பதற்கு உட்பட்டு, முதிர்வுநிலை பலன் செலுத்தப்படும்.
முதிர்வுநிலை பலன் பட்டுவாடா காலத்தின் போது தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு வருமான காலஇடைவெளியின் முடிவில்/ஆரம்பத்தில்^ உத்தரவாதமான வருமான வடிவில் செலுத்தப்படும் மற்றும் பட்டுவாடா காலத்தின் முடிவில் செலுத்தப்பட்ட மொத்த பிரீமியங்களின் 110%#, பட்டுவாடா காலத்தின்போது ஆயுள் காப்பீட்டுதாரர் உயிர்வாழ்வதைப் பொருட்படுத்தாமல் செலுத்தப்படும்.
ஆயுள் காப்பீட்டுதாரர்/நியமனதாரர் (பாலிசி காலவரைக்குப் பிறகு ஆயுள் காப்பீட்டுதாரரின் இறப்பு பேரில்) எதிர்கால பலன்களின் தள்ளுபடி செய்யப்பட்ட மதிப்பை** (எதிர்கால உத்தரவாதமான வருமானம் மற்றும் செலுத்தப்பட்ட மொத்த பிரீமியங்களின் 110%#) மொத்தத் தொகை வடிவில் பெற்றுக்கொள்ள விருப்பத்தேர்வு உள்ளது.

^முதிர்வுநிலைக்கு 3 மாதங்களுக்கு முன்பு, பாலிசிதாரர் நிறுவனத்திற்கு தெரிவிப்பதன் மூலம், தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டுவாடா காலத்தின் காலஇடைவெளியின் தொடக்கத்தில் உத்தரவாதமான வருமானத்தை பெற்றுக் கொள்வதற்கான விருப்பத்தேர்வு உள்ளது. தொடக்கத்தில் செலுத்தப்படும் உத்தரவாதமான வருமானம் என்பது உத்தரவாதமான வருமான தொகை X தேர்ந்தெடுக்கப்பட்ட வருமான பட்டுவாடா காலஇடைவெளியின் அடிப்படையிலான சதவிகிதம் (இது வருடாந்திரம் = 93%, அரையாண்டு = 97%, காலாண்டு = 98% மற்றும் மாதாந்திரம் = 99%)
#இதில், செலுத்தப்பட்ட மொத்த பிரீமியங்கள் என்பது வெளிப்படையாக வசூலிக்கப்பட்டு இருந்தால், ஏதேனும் கூடுதல் பிரீமியம் மற்றும் வரிகள் தவிர்த்து, அடிப்படை திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட அனைத்து பிரீமியங்களின் மொத்தம் ஆகும்.
**தள்ளுபடி செய்யப்பட்ட மதிப்பு என்பது ஆண்டுதோறும் தள்ளுபடி விகிதம் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறது, இங்கு தள்ளுபடி விகிதம் என்பது ஒவ்வொரு நிதியாண்டின் 1 ஏப்ரல் தேதிப்படி 30 ஆண்டு நிலவும் எ-பிரிவு விகிதம் அத்துடன் 50 அடிப்படை புள்ளிகள்.

உத்தரவாதமான வருமானப் பலன்:

பாலிசிதாரர் தொடக்கத்தில் பின்வரும் வருமான பட்டுவாடா விருப்பத்தேர்வுகளில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்:
  1. லெவல் கியாரண்டீட் இன்கம்: உத்தரவாதமான வருமானம் என்பது பட்டுவாடா காலம் முழுவதும் ஒரே லெவலில் இருக்கும்.
  2. இன்க்ரீஸிங் கியாரண்டீட் இன்கம்: உத்தரவாதமான வருமானம் என்பது பட்டுவாடா காலத்தின் இரண்டாவது ஆண்டின் தொடக்கத்திலிருந்து தனி வட்டி விகிதம் 5% ஆ.ஒ. வீதம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும்.

ஒரு முறை தேர்வு செய்யப்பட்ட வருமான திட்ட விருப்பத்தேர்வை முழு காலவரையின்போது மாற்றிக் கொள்ள முடியாது.
பாலிசிதாரர் தங்களுடைய எதிர்கால தேவைகளைப் பொறுத்து 15, 20, 25 அல்லது 30 ஆண்டுகள் என பட்டுவாடா காலத்தை தேர்வு செய்யலாம்.
வருமான பட்டுவாடா காலஇடைவெளி வருடாந்திரம், அரையாண்டு, காலாண்டு மற்றும் மாதாந்திரம் என்று அனுமதிக்கப்படுகிறது.
பாலிசிதாரர் பாலிசியின் தொடக்கத்தில் வருமான பட்டுவாடா காலஇடைவெளி விருப்பத்தேர்வில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யலாம். மேலும் பாலிசி காலவரையின் முடிவுக்கு முன்பாக வருமான பட்டுவாடா காலஇடைவெளி விருப்பத்தேர்வை மாற்றிக்கொள்ள விருப்பத்தேர்வு உள்ளது. வருமான பட்டுவாடா தொடங்கிய பிறகு காலஇடைவெளியை மாற்றிக் கொள்ள முடியாது.

இறப்புப் பலன் (அமலில் உள்ள பாலிசிகளுக்கு):

பாலிசி காலவரையின் போது எந்த நேரத்திலும், ஆயுள் காப்பீட்டாளரின் இறப்பு பேரில், பாலிசி அமலில் இருக்கும் பட்சம், இறப்பு பேரிலான காப்பீட்டுத் தொகை நியமனதாரருக்கு அல்லது ஆயுள் காப்பீட்டாளரின் சட்டபூர்வமான வாரிசுதாரருக்கு ஒட்டு மொத்த தொகையாக செலுத்தப்படும் மற்றும் பாலிசி முடிவடைந்து விடும், மேலும் இந்த பாலிசியின் கீழ் செலுத்த வேண்டிய பலன்கள் ஏதும் இருக்காது.
இறப்பு பேரிலான காப்பீட்டுத் தொகை பின்வருவனவற்றின் அதிகபட்சமாக இருக்கும்
  • காப்பீட்டுத் தொகை = வருடாந்திரமாக்கப்பட்ட பிரீமியத்தின்^ 11 மடங்கு
  • வருடாந்திர உத்தரவாதமான வருமானம் X காரணி 1 + செலுத்த வேண்டிய~ மொத்த பிரீமியங்களின் 110% X காரணி 2
  • இறப்பு தேதி வரை செலுத்தப்பட்ட# மொத்த பிரீமியத்தின் 105%

இதில், காரணி 1 என்பது எதிர்கால உத்தரவாதமான வருமானத்தின் தள்ளுபடி காரணியாகும். காரணி 2 என்பது பட்டுவாடா காலத்தின் இறுதியில் செலுத்தப்பட்ட மொத்த பிரீமியத்தின் 110% க்கான தள்ளுபடி காரணியாகும்.
அதிகரிக்கும் உத்தரவாதமான வருமான விருப்பத்தேர்வுக்காக, பட்டுவாடா காலத்தின் முதல் ஆண்டின் வருடாந்திர உத்தரவாதமான வருமானம் பரிசீலிக்கப்படும்.
காரணிகள், பாலிசி காலவரை, உத்தரவாதமான வருமான விருப்பத்தேர்வு, பட்டுவாடா காலம் மற்றும் இறப்பு கோருரிமை செய்யப்பட்ட பாலிசி ஆண்டு பொறுத்து அமையும்.
^வருடாந்திரமாக்கப்பட்ட பிரீமியம் என்பது ஒரு ஆண்டில் செலுத்தத்தக்க பிரீமியத்தின் மொத்த தொகை, வரிகள் நீங்கலாக, ரைடர் பிரீமியங்கள், காப்புறுதி விண்ணப்ப கணிப்பு கூடுதல் பிரீமியங்கள் மற்றும் மாடல் பிரீமியங்களின் கட்டணங்கள், ஏதேனும் இருப்பின் தவிர்த்து ஆகும்.
#செலுத்தப்பட்ட மொத்த பிரீமியங்கள் என்பது வெளிப்படையாக வசூலிக்கப்பட்டு இருந்தால், ஏதேனும் கூடுதல் பிரீமியம் மற்றும் வரிகள் தவிர்த்து, அடிப்படை திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட அனைத்து பிரீமியங்களின் மொத்தம் ஆகும்.
~செலுத்த வேண்டிய மொத்த பிரீமியங்கள் என்பது வெளிப்படையாக வசூலிக்கப்பட்டு இருந்தால், ஏதேனும் கூடுதல் பிரீமியம் மற்றும் வரிகள் தவிர்த்து, அடிப்படை திட்டத்தின் கீழ் பாலிசி காலவரையின் போது செலுத்த வேண்டிய மொத்த பிரீமியங்கள் ஆகும்.

எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் பிளாட்டினா சுப்ரீம்-இன் இடர் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றிய விவரங்களை மேலும் அறிந்துகொள்ள கீழ்க்கண்ட ஆவணங்களைக் கவனமாகப் படிக்கவும்.
Smart Platina Supreme - Guaranteed Long Term Income Savings Plan
*வயது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளவை யாவும் இப்போது முடிந்து போன பிறந்தநாள் அடிப்படையிலான வயதை குறிக்கும்.
^குறைந்தபட்ச முதிர்வடையும் வயதிற்கு உட்பட்டது. ஆயுள் காப்பீடு செய்துகொண்டவர் வயதுக்கு வராதவர் என்னும் நிலையில், பாலிசியின் துவக்க தேதி மற்றும் இடர் துவக்க தேதி ஒன்றாகவே இருக்கும் மற்றும் பாலிசிதாரர்/முன்மொழிபவர் பெற்றோர்கள் அல்லது சட்டபூர்வ பாதுகாவலராக இருக்கலாம். இது எங்களுடைய குழு ஒப்புதல் வழங்கப்பெற்ற அண்டர்ரைட்டிங் கொள்கையின்படி இருக்க வேண்டும். ஆயுள் காப்பீடு செய்துகொண்டவர் வயதுக்கு வராதவராக இருந்தால், அவர் வயதுக்கு வந்த நிலையை அடைந்ததும் அதாவது 18 வயது ஆன நிலையில் ஆயுள் காப்பீடு செய்யப்பட்ட அவரின் பாதுகாப்புக்கு வந்துவிடும்.
@குறிப்பு: POSPs மற்றும் CPSC-SPV மூலமாக விற்கப்பட்ட எஸ்பிஐ லைஃப் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனியின் அனைத்து பாலிசிகளுக்கும் ஆயுள் பாலிசி ஒன்றுக்கு இறப்பு பேரில் காப்பீடு செய்ய தேவைப்படும் அதிகபட்ச காப்பீட்டுத் தொகை ரூ.25,00,000 லட்சம் ஆகும். எந்தவொரு நிகழ்வையும் ஏற்றுக்கொள்வது குழு அங்கீகரித்த அண்டர்ரைட்டிங் கொள்கைக்கு உட்பட்டதாகும். POSPs மற்றும் CPSC-SPV சேனல் மூலமாக விற்கப்பட்ட பாலிசிகளுடன் ரைடர்களை இணைத்துக் கொள்ள முடியாது.

3G/ver1/12/24/WEB/TAM

*வரிச்சலுகைகள் :

நீங்கள் இந்தியாவில் பொருந்தும் வருமான வரிச் சட்டங்களின்படி, அவ்வப்போது மாறுவதற்கு உட்பட்டு வருமான வரிச் சலுகைகளுக்கு தகுதி உடையவர். மேலும் விவரங்களுக்கு நீங்கள் எங்களுடைய இணையதளத்திற்கு வருகை புரியலாம். விவரங்களுக்கு உங்கள் வரி ஆலோசகருடன் தொடர்பு கொள்ளுங்கள்.
இடர் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றிய மேலதிக விபரங்களுக்கு விற்பனையை முடிக்கும் முன்பாக தயவு செய்து விற்பனை சிற்றேட்டைக் கவனமாகப் படிக்கவும். இடர் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் ரைடர் பற்றிய மேலதிக விபரங்களுக்கு விற்பனையை முடிக்கும் முன்பாக தயவு செய்து விற்பனை ரைடர் சிற்றேட்டைக் கவனமாகப் படிக்கவும்.