Smart Bachat Plus - Best Endowment Assurance Plan | SBI Life Insurance
SBI Logo

Join Us

Tool Free 1800 22 9090

எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் பசத் ப்ளஸ்

UIN: 111N170V01

Product Code: 4A

play icon play icon
SBI Life Smart Bachat Plus Premium Details

சேமிப்பின் உறுதியுடன்
நீங்கள் விரும்பும்
எதிர்காலத்தை
வாழ்ந்திடுங்கள்.

ஒரு தனிப்பட்ட, நான்-லிங்க்டு, பார்ட்டிசிபேட்டிங், ஆயுள் காப்பீட்டு சேமிப்பு திட்டம்.

நமது சொந்த கனவுகள் மற்றும் அபிலாஷைகள் முக்கியமானது என்பதை நினைவில் கொள்ள வேண்டியது இன்றியமையாதது. அவற்றை நிறைவேற்றுவது நமக்கு மட்டும் அல்லாது, நம் அன்புக்கினியவர்களுக்கும் மகிழ்ச்சியையும் பயன்களை அளிக்கும் நோக்கத்தையும் கொண்டதாகும். நமது சொந்த இலக்குகளுக்கு, அது கனவு சுற்றுலாவாக இருந்தாலும் சரி, பொழுதுபோக்கை தொடர்வதாக இருந்தாலும் சரி அல்லது நமது விருப்பப் பட்டியலிலிருந்து தேர்ந்தெடுப்பதாக இருந்தாலும் சரி முன்னுரிமை வழங்க நேரம் ஒதுக்குவது மிகவும் சமநிலையான மற்றும் நிறைவான வாழ்க்கைக்கு வழிவகுக்கிறது.

எஸ்பிஐ லைஃப்-ல், நாங்கள் உங்கள் தேவைகளுக்கு ஏற்ற வகையிலான ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களை வழங்க அர்ப்பணித்துக் கொண்டுள்ளோம். ஆயுள் காப்பீடு அத்துடன் சேமிப்புக்கான உங்கள் தேவையை எதிர்கொள்ள, நாங்கள் உங்களுக்கு எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் பசத் ப்ளஸ் அறிமுகப்படுத்துகிறோம். இது ஒரு தனிப்பட்ட, நான்-லிங்க்டு, பார்டிசிபேட்டிங், ஆயுள் காப்பீட்டு சேமிப்புத் திட்டம் ஆகும். நீங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் கிடைக்கும் இரண்டு விருப்பத்தேர்வுகளிலிருந்து, அதாவது லைஃப் அல்லது லைஃப் ப்ளஸ்-களில் உள்ளமைந்த பலன்களான விபத்து இறப்பு மற்றும் விபத்து மொத்த நிரந்தர இயலாமை (AD&ATPD) ஆகியவற்றிலிருந்து ஒன்றை தேர்வு செய்யலாம். மேலும் இது உங்கள் சொந்த மற்றும் உங்கள் குடும்பத்தினரின் வாழ்க்கை நிலை இலக்குகளின் தேவைகளுக்கு ஏற்ப உங்கள் பிரீமியம் செலுத்தும் காலவரை மற்றும் பாலிசி காலவரையை தேர்வு செய்திடும் நெகிழ்வுத்தன்மையை உங்களுக்கு வழங்குகிறது. இது ஒரு பங்கேற்கும் திட்டமாக இருப்பதால், நிறுவனத்தின் ‘பங்கேற்கும் ஆயுள் காப்பீட்டுத் தொழிலில்’ இருந்து வரும் லாபத்தில் ஒரு பங்கை மீள்வரவு போனஸ் மற்றும் முனைய போனஸ் வடிவில் அறிவிக்கப்பட்டால், பெற தகுதியுடையவராவர்.

சிறப்பம்சங்கள்

SBI Life Smart Bachat Plus

Individual, Non-linked, Participating Endowment Assurance Plan

plan profile

Nikhil, a working professional, has chosen this insurance plan to not only financially secure his family in case of an eventuality but also to safeguard his future.

Fill in the form fields below to get a snapshot of how SBI Life – Smart Bachat will benefit you.

Name:

DOB:

Gender:

Male Female Third Gender

Staff:

Yes No

Choose your policy term...

Plan

Option A (Life)

Option B (Life Plus)

Channel Type

Premium Payment Option

Policy Term

15 30

A little information about the premium options...

Premium Frequency

Sum Assured

2 Lakh No limit

Premium Paying Term


Reset
sum assured

Sum Assured


premium frequency

Premium frequency

Premium amount
(excluding taxes)


premium paying

Premium Payment Term


policy term

Policy Term


maturity benefits

Maturity Benefit

At assumed rate of returns** @ 4%


or
@ 8%

Give a Missed Call

சிறப்பம்சங்கள்

  • உங்கள் காப்பீட்டுத் தேவைகளுக்கு ஏற்ப 2 பலன் விருப்பத்தேர்வுகளிலிருந்து ஒன்றை தொடக்கத்தில் தேர்வு செய்யவும்
    • விருப்பத்தேர்வு A: லைஃப் - இந்த பலன் விருப்பத்தேர்வு என்பது ஆயுள் காப்பீடு மற்றும் வழக்கமான மீள்வரவு போனஸ்களுடன் சேமிப்புகளையும் வழங்குகிறது.
    • விருப்பத்தேர்வு B: லைஃப் ப்ளஸ் - லைஃப் பலன் விருப்பத்தேர்வு கீழ் உள்ள பலன்கள் தவிர, இந்த பலன் விருப்பத்தேர்வு பாலிசி காலவரையின் போது விபத்து இறப்பு மற்றும் விபத்து மொத்த நிரந்தர இயலாமை பேரில் கூடுதல் காப்பீடு வழங்குகிறது.
  • மொத்த பலன் என்பது 'முதிர்ச்சியின் போது உறுதி செய்யப்பட்ட தொகை + நிலையான மீள்வரவு போனஸ்கள் + முனைய போனஸ், அறிவிக்கப்பட்டால்’ ஆகியவற்றிற்கு சமமாக முதிர்வு நிலையில் செலுத்த வேண்டிய தொகையாகும்.
  • உங்கள் பாலிசி காலவரை முழுவதும் அல்லது வரையறுக்கப்பட்ட காலத்திற்கு பிரீமியம் செலுத்தும் நெகிழ்வுத்தன்மை.
  • வருமான வரிச் சட்டம், 1961 கீழ் நடைமுறையில் உள்ள விதிமுறைகளின்படி வரிச் சலுகைகளைப்$ பெறுங்கள்

$இந்தியாவில் பொருந்தும் வருமான வரிச் சட்டங்கள் படி வருமான வரிச் சலுகைகளுக்கு நீங்கள் தகுதி உடையவராகலாம், இது அவ்வப்போது மாற்றத்திற்கு உட்டபட்டது. நீங்கள் இந்த பாலிசியின் கீழ் பொருந்தும் வரிச் சலுகைகளுக்காக உங்கள் வரி ஆலோசகரிடம் கலந்தாலோசிக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

அனுகூலங்கள்

பாதுகாப்பு:

  • பாலிசி காலவரையின்போது ஆயுள் காப்பீடு மூலம் பாதுகாப்பு.

நெகிழ்வுத்தன்மை:

  • உங்கள் பாலிசி காலவரை முழுவதும் (முறையான செலுத்தம்) அல்லது ஒரு வரையறுக்கப்பட்ட காலத்திற்கு (LPPT 7/10/15 ஆண்டுகள்) பிரீமியம் செலுத்துதல்.

எளிமை:

  • எளிய விண்ணப்ப செயல்முறை மற்றும் தொந்தரவு இல்லாத வழங்கல் மூலம் எளிதாக வாங்கலாம்.

நம்பகத்தன்மை:

  • முதிர்வு நிலையில் காப்பீட்டுத் தொகைக்கு சமமானஒட்டுமொத்த முதிர்வுநிலை பலன் + உரிமை மீள்வரவு போனஸ்கள் + முனைய போனஸ், அறிவிக்கப்பட்டால் பெறுவீர்கள்.

இறப்புப் பலன்

  1. நீங்கள் லைஃப் ப்ளஸ் பெனிஃபிட் விருப்பத்தேர்வை தேர்வு செய்திருந்தால் மற்றும் ஆயுள் காப்பீடு செய்யப்பட்டவரின் இறப்பு தேதி அன்று பாலிசி அமலில் இருந்தால், அப்போது பின்வருவனவற்றின் அதிகபட்சம் அளிக்கப்படும்:
    1. இறப்பின் பேரில் காப்பீட்டுத் தொகை அத்துடன் உரிமை மீள்வரவு போனஸ்கள் அத்துடன் முனைய போனஸ், அறிவிக்கப்பட்டிருந்தால் அல்லது
    2. இறப்பு தேதி வரை செலுத்தப்பட்ட மொத்த பிரீமியத்தின் 105%

    எங்கே;
    இறப்பு பேரிலான காப்பீட்டுத்தொகை காப்பீட்டுத்தொகையை விட அதிகமாக இருக்கும் அல்லது வருடாந்திரமாக்கப்பட்ட பிரீமியத்தின் 11 மடங்குகள் ஆகும்.
    வருடாந்திரமாக்கப்பட்ட பிரீமியம் என்பது ஒரு ஆண்டில் செலுத்தத்தக்க பிரீமியத்தின் மொத்த தொகை, வரிகள் நீங்கலாக, ரைடர் பிரீமியங்கள், காப்புறுதி விண்ணப்ப கணிப்பு கூடுதல் பிரீமியங்கள் மற்றும் மாடல் பிரீமியங்களின் கட்டணங்கள், ஏதேனும் இருப்பின் தவிர்த்து ஆகும்.
    செலுத்தப்பட்ட மொத்த பிரீமியங்கள் என்பது வெளிப்படையாக வசூலிக்கப்பட்டு இருந்தால், ஏதேனும் கூடுதல் பிரீமியம் மற்றும் வரிகள் தவிர்த்து, அடிப்படை திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட அனைத்து பிரீமியங்களின் மொத்தம் ஆகும்.
  2. நீங்கள் லைஃப் ப்ளஸ் பலன் விருப்பத்தேர்வை தேர்வு செய்திருந்தால் மற்றும் விபத்து தவிர பிற காரணங்களுக்காக ஆயுள் காப்பீட்டுதாரரின் இறப்பு தேதியில் பாலிசி அமலில் இருந்தால், அப்போது மேலே புள்ளி (i) இல் குறிப்பிட்டுள்ள படி தொகை செலுத்தப்படும்.
  3. நீங்கள் 'லைஃப் ப்ளஸ்' பெனிஃபிட் விருப்பத்தேர்வை தேர்வு செய்திருந்தால் மற்றும் ஆயுள் காப்பீடு செய்யப்பட்ட வரின் விபத்து இறப்புக்கு வழிவகுக்கும் விபத்து தேதி அன்று பாலிசி அமலில் இருந்தால், அப்போது பின்வருபவை அளிக்கப்படும்:
    1. . மேலே புள்ளி (i)-ல் குறிப்பிடப் பட்டுள்ளபடி தொகை
      அத்துடன்
    2. காப்பீட்டுத்தொகைக்கு இணையான கூடுதல் தொகை செலுத்தப்படும்.

இறப்புப் பலன் செலுத்தப்பட்ட பிறகு, பாலிசி முடிந்துவிடும் மற்றும் மேலும் பாலிசியின் கீழ் வேறு எந்த சலுகைகளும் கிடைக்காது.

விபத்து மொத்த நிரந்தர இயலாமை பலன் (லைஃப் ப்ளஸ் பலன் விருப்பத்தேர்வு கீழ் மட்டுமே பொருந்தும்)

நீங்கள் லைஃப் ப்ளஸ் பலன் விருப்பத்தேர்வை தேர்வு செய்திருந்தால் மற்றும் விபத்து மொத்த நிரந்தர இயலாமைக்கு வழிவகுத்திருக்கும் தேதியின் படி காப்பீட்டுத் தொகைக்கு சமமான தொகை செலுத்தப்படும் அத்துடன் இந்த பாலிசியின் கீழ் செலுத்த வேண்டிய எதிர்கால பிரீமியங்கள் (ஏதேனும் இருந்தால்) தள்ளுபடி செய்யப்படும்.

விபத்து மொத்த நிரந்தர இயலாமை பலன் செலுத்தப்பட்ட பிறகு, விபத்து இறப்பு மற்றும் விபத்து மொத்த நிரந்தர இயலாமை (AD&ATPD) பலன் இல்லாமல் பாலிசி தொடரும்.

முதிர்வுநிலை பலன்:

பாலிசி அமலில் இருந்தால் மற்றும் ஆயுள் காப்பீட்டுதாரர் பாலிசி காலவரையின் இறுதி வரை வாழ்ந்துகொண்டிருக்கும் பட்சத்தில், அப்போது பாலிசி காலவரையின் இறுதியில் முதிர்வுநிலை பெரில் காப்பீட்டுத் தொகை அத்துடன் உரிமை மீள்வரவு போனஸ்கள் + முனைய போனஸ் (அறிவிக்கப்பட்டால்) செலுத்தப்படும்.
இதில், முதிர்வுநிலை பெரிலான காப்பீட்டுத் தொகை என்பது காப்பீட்டுத் தொகைக்கு சமமாக இருக்கும்.
எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் பசத் ப்ளஸ்-இன் இடர் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றிய விவரங்களை மேலும் அறிந்துகொள்ள கீழ்க்கண்ட ஆவணங்களைக் கவனமாகப் படிக்கவும்.
SBI Life Smart Bachat Plus Plan
^அனைத்து வயதுக்கான குறிப்பாதாரங்களும் கடந்த பிறந்தநாள் படியுள்ள வயதை குறிக்கும்.
^^மேலுள்ள குறைந்தபட்ச பிரீமியம் தொகை வரிகள் நீங்கலாக மற்றும் காப்பீட்டு கணிப்பு கட்டணம், ஏதேனும் இருந்தால் நீங்கலாக ஆகும். வரிகள் நிலவும் வரிச்சட்டங்களின் படி பொருந்தும்.
#மாதாந்திர வகைக்காக, 3 மாதங்கள் வரை பிரீமியம் முன்பணமாக செலுத்த வேண்டும். புதுப்பிப்பு பிரீமியம் பணச் செலுத்துதல் எலெக்ட்ரானிக் கிளியரிங் சிஸ்டம் (இசிஎஸ்)
ஆயுள் காப்பீட்டுதாரர் வயதுக்கு வராதவர் என்றால், 18 வயது நிறைவடைந்த உடனேயே அல்லது அதற்கு பிறகு பாலிசி ஆண்டுநிறைவின் போது தானாகவே பாலிசி செய்யப்பட்டவருக்கு வழங்கப்படும். மேலும் அந்த உரிமை நிறுவனத்திற்கும் காப்பீட்டுதாரருக்கும் இடையே ஓர் ஒப்பந்தமாகக் கருதப்படும்.

4A/ver1/12/24/WEB/TAM

*வரிச்சலுகைகள்:
வரிச் சலுகைகள் வருமான வரி சட்டங்களின்படி கிடைப்பதால் அவை அவ்வப்போது மாற்றங்களுக்கு உட்பட்டவையாக இருக்கும். விபரங்களுக்கு உங்கள் வரி ஆலோசகருடன் தொடர்பு கொள்ளுங்கள்.
நீங்கள் இந்தியாவில் பொருந்தும் வருமான வரிச் சட்டங்களின்படி, அவ்வப்போது மாறுவதற்கு உட்பட்டு வருமான வரிச் சலுகைகளுக்கு தகுதி உடையவர். மேலும் விவரங்களுக்கு நீங்கள் எங்களுடைய இணையதளத்திற்கு வருகை புரியலாம்.