UIN: 111N093V01
Product Code: 1M
தனிநபருக்கான, பார்டிசிபேட்டிங், மாறும் இயல்புடைய காப்பீட்டுத் திட்டம்
அம்சங்கள்
பயன்கள்
பாதுகாப்பு
நம்பகத்தன்மை
வசதிக்கேற்றது
பணமாக்கும் வசதி
வரிப் பலன்களைப் பெறுங்கள்*
• இறப்பின்போது
எதிர்பாராத விதமாக, ஆயுள் காப்பீடுதாரர் இறக்க நேர்ந்தால், பின்வரும் பலனை, பயனாளிக்கு வழங்கப்படும்:
கோல்ட் விருப்பத்தைத் தேர்வுசெய்தால்: பாலிசி கணக்கின் மதிப்பு$ அல்லது உத்தரவாதம் அளிக்கப்பட்ட தொகை^/செலுத்தப்பட்ட உத்திரவாதம் அளிக்கப்பட்ட தொகை^ இவற்றில் எது அதிகமோ அது செலுத்தப்படும்; இறப்பு உரிமைகோரல் குறித்த தகவல் அறிவிக்கப்பட்ட தேதி வரை செலுத்திய பிரீமியம் தொகையில் 105% குறைந்தபட்சம்.
^60 வயதுக்குக் கீழே ஒருவர் இறக்கும்பட்சத்தில், இறந்த தேதியில் இருந்து கடந்த 2 ஆண்டுகளில் பகுதியாகப் பெற்ற தொகைக்கு இணையாக, உத்திரவாதம் அளிக்கப்பட்ட தொகையில் இருந்து அது கழிக்கப்படும். 60 வயது அல்லது அதற்கு மேல் ஒருவர் இறக்கும்பட்சத்தில், 58 வயதில் இருந்து அவர் பகுதியாகப் பெற்ற தொகை கணக்கிடப்படும்.
பிளாட்டினம் விருப்பத்தைத் தேர்வுசெய்தால்: பாலிசி கணக்கின் மதிப்பு $PLUS உத்திரவாதம் அளிக்கப்பட்ட தொகை / செலுத்தப்பட்ட உத்தரவாதம் அளிக்கப்பட்ட தொகை இவற்றில் எது அதிகமோ அது செலுத்தப்படும்; இறப்பு உரிமைகோரல் குறித்த தகவல் அறிவிக்கப்பட்ட தேதி வரை செலுத்திய பிரீமியம் தொகையில் 105% குறைந்தபட்சம்.
உயிர் வாழும்போது
முதிர்வுப் பலன்: முதிர்வின்போது, பாலிசி கணக்கு மதிப்பைப்$ பெற பாலிசிதாரர் தகுதி பெறுவார். இதனுடன் சேர்த்து, இறுதிகட்ட போனஸ் வட்டி விகிதம் ஏதும் இருந்தால், அது முதிர்வுத் தேதியின் படி கணக்கிடப்பட்டு, முதிர்வின்போது மொத்தமாக வழங்கப்படும்.
$ பாலிசி கணக்கு மதிப்பு
பாலிசி கணக்கில், உங்களுக்குச் சேர வேண்டிய நிதியின் மதிப்பு குறிப்பிடப்பட்டிருக்கும். செலுத்திய பிரீமியங்கள் பாலிசி கணக்கில் கிரெடிட் செய்யப்படும். பாலிசியின்படி அனைத்து பிரீமியம் ஒதுக்கீட்டுத் தொகையின் நிகரத் தொகையும், கீழே கூறப்பட்டுள்ள சேர்ப்புகளும் கிரெடிட் செய்யப்படும். மற்ற அனைத்து கட்டணங்களும், பாலிசிக் கணக்கு மதிப்பில் இருந்து பெறப்படும். உங்களுக்குச் செலுத்தப்பட்ட பணம், பே அவுட் போன்றவை அனைத்தும் உங்கள் பாலிசி கணக்கில் இருந்து கழிக்கப்படும்.
பாலிசி கணக்கில் சேர்க்கப்படும் பல்வேறு வகையான சேர்ப்புகள் கீழே கூறப்பட்டுள்ளன -
*வரிப் பலன்கள்:
அவ்வப்போது மாறும் பொருந்தக்கூடிய இந்திய வருமான வரிச் சட்டங்களின்படி வருமான வரிப் பலன்கள்/விலக்குகளைப் பெறத் தகுதி உள்ளது. கூடுதல் தகவலுக்கு எங்கள் இணையதளத்தைப் பார்வையிடவும்: http://www.sbilife.co.in/sbilife/content/21_3672#5. விவரங்களுக்கு உங்கள் வரி ஆலோசகரைத் தொடர்பு கொள்ளவும்.
1M.ver.04-10/17 WEB TAM