எஸ்பிஐ லைஃப் சிஎஸ்சி சாரல் சஞ்சய்| வேரியபிள் லைஃப் இன்சூரன்ஸ் ப்ளான்
SBI Logo

Join Us

Tool Free 1800 22 9090

எஸ்பிஐ லைஃப் - சிஎஸ்சி சரல் சஞ்ஜை

UIN: 111N099V01

Product Code: 1T

null

சிறிய முதலீடு மூலம், மகிழ்ச்சியுடன் கூடிய பாதுகாப்பைப் பெறுங்கள்.

  • ஆயுள் காப்பீடுடன் சேமிப்பு
  • காலாண்டு வட்டி கூட்டுத்தொகை
  • பகுதியளவு பணமெடுக்கும் வசதி
தனிநபருக்கான, நான் லிங்க்டு, நான் பார்டிசிபேட்டிங், மாறக்கூடிய காப்பீட்டுத் திட்டம்

ஒப்பந்தத்தின் முதல் ஐந்து ஆண்டுகளுக்கு பணமாக்கும் வாய்ப்பை இந்தத் திட்டம் வழங்கவில்லை. பாலிசியின் 5ஆம் ஆண்டு முடியும் வரை, இந்தத் திட்டத்தில் முதலீடு செய்த பணத்தை முழுமையாகவோ, பகுதியாகவோ பாலிசிதாரர் பெற முடியாது.

குறைந்த செலவில் பாதுகாப்பைப் பெறவும் பாலிசி டெர்ம் இறுதியில் உத்தரவாதமான பலன்களைப் பெறவும் விரும்புகிறீர்களா?


எஸ்பிஐ லைஃப் - சிஎஸ்சி சரல் சஞ்ஜை திட்டத்தின் மூலம் சேமிப்பு மற்றும் காப்பீடு என்ற இரட்டைப் பலன்களைப் பெறுங்கள்.

இந்தத் திட்டம் வழங்கும் நன்மைகள் –
  • பாதுகாப்பு -ஏதேனும் நிகழ்வின்போது உங்கள் குடும்பத்தைப் பாதுகாக்கிறது
  • நம்பகத்தன்மை – உங்கள் பாலிசிக்கு காலாண்டு வட்டியின் கூட்டுத்தொகை
  • வசதி – உங்கள் பாலிசி கணக்கை டாப் அப் செய்வதற்கு
  • எளிமையானது – உடனடி காப்பீடு
  • பணமாக்கும் வசதி –பாலிசியின் 6வது ஆண்டு முதல் பகுதியளவு பணம் பெறலாம்

உங்கள் பேரின்ப வாழ்க்கையை வழங்குவதற்கு சிறிய சேமிப்புகள் உதவும்.

ஹைலைட்ஸ்

null

தனிநபருக்கான, நான் லிங்க்டு, நான் பார்டிசிபேட்டிங், மாறக்கூடிய காப்பீட்டுத் திட்டம்

அம்சங்கள்
  • சேமிப்புடன் கூடிய காப்பீட்டு திட்டம்
  • பாலிசி டெர்ம் முழுவதும்காலாண்டு வட்டி கூட்டுத்தொகை
  • டாப் அப் வசதி /li>
  • ஆதார் அடிப்படையில் பாலிசிக்கு விண்ணப்பிக்கும் செயல்முறை
  • 6வது பாலிசி ஆண்டு முதல் பகுதியளவு பணம் பெறும் வசதி
பயன்கள்
பாதுகாப்பு
  • ஒரே திட்டத்தின் கீழ் உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தைப் பாதுகாத்தல் மற்றும் உங்கள் சேமிப்புகளை அதிகப்படுத்துதல் போன்ற இரட்டைப் பலன்களை அனுபவியுங்கள்
நம்பகத்தன்மை
  • உங்கள் பணத்தை அதிகப்படுத்துவதற்கு, குறைந்தபட்ச ஃப்ளோர் விகிதம் ஆண்டு ஒன்றுக்கு 1% என, பாலிசி டெர்ம் முழுவதும் செலுத்தப்படும்
வசதிக்கேற்றது
  • உங்கள் தொகையைப் பெருக்க, ஒரே பாலிசியில் கூடுதல் ஃபண்டுகளை முதலீடு செய்வதைத் தேர்ந்தெடுங்கள்
  • உங்கள் வசதிக்கு ஏற்ப பிரீமியம் செலுத்தும் கால இடைவெளியைத் தேர்வு செய்யுங்கள்
எளிமையானது
  • உங்கள் ஆதார் எண் மூலம் எளிதாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
  • உடனடியாக உங்கள் பாலிசியைப் பெற, ஏதேனும் சிஎஸ்சி அணுகுங்கள்
பணமாக்கும் வசதி
  • எதிர்பாராத செலவுகளைச் எதிர்கொள்ள 6வது பாலிசி ஆண்டிலிருந்து பகுதியளவு பணம் பெறலாம்
வரிப் பலன்களைப் பெறுங்கள்*
இறப்புப் பலன்
இந்தப் பாலிசி டெர்மின்போது காப்பீடுதாரர் இறந்துவிட்டால், கீழே வரையறுக்கப்பட்டுள்ள A, B, C மற்றும் D ஆகியவற்றில் எது அதிகமோ, பாலிசி செயல்பாட்டில் இருக்கும்பட்சத்தில், அந்தத் தொகை செலுத்தப்படும்:
  • உத்தரவாதம் அளிக்கப்பட்ட தொகை
  • செலுத்தப்பட்ட பிரீமியம் தொகையில் 105%, இறக்கும் தேதிவரை செலுத்தப்பட்ட டாப் அப் பிரீமியம் உள்பட.
  • செலுத்தப்பட்ட பிரீமியம் தொகையுடன், இறக்கும் தேதிவரை செலுத்தப்பட்ட டாப் அப் பிரீமியத்தில் ஆண்டுக்கு 1.00% என்று கணக்கிடப்பட்டு வழங்கப்படும்.
  • உங்கள் தனிப்பட்ட பாலிசி கணக்கில் உள்ள மீதமுள்ள தொகை (IPA)
முதிர்வு பலன்
பாலிசி டெர்ம் முடியும் வரை, காப்பீடு பெற்றவர் உயிருடன் இருக்கும்பட்சத்தில், A அல்லது B, இவற்றில் எது அதிகமோ, அந்தத் தொகை பின்வரும் நிபந்தனையில் வழங்கப்படும்:
  • செலுத்தப்பட்ட பிரீமியம் தொகையுடன், முதிர்வுத் தேதிவரை செலுத்தப்பட்ட டாப் அப் பிரீமியத்தில் ஆண்டுக்கு 1.00% என்று கணக்கிடப்பட்டு வழங்கப்படும். பகுதியாகப் பணம் எடுக்கப்பட்டால், அந்தத் தொகை கழிக்கப்படும்.
  • முதிர்வுத் தேதியில் உங்கள் IPA இல் உள்ள இருப்பு.

மேலே குறிப்பிட்டுள்ள பலன், பாலிசி டெர்ம் முடியும் தருவாயில், செயல்பாட்டில் இருந்தால் மட்டுமே செலுத்தப்படும்.
குறிப்பு: இறப்பு அல்லது முதிர்வுப் பலன்களுக்கு, மீதமுள்ள காலாண்டு காலத்துக்கு, முன்கூட்டியே கிரெடிட் செய்யப்படும் வட்டியானது, IPA இருப்பில் இருந்து கழிக்கப்படும்.
*வரிப் பலன்கள்
  • செலுத்தப்படும் பிரீமியம் தொகைக்கான வரிச் சலுகை, 1961 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டப் பிரிவு 80 C இன்படி வழங்கப்படும். இருப்பினும், ஒரு நிதியாண்டில் செலுத்தப்பட்ட பிரீமியம் தொகை, உத்தரவாதம் அளிக்கப்பட்ட அசல் மூலதனத் தொகையில் 10% க்கு அதிகமாக இருந்தால், வரிச் சலுகையானது, உத்தரவாதம் அளிக்கப்பட்ட தொகையில் 10% க்கு வரம்பிடப்படும்.
  • 1961 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டம் 10 (10D) பிரிவின் படி வரி விலக்கு உண்டு. பாலிசி டெர்மில், ஏதாவது ஒரு ஆண்டில், செலுத்தப்படும் பிரீமியமானது, உத்தரவாதம் அளிக்கப்பட்ட அசல் மூலதனத் தொகையில் 10%க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • வருமான வரிச் சட்டங்களுக்கு இணங்க வரிச் சலுகைகளைப் பெறலாம். இது அவ்வப்போது மாறக்கூடியது. விவரங்களுக்கு உங்கள் வரி ஆலோசகரைத் தொடர்பு கொள்ளவும்.

அபாயக் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்த கூடுதல் விவரங்களுக்கு, வாங்குவதற்கு முன்பு, விற்பனைச் சிற்றேட்டைப் படிக்கவும்.
எஸ்பிஐ லைஃப் - சிஎஸ்சி சரல் சஞ்ஜையின் அபாயக் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்த கூடுதல் விவரங்களுக்கு, பின்வரும் ஆவணங்களைக் கவனமாகப் படிக்கவும்.
null
* வயது தொடர்பான அனைத்து குறிப்புகளும் கடைசி பிறந்த நாளின்படி கணக்கிடப்படும்.

1T.ver.02-06/17 WEB TAM

ஆபத்துக் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பற்றிய அதிக விவரங்களுக்கு, ஒப்புதல் தெரிவிப்பதற்கு முன்னர், விற்பனைச் சிற்றேட்டைக் கவனமாகப் படிக்கவும்.

*வருமான வரிச்:
வருமான வரிச் சட்டங்களின்படி வரிப் பலன்கள் வழங்கப்படுகிறது. அவை அவ்வப்போது மாற்றத்திற்குரியது. விவரங்களுக்கு, உங்களின் வரி ஆலோசகரின் ஆலோசனையைப் பெறவும்.
ஒவ்வொரு திட்டப் பக்கத்திலும் திட்டப் பலன்களுக்குக் கீழே மேலும் ஒரு வரிப் பொறுப்புத் துறப்பு உள்ளது. இந்தியாவில் பொருந்தக்கூடிய வருமான வரி சட்டங்களின்படி, நீங்கள் வருமான வரிப் பலன்கள் / விலக்குகள் ஆகியவற்றைப் பெற தகுதியுடையவராவீர். இது அவ்வப்போது மாற்றத்திற்குரியது. மேலும் விவரங்களுக்கு எங்களின் இணையதளத்தைப் பார்வையிடலாம் விவரங்களுக்கு, உங்கள் வரி ஆலோசகரின் ஆலோசனையைப் பெறவும்.