மைக்ரோ இன்ஷ்யூரன்ஸ் ப்ளான்- எஸ்பிஐ லைஃப் ஷக்தி/ 50% ரேட் ஆஃப் ரிட்டர்ன்
SBI Logo

Join Us

Tool Free 1800 22 9090

எஸ்பிஐ லைஃப் – சக்தி

UIN: 111N038V03

திட்டக் குறியீடு: 095

null

ஒரு குரூப் மைக்ரோ டேர்ம் இன்ஷ்யூரன்ஸ் திட்டம், முதிர்வு நிலையில் 50% பிரீமியம் திருப்பி அளிக்கத்தக்கது.

  • கட்டுபடியாகும் காப்பீட்டு காப்பு
  • காப்புத் தொகையின் இணக்கத்தன்மை
  • முதிர்வு நிலையில் பிரீமியம் திருப்பி அளித்தல்
ஒரு நான்-லிங்க்டு, நான்-பார்ட்டிசிபேட்டிங் குரூப் மைக்ரோ டேர்ம் இன்ஷ்யூரன்ஸ் திட்டம், முதிர்வு நிலையில் 50% பிரீமியம் திருப்பி அளிக்கத்தக்கது.

நீங்கள் உங்களுடைய உறுப்பினர்களின் ஆயுள்களுக்காக பாதுகாப்பு அளிக்க கட்டுபடியாகும் திட்டத்தை எதிர்நோக்கி இருக்கின்ற ஒரு நுண் நிதிசார் நிறுவனமா (எம்எஃப்ஐ) அல்லது அரசு சாரா நிறுவனமா (என்ஜிஒ)?

எஸ்பிஐ லைஃப் - சக்தி உங்கள் உறுப்பினர்களுக்கு காப்பு வழங்கிட பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டது. தவிர அவர்கள் முதிர்வு நிலையில் 50% பிரீமியம் திருப்பிப் பெறுவார்கள்.

எஸ்பிஐ லைஃப் - சக்தி திட்டம் வழங்குவது
  • பாதுகாப்பு – ஏதேனும் நிகழ்வின்போது உங்கள் உறுப்பினர்களைப் பாதுகாக்கிறது மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு பாதுகாப்பளிக்கிறது
  • நம்பகத்தன்மை - முதிர்வு நிலையில் 50% பிரீமியம் ருப்பி அளிப்பதன் மூலம்.
  • இணக்கத்தன்மை - உங்கள் உறுப்பினர்களின் தேவைகளுக்கு ஏற்ப காப்பீட்டுத் தொகையை தேர்வு செயதிட
  • கட்டுப்படியானது – சரியான பிரீமியங்கள்

உங்கள் உறுப்பினர்கள் தங்களுடைய நிதிசார் சுதந்திரமான பயணத்தில் அவர்களுக்கு ஆதரவு அளித்திடுங்கள்.

ஹைலைட்ஸ்

null

நான் லிங்க்டு, நான் பார்டிசிபேட்டிங் குரூப் மைக்ரோ இன்சூரன்ஸ் திட்டம்

சிறப்பு அம்சங்கள்


  • குழுமத்திற்காக ஆயுள் காப்பு வழங்கப்படுகிறது
  • முதிர்வு நிலையில் பிரீமியம் திருப்பி அளித்தல்
  • உறுப்பினர்களின் தேவைகளுக்கு ஏற்ப காப்பீட்டுத் தொகையை தேர்வு செயதிட விருப்பத்தேர்வு, உச்ச வரம்பு ரூ.2,00,000 வரை
  • கட்டுபடியாகும் பிரீமியம் தொகைகளின் வரிசை

பயன்கள்

பாதுகாப்பு
  • குழும உறுப்பினர்களுக்கு ஆபத்து காப்பீடு வழங்குகிறது மற்றும் ஏதேனும் சம்பவம் நிகழ் நிலையில் அவர்களுடைய குடும்பங்களுக்கு பாதுகாப்பு வழங்குகிறது.
நம்பகத்தன்மை
  • முதிர்வு நிலையில், செலுத்தப்பட்ட பிரீமியம் 50% திருப்பி அளித்தல் மூலம் உங்களுடைய உறுப்பினர்களுக்கு உத்தரவாதமான பலன்கள்.
வசதிக்கேற்றது
  • உங்கள் குழும உறுப்பினர்களுக்கு அவர்களுடைய நிதிசார் தேவைகளுக்கு ஏற்ப காப்பீடு.
கட்டுப்படியானது
  • உங்கள் குழும உறுப்பினர்களுக்கு ஒரு நியாயமான கட்டணத்தில் காப்பீட்டுப் பலன்களை வழங்குகிறது.
இறப்புப் பலன்கள்
பாலிசி காலவரையின்போது காப்பீடு செய்துகொண்டவர் மரணம் அடைந்துவிடும் நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட காப்பீட்டுத்தொகை செலுத்தத்தக்கதாகும்.
முதிர்வுகாலப் பலன்
ஆயுள் காப்பீட்டுதாரரின் வாழ்நாள் பேரில் பாலிசி காலவரை இறுதிவரை, செலுத்தப்பட்ட மொத்த பிரீமியங்களின் 50% (பொருந்தும் வரிகள் நீங்கலாக) திருப்பி அளிக்கப்படும்.
இதர தகவல்
  • ஒப்புவித்தல்
    உறுப்பினர் முதல் பாலிசி ஆண்டுக்குப் பிறகு மற்றும் முதிர்வடையும் தேதிக்கு முன்பாக எந்த நேரத்திலும், ஒப்புவிப்பு மதிப்புக்கு பாலிசியை ஒப்புவிப்பு செய்வதன் மூலம் 2 முழு ஆண்டுகளின் பிரீமியம் செலுத்தப்பட்டிருப்தற்கு உட்பட்டு, அமலில் உள்ள அல்லது பெய்டு-அப் பாலிசியை நிறுத்திக் கொள்ளலாம்.
  • சலுகைக் காலம்
    பிரீமியம் கெடு தேதியிலிருந்து சலுகைக் காலம் 30 நாட்கள் அனுமதிக்கப்படுகிறது.
  • செலுத்தப்பட்ட மதிப்பு
    காப்பீட்டு உறுப்பினர் சலுகைக் காலத்திற்குள்ளாக பணம் செலுத்தமுடிய வில்லை என்றால், அவர்/அவள் இன்னும் காப்பீட்டு நிலையிலேயே இருப்பார்கள், ஆனால் குறைக்கப்பட்ட இறப்பு/முதிர்வு நிலை பலனுக்காக ஆகும். முதல் 2 ஆண்டுகளுக்கான பிரீமியங்கள் செலுத்தப்பட்டிருப்பின் மட்டுமே காப்பீட்டு காப்பு செலுத்தப்பட்ட மதிப்பை பெறும்.
  • ரிவைவல்
    முதல் செலுத்தப்படாத பிரீமியம் கெடு தேதியிலிருந்து 2 ஆண்டு காலத்திற்குள்ளாக உறுப்பினரின் ஆயுள் காப்பீட்டை புதுப்பித்துக்கொள்ள உறுப்பினருக்கு அல்லது மாஸ்டர் பாலிசிதாரருக்கு விருப்பத் தேர்வு உள்ளது.
  • இலவச சலுகைக் காலம்
    இது ஒரு கட்டாய திட்டமாக இருக்கும்பட்சம் (பங்கேற்பதற்காக முடிவு செய்தல் உறுப்பினர் வசம் இல்லாத போது மற்றும் இந்தத் திட்டத்தில் சேர வேண்டியது உறுப்பினருக்கு கட்டாயம் என்னும்நிலையில்) ஃப்ரீ-லுக் காலத்தின்போது ரத்து செய்வதற்கான விருப்பத்தேர்வு உறுப்பினருக்கு கிடைப்பதில்லை மற்றும் மாஸ்டர் பாலிசிதாரரிடம் மட்டுமே கிடைக்கிறது.
    • இது ஒரு தன்னார்வத்தினாலான திட்டமாக இருக்கும்பட்சம் (இந்தத் திட்டத்தில் பங்கேற்பதற்காக முடிவு செய்தல் உறுப்பினர் வசம் இருந்து நீங்களே திட்டத்தில் சேர முடிவு செய்யும் பட்சம்) பாலிசிதாரருடன் சேர்ந்து, காப்பீடு செய்துகொண்ட உறுப்பினர் நேரடியாக சந்தையிலிருந்து பெறுவதை தவிர வேறு சேனல் மூலமாக பெற்ற பாலிசிக்காக காப்பீட்டுச் சான்றிதழ் பெற்றுக்கொண்ட தேதியிலிருந்து 15 நாட்களுக்குள்ளாக, அல்லது நேரடி சந்தைப்படுத்தல் மூலம் பெற்ற பாலிசி என்னும் பட்சம் காப்பீட்டுச் சான்றிதழ் பெற்றுக்கொண்ட தேதியிலிருந்து 30 நாட்களுக்குள்ளாக, உறுப்பினர் பாலிசியின் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் மறுஆய்வு செய்யலாம் மற்றும் உறுப்பினருக்கு திருப்தி ஏற்படவில்லை என்றால் அல்லது விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் ஏதேனும் உறுப்பினருக்கு ஏற்புடையதாக இல்லை என்றால், மறுப்பதற்கான காரணங்களை சுட்டிக்காட்டி காப்பீட்டுச் சான்றிதழை திருப்பி அளிக்க அவருக்கு/அவளுக்கு விருப்பத்தேர்வு உண்டு. இத்தகைய எந்த வேண்டுகோளும் மாஸ்டர் பாலிசிதாரர் மூலம் வரவேண்டும். செலுத்தப்பட்ட பிரீமியங்கள் மாஸ்டர் பாலிசிதாரர் மூலமாக முத்திரை வரி ஆன செலவுகழித்துக்கொண்ட பிறகு திருப்பி அளிக்கப்படும்.
  • கடன் வசதி
    இந்தத் திட்டத்தின் கீழ் கடன்கள் ஏதும் கிடைப்பதில்லை.
  • விலக்குகள்
    • தற்கொலை
      ஆயுள் காப்பீட்டு குரூப் உறுப்பினர் புத்தியுடையவராகவோ அல்லது பித்து பிடித்தவராகவோ இருந்தாலும், காப்பீட்டு காப்புறுதி இடர் துவங்கிய தேதியிலிருந்து அல்லது இடர் காப்புறுதியின் புதுப்பிப்பு தேதியிலிருந்து ஓர் ஆண்டுக்குள், தற்கொலை செய்து கொண்டால், குரூப் உறுப்பினருக்கு காப்பீட்டுத்தொகை பலன் அளிக்கப்பட மாட்டாது. இத்தகைய நிலையில், மரணத்தின் தேதிவரை உறுப்பினருக்காக இந்த பாலிசியின் கீழ் அதிகபட்சமாக செலுத்தப்பட்ட பிரீமியங்களின் 80%, அல்லது ஒப்புவிப்பு மதிப்பு திருப்பித் தரப்படும்.

எஸ்பிஐ லைஃப் – சக்தி அபாயக் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்த கூடுதல் விவரங்களுக்கு, பின்வரும் ஆவணங்களைக் கவனமாகப் படிக்கவும்.

null
$கடைசி பிறந்த நாளின்படி வயது தொடர்பான அனைத்து பரிந்துரைகளும் கணக்கிடப்படும்.
**பொருந்தும் வகையில் வரிகள் மற்றும் தீர்வைகள், கூடுதலாக விதிக்கப்படும்.
^அனைத்து எஸ்பிஐ லைஃப் குரூப் நுண் காப்பீட்டுத் திட்டங்களின் ஒட்டுமொத்த காப்பீட்டுத்தொகை குரூப் உறுப்பினர் ஒருவருக்கு ரூ.2,00,000 என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

95.ver.01-03/18 WEB TAM

ஆபத்துக் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பற்றிய அதிக விவரங்களுக்கு, ஒப்புதல் தெரிவிப்பதற்கு முன்னர், விற்பனைச் சிற்றேட்டைக் கவனமாகப் படிக்கவும்.

வருமான வரிச்:
வருமான வரிச் சட்டங்களின்படி வரிப் பலன்கள் வழங்கப்படுகிறது. அவை அவ்வப்போது மாற்றத்திற்குரியது. விவரங்களுக்கு, உங்களின் வரி ஆலோசகரின் ஆலோசனையைப் பெறவும்.
ஒவ்வொரு திட்டப் பக்கத்திலும் திட்டப் பலன்களுக்குக் கீழே மேலும் ஒரு வரிப் பொறுப்புத் துறப்பு உள்ளது. இந்தியாவில் பொருந்தக்கூடிய வருமான வரி சட்டங்களின்படி, நீங்கள் வருமான வரிப் பலன்கள் / விலக்குகள் ஆகியவற்றைப் பெற தகுதியுடையவராவீர். இது அவ்வப்போது மாற்றத்திற்குரியது. மேலும் விவரங்களுக்கு எங்களின் இணையதளத்தைப் பார்வையிடலாம் விவரங்களுக்கு, உங்கள் வரி ஆலோசகரின் ஆலோசனையைப் பெறவும்.