eWealth Plus | Online Unit Linked Insurance Plan | SBI Life Insurance
SBI Logo

Join Us

Tool Free 1800 22 9090

எஸ்பிஐ லைஃப் - இவெல்த் ப்ளஸ்

UIN: 111L147V01

Product Code: 3R

play icon play icon
SBI life eWealth Plus - ULIP Plans

ஓர் எளிய வழியில் உங்கள் செல்வத்தை அதிகரிக்கச்
செய்யும் ஒரு திட்டம்.

Calculate Premium
ஒரு தனிப்பட்ட, யூனிட்-லிங்க்டு, நான்-பார்ட்டிசிபேட்டிங், லைஃப் இன்ஷ்யூரன்ஸ், சேமிப்புத் திட்டம்.
 
"யூனிட் லிங்க்டு இன்ஷ்யூரன்ஸ் திட்டங்கள் ஒப்பந்தத்தின் முதல் ஐந்து ஆண்டுகளுக்கு எந்த ரொக்கமாக்கலையும் வழங்குவதில்லை. பாலிசிதாரர்கள் ஐந்தாவது ஆண்டின் இறுதிவரை யூனிட் லிங்க்டு இன்ஷ்யூரன்ஸ் திட்டங்களில் முதலீடு செய்த பணத்தை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ஒப்புவிப்பு செய்ய அல்லது திரும்பப் பெற்றுக்கொள்ள முடியாது"

சிக்கலான கொள்முதல் செயல்முறை உங்களை யூனிட் லிங்க்டு இன்ஷ்யூரன்ஸ் திட்டங்கள் கொள்முதல் செய்வதை ஊக்குவிக்கவில்லையா?

இப்போது எளிமையாக்கப்பட்ட, 3-படி ஆன்லைன் வாங்கும் செய்முறை கொண்டு யூலிப்களின் பலன்களைப் பெற்று அனுபவிக்கலாம். எஸ்பிஐ லைஃப் - இவெல்த் ப்ளஸ் உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தை பாதுகாப்பது மட்டுமல்லாது அதே நேரத்தில் உங்கள் சொத்தைப் பெருகவும் உங்களுக்கு உதவுகிறது.
இந்த வெல்த் கிரியேஷன் ப்ளான் வழங்குகிறது - –
  • பாதுகாப்பு - எதிர்பாரா நிகழ்வு நிலையில் உங்கள் குடும்பத்தின் தேவைகளுக்கு பாதுகாப்பு வழங்குகிறது
  • கட்டுபடியாகும்தன்மை - பிரீமியம் மாதம் ஒன்றுக்கு ரூ.3000-ல் ஆரம்பம்
  • நெகிழ்வுத்தன்மை - இரண்டு முதலீட்டு உத்திகளுக்கு இடையே தேர்வு செய்யலாம்
  • எளிமையானது - சுலபமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
  • பணமாக்கல் - 6வது பாலிசி ஆண்டிலிருந்து பகுதி பெற்றுக்கொள்வதன் மூலம்

வெறும் ஒரு சில கிளிக்குகள் கொண்டு காப்பீடு மற்றும் சொத்து உருவாக்கல் நோக்கி உங்கள் முதல் படியை எடுத்து வையுங்கள்.

சிறப்பம்சங்கள்

SBI Life eWealth Plus Premium Details

non-participating Online Unit Linked Insurance plan

Buy Now

சிறப்பம்சங்கள்

  • ஆயுள் காப்பீடு
  • இரண்டு முதலீட்டு உத்திகளை தேர்வு செய்யும் வாய்ப்பு - குரோத் ஸ்ட்ரேடஜி மற்றும் ஆக்டிவ் ஸ்ட்ரேடஜி.
  • குரோத் ஸ்ட்ரேடஜியின் கீழ் முன் கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட சதவீதத்தில் தானியங்கு சொத்து ஒதுக்கீடு அம்சம்.
  • ஆக்டிவ் ஸ்ட்ரேடஜியின் கீழ் பன்னிரண்டு யூனிட் ஃபண்டுகளிலிருந்து உங்கள் சொந்த ஃபண்ட் ஒதுக்கீட்டை தேர்வு செய்வீர்.
  • எளிமையாக்கப்பட்ட 3 வழிமுறை ஆன்லைன் கொள்முதல் செயல்முறை
  • எந்த பிரீமியம் ஒதுக்கீடு கட்டணங்களும் இன்றி பெயரளவிலான பிரீமியம் செலுத்துங்கள்
  • 6வது பாலிசி ஆண்டிலிருந்து பகுதி பெற்றுக்கொள்ளலாம்

அனுகூலங்கள்

பாதுகாப்பு

  • எதிர்பாரா நிகழ்வு நிலையில் உங்கள் குடும்பம் பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்
  • உங்களுடைய ஃபண்டுகள் தானாகவே சந்தை ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக மறுசமநிலை செய்துகொள்கிறது

நெகிழ்வுத்தன்மை

  • உங்கள் இடர் தாங்குதிறனுக்கு ஏற்ப உங்கள் விருப்பத்திற்கு இணங்க முதலீட்டு உத்தியில் முதலீடு செய்யுங்கள்ं

எளிமையானது

  • தொல்லையற்ற ஆன்லைன் கொள்முதல் செயல்முறை

கட்டுபடியாகும்தன்மை

  • எந்த பிரீமியம் ஒதுக்கீடு கட்டணங்களும் இன்றி மாதம் ஒன்றுக்கு மிகக்குறைந்த ரூ.3,000 பிரீமியங்களுக்கான சந்தைதொடர்புடைய லாபங்களைப் பெறுங்கள்

பணமாக்கல்

  • எந்த எதிர்பாரா செலுவுகளையும் சமாளிக்க பகுதி பெற்றுக் கொள்வதற்கான சுதந்திரத்தை பெறுங்கள்.

வரிப் பலன்களைப் பெறுங்கள்*

முதிர்வுநிலை பலன் : (நடைமுறையில் அமலில் உள்ள பாலிசிகளுக்கு மட்டும் பொருந்தும்):

பாலிசி காலவரை நிறைவுற்றதன் பேரில் ஃபண்டு மதிப்பு அளிக்கப்படும்.

 

இறப்பு பலன் : (நடைமுறையில் அமலில் உள்ள பாலிசிகளுக்கு மட்டும் பொருந்தும்):

அதிகபட்சமாக (நிறுவனத்திற்கு இறப்பு கோருரிமை தெரிவிக்கப்பட்ட தேதி அன்று உள்ள ஃபண்ட் மதிப்பு அல்லது #பொருந்தும் பகுதி திரும்பப்பெறுதல் தொகை கழிக்கப்பட்டு காப்பீட்டுத் தொகை அல்லது இறப்பு தேதி வரை செலுத்தப்பட்ட^ மொத்த பிரீமியங்களின் 105%) பயனாளிக்கு செலுத்தப்படும்.

 

@பொருந்தும் பகுதி திரும்பப்பெறுதல் என்பது பகுதி திரும்பப்பெறுதலுக்கு சமமானது, ஆயுள் காப்பீட்டுதாரரின் இறப்புக்கு முந்திய உடனடி கடந்த 2 ஆண்டுகளில் ஏதேனும் இருப்பின்
^செலுத்தப்பட்ட மொத்த பிரீமியங்கள் என்பது டாப்-அப்கள் பிரீமியம் செலுத்தப்பட்டது, ஏதேனும் இருப்பின் உட்பட அடிப்படை திட்டத்தின் கீழ் பெறப்பட்ட அனைத்து பிரீமியங்களின் மொத்தம் ஆகும்.

எஸ்பிஐ லைஃப் – இவெல்த் ப்ளஸ் இன் இடர் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்த கூடுதல் விவரங்களுக்குப் பின்வரும் ஆவணங்களைக் கவனமாகப் படிக்கவும்.
SBI Life eWealth Premium Details
#வயது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளவை யாவும் முடிந்த பிறந்தநாளின் படியாகும்.
^வருடாந்திரமாக்கப்பட்ட பிரீமியம் என்பது ஒரு ஆண்டில் செலுத்தத்தக்க பிரீமியத்தின் மொத்த தொகை, வரிகள், ரைடர் பிரீமியங்கள், மற்றும் ரைடர்கள் மீதான காப்புறுதி விண்ணப்ப கணிப்பு கூடுதல் பிரீமியங்கள், ஏதேனும் இருப்பின் ஆகியவை தவிர்த்து ஆகும்.

குறிப்பு :
ஆயுள் காப்பீட்டுதாரர் வயதுக்கு வராத ஒரு நபர் என்னும் நிலையில், பாலிசி காலவரை குறைந்தது ஆயுள் காப்பீட்டுதாரர் முதிர்வடையும் தேதி அன்று வயதுக்கு வந்த ஒரு நபராக இருக்க வேண்டும்.

3R/ver1/09/24/WEB/TAM

**ஊகிக்கப்பட்டுள்ள விகிதங்கள் ஆண்டு ஒன்றுக்கு முறையே @4% மற்றும் @8% வீதம், இது பொருந்தும் அனைத்து கட்டணங்களும் கணக்கில் கொள்ளப்பட்ட பிறகு இந்த விகிதங்களில் விளக்கிக் காட்டுவதற்காக மட்டும். இவை உத்தரவாதமானவை அல்ல மற்றும் இவை லாபத்தின் உச்ச அல்லது கீழ் வரம்பு அல்ல. யூனிட் லிங்க்டு லைஃப் இன்ஷ்யூரன்ஸ் திட்டங்கள் சந்தை இடர்பாடுகளுக்கு உட்பட்டவை. இந்த ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்படும் பற்பல நிதிகள் மற்றும் நிதிகளின் பெயர்கள் எந்த வகையிலும் இந்த திட்டங்களின் தரத்தை, அவற்றின் எதிர்கால வளர்ச்சி மற்றும் லாபங்களை குறிப்பதாகாது.

'ஃபண்ட் மேனேஜ்மென்ட் சார்ஜ்கள்' இது போன்ற இதர வெவ்வேறு விதமான கட்டணங்கள் விலக்கிக்கொள்ளப்பட்டன. இறப்பு கட்டணங்கள் தவிர அனைத்து கட்டணங்களும் நடைமுறையில் உள்ள விதிமுறைகளின்படி திருத்தத்திற்கு உட்பட்டவையாகும். கட்டணங்கள் மற்றும் அவற்றின் செயல்பாட்டின் முழுமையான பட்டியலுக்கு விற்பனைச் சிற்றேட்டைப் பார்க்கவும்.

யூனிட் லிங்க்டு லைஃப் இன்ஷ்யூரன்ஸ் புராடக்ட்கள் மரபுரீதியான லைஃப் இன்ஷ்யூரன்ஸ் புராடக்ட்களிலிருந்து வேறுபட்டவையாகும் மற்றும் சந்தை ஆபத்துக்கு உட்பட்டவையாகும். யூனிட் லிங்க்டு லைஃப் இன்ஷ்யூரன்ஸ் பாலிசிகளில் செலுத்தும் பிரீமியம் மூலதனச் சந்தைகளுடன் தொடர்புடைய முதலீட்டு ஆபத்துகளுக்கு உட்பட்டவையாகும் மற்றும் நிதியின் செயலாற்றல் மற்றும் மூலதன சந்தையை இயக்கும் காரணிகள் அடிப்படையில் யூனிட்களின் NAVகள் ஏறவோ அல்லது இறங்கவோ செய்யும் மற்றும் காப்பீட்டுதாரரே அவருடைய முடிவுகளுக்கு பொறுப்பாவார். எஸ்பிஐ லைஃப் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் என்பது காப்பீட்டு நிறுவனத்தின் பெயர் மட்டுமே ஆகும் மற்றும் எஸ்பிஐ லைஃப் - இவெல்த் ப்ளஸ் என்பது யூனிட் லிங்க்டு லைஃப் இன்ஷ்யூரன்ஸ் ஒப்பந்தத்தின் பெயர்கள் ஆகும் மற்றும் ஒப்பந்தத்தின் தரம், அதன் எதிர்கால வளர்ச்சி அல்லது லாபங்களை எந்தவகையிலும் குறிப்பதாகாது. தயவு செய்து உங்களுடைய காப்பீட்டு ஆலோசகர் அல்லது இடையீட்டாளர் அல்லது காப்பீட்டாளரின் பாலிசி ஆவணத்திலிருந்து தொடர்புடைய ஆபத்துக்கள் மற்றும் பொருந்தக்கூடிய கட்டணங்கள் பற்றி அறிந்து கொள்ளவும். இந்த ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்படும் பற்பல நிதிகள், நிதிகளின் பெயர்கள் ஆகும் மற்றும் எந்த வகையிலும் இந்த திட்டங்களின் தரத்தை, அவற்றின் எதிர்கால வளர்ச்சி, லாபங்களை குறிப்பதாகாது.

இடர் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றிய அதிக விபரங்களுக்கு விற்பனையை முடிக்கும் முன்பாக தயவு செய்து விற்பனை சிற்றேட்டை கவனமாகப் படிக்கவும்.

*வரிச்சலுகைகள் :
வரிச் சலுகைகள் வருமான வரி சட்டங்ககள் பிரகாரம் கிடைப்பதால் அவை காலந்தோறும் மாற்றங்களுக்கு உட்பட்டவையாக இருக்கும். விபரங்களுக்கு உங்கள் வரி ஆலோசகருடன் தொடர்பு கொள்ளுங்கள்.
நீங்கள் இந்தியாவில் பொருந்தும் வருமான வரிச் சட்டங்களின்படி, அவ்வப்போது மாறுவதற்கு உட்பட்டு வருமான வரிச் சலுகைகளுக்கு தகுதி உடையவர் மேலும் விவரங்களுக்கு நீங்கள் எங்களுடைய இணையதளத்திற்கு வருகை புரியலாம்.