தனிநபர், நான் லிங்க்ட், நான்-பார்ட்டிசிபேட்டிங் லைஃப் இன்ஷ்யூரன்ஸ் ப்யூர் ரிஸ்க் பிரீமியம் திட்டம்
உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்திற்காக பாதுகாத்திடும் சுமையை உங்களுடைய தோள்களிலிருந்து உங்கள் விரல் நுனிகளுக்கு மாற்றிடுங்கள். எஸ்பிஐ லைஃப் - இஷீல்டு இப்போது ஓர் ஆயுள் காப்பீட்டைப் பெற்றுக்கொள்ள எளிய, சிக்கலற்ற ஆன்லைன் செயல்முறையின் அனுகூலத்தை உங்களுக்கு வழங்குகிறது.
தங்களுடைய குடும்பத்திற்காக நிதிசார் பாதுகாப்பை எதிர்நோக்குபவர்களுக்காக, எஸ்பிஐ லைஃப் - இஷீல்டு ஏற்கக்கூடிய பிரீமியத்தில் பலவிதமான பலன்களை வழங்குகிறது
இந்த ஆன்லைன் ப்யூர் டேர்ம் ப்ளான் வழங்குகிறது -
பாதுகாப்பு - உங்கள் குடும்பம் நிதிநிலை சார்ந்து பாதுகாப்பாக உள்ளதை உறுதிப்படுத்துகிறது
இணக்கத்தன்மை - இரண்டு பலன் கட்டமைப்புகள் மற்றும் இரண்டு ரைடர் விருப்பத்தேர்வுகள் இடையே தேர்ந்தெடுக்கலாம்
எளிமை - எளிய ஆன்லைன் செயல்முறை கொண்டது
ஏற்கக்கூடியதன்மை - நியாயமான பிரீமியங்கள் மூலம்
நம்பகத்தன்மை – மருத்துவம் சார்ந்த இரண்டாவது கருத்துடன்
வெறும் சில கிளிக்குகளில் காப்பீடு செய்து கொள்ளுங்கள் மற்றும் பாதுகாப்பின் பரிசை உங்கள் குடும்பத்திற்கு அளித்திடுங்கள்!
ஹைலைட்ஸ்
done
பாரம்பரிய திட்டம்
done
பாதுகாப்பு திட்டங்கள்
done
டேர்ம் ப்ளான் (கால அளவு திட்டம்)
done
எஸ்பிஐ லைஃப் - இஷீல்டு
done
ஆன்லைன் திட்டம்
தனிநபருக்கான, நான் லிங்க்டு, நான் பார்டிசிபேட்டிங் ஆன்லைன் ப்யூர் டெர்ம் திட்டம்
நிதிசார் பாதுகாப்பு வழங்குகிறது மற்றும் உங்கள் குடும்பம் பாதுகாப்புடன் இருப்பதை உறுதிப்படுத்துகிறது
உள்ளமைந்த துரிதப்படுத்திக்கொள்ளும் டர்மினல் இல்னெஸ் பெனிஃபிட் (கடுமையான உடல்நலக்குறைவு பலன்)$ கொண்ட இரண்டு பலன் கட்டமைப்புகள் மற்றும் விரிவான கவரேஜிற்காக (காப்பீடு) இரண்டு ரைடர் விருப்பத்தேர்வுகள்
சிக்கலற்ற ஆன்லைன் விண்ணப்ப செய்முறை.
புகைபிடிக்காதவர்களுக்காக பிரீமியங்கள் மீது தள்ளுபடி
மருத்துவம் சார்ந்த இரண்டாவது கருத்து
பயன்கள்
பாதுகாப்பு
நீங்கள் தேர்ந்தெடுத்த பலன் கட்டமைப்புகள் அடிப்படையில் உங்கள் குடும்பத்திற்காக நிதிசார் பாதுகாப்பை பெற்று பயனடையுங்கள்
இணக்கத்தன்மை
உங்களுடைய பாதுகாப்பு தேவைகள் படி இரண்டு பலன் கட்டமைப்புகள் இடையே தேர்ந்தெடுக்கவும்
விரிவான கவரேஜ் (காப்பீடு) வழங்கிட இரண்டு ரைடர் விருப்பத் தேர்வுகள்
எளிமை
எளிமையான ஆன்லைன் விண்ணப்பம்
ஏற்கக்கூடியதன்மை
ஏற்கக்கூடிய பிரீமியத்தில் பல விதமான பலன்களை அனுபவியுங்கள்
புகைபிடிக்காதவர்களுக்காக பிரீமியம் தள்ளுபடிகள்
நம்பகத்தன்மை
மருத்துவ நிபுணர்களின் குழு வழங்கும் மருத்துவம் சார்ந்த இரண்டாவது கருத்தைப் பெற்று பயனடையுங்கள்
வரிச்சலுகைகளை பெற்று பயனடையுங்கள்*
பலன் கட்டமைப்பு :
இந்தத் திட்டம் இரண்டு பலன் கட்டமைப்புகளை வழங்குகிறது - காப்பீடு அளவு பலன் மற்றும் அதிகரிக்கும் காப்பீடு பலன். இரண்டு அமைப்புகளுக்காகவும் ஓர் உள்ளமைந்த பலனாக ஆக்சிலரேட்டட் டெர்மினல் இல்னெஸ் பலன்$ கிடைக்கிறது.
காப்பீடு அளவு பலன்:
இந்த கட்டமைப்பு கீழ், பாலிசி காலவரை முழுவதுக்கும் காப்பீட்டுத் தொகை மாறாமல் இருக்கிறது
நீங்கள் டர்மினல் இல்னெஸ்க்கு (கடுமையான உடல்நலக்குறைவு) எதிராக பாதுகாப்பு பெறுகிறீர்கள்#
பாலிசி காலவரையின்போது, துரதிர்ஷ்டவசமான இறப்பு அல்லது இறுதிக்கட்ட பிணி கண்டறியப்படுவதன்# பேரில், இவற்றுள் எது முந்தியதோ அதற்கு, பாலிசி நடைமுறையில் இருக்கும்பட்சத்தில், ''இறப்பு பேரில் காப்பீட்டுத் தொகை" அளிக்கப்படுகிறது மற்றும் பாலிசி முடிந்துவிடுகிறது
"இறப்பு பேரிலான காப்பீட்டுத் தொகை" பின்வருவனவற்றைவிட அதிகமாக இருக்கும் நிலையில்:
வருடாந்திர பிரீமியத்தின் 10 மடங்குகள்**, அல்லது
இறப்பின் தேதிவரை பெறப்பட்ட மொத்த பிரீமியங்களின்^^ 105%, அல்லது
இறப்பு பேரில் உறுதிஅளிக்கப்பட்ட முழு அளவு தொகை அளிக்கப்படும், இது இறப்பு தேதி அன்று படி பயனுள்ள காப்பீட்டுத் தொகைக்கு## சமமானது
##இறப்பு தேதி அன்று படி பயனுள்ள காப்பீட்டுத் தொகைக்கான காப்பீடு அளவு பலனுக்கான பயனுள்ள காப்பீட்டுத் தொகை தேர்ந்தெடுக்கப்பட்ட ஆரம்ப காப்பீட்டுத் தொகை.
அதிகரிக்கும் காப்பீடு பலன்:
இந்த கட்டமைப்பு கீழ், ஒவ்வொரு 5வது பாலிசி ஆண்டு முடிவில் 10% தனி வட்டி வீதம் காப்பீடு தொகை தானாக அதிகரிக்கிறது.
நீங்கள் டர்மினல் இல்னெஸ்க்கு (கடுமையான உடல்நலக்குறைவு) எதிராக பாதுகாப்பு பெறுகிறீர்கள்#
பாலிசி காலவரையின்போது, துரதிர்ஷ்டவசமான இறப்பு அல்லது இறுதிக்கட்ட பிணி கண்டறியப்படுவதன்# பேரில், இவற்றுள் எது முந்தியதோ அதற்கு, பாலிசி நடைமுறையில் இருக்கும்பட்சத்தில், ''இறப்பு பேரில் காப்பீட்டுத் தொகை'' அந்த பாலிசி ஆண்டிற்காக அளிக்கப்படுகிறது மற்றும் பாலிசி முடிந்துவிடுகிறது
"இறப்பு பேரிலான காப்பீட்டுத் தொகை" பின்வருவனவற்றைவிட அதிகமாக இருக்கும் நிலையில்:
வருடாந்திர பிரீமியத்தின் 10 மடங்குகள்**, அல்லது
இறப்பின் தேதிவரை பெறப்பட்ட மொத்த பிரீமியங்களின்^^ 105%, அல்லது
இறப்பு பேரில் உறுதிஅளிக்கப்பட்ட முழு அளவு தொகை அளிக்கப்படும், இது இறப்பு தேதி அன்று படி பயனுள்ள காப்பீட்டுத் தொகைக்கு~~ சமமானது
~~இறப்பு தேதி அன்று படி பயனுள்ள காப்பீட்டுத் தொகைக்கான அதிகரிக்கும் காப்பீடு பலனுக்கான பயனுள்ள காப்பீட்டுத் தொகை தேர்ந்தெடுக்கப்பட்ட ஆரம்ப காப்பீட்டுத் தொகை இறப்பு தேதிக்கு முன்பு ஒவ்வொரு 5வது பாலிசி ஆண்டு முடிவில் 10% தனி வட்டி வீதம் காப்பீடு தொகை தானாக அதிகரிக்கிறது.
#டர்மினல் இல்னெஸ் (கடுமையான உடல்நலக்குறைவு) என்பது ஒரு நோயின் உறுதியான நோயறிதல் என்று இது 180 நாட்களுக்குள்ளாக ஆயுள் காப்பீடு செய்துகொண்டவரின் இறப்பு நிகழலாம் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
**வருடாந்திரமாக்கப்பட்ட பிரீமியம் என்பது பாலிசிதாரரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் ஆண்டில் செலுத்தத்தக்க பிரீமியம், இது வரிகள், ரைடர் பிரீமியங்கள், காப்புறுதி விண்ணப்ப கணிப்பு கூடுதல் பிரீமியங்கள் மற்றும் மாடல் பிரீமியங்களுக்கான கட்டணங்கள், ஏதேனும் இருப்பின், நீங்கலாக ஆகும்.
^^பெறப்பட்ட மொத்தம் பிரீமியங்கள் என்பது ஏதேனும் கூடுதல் பிரீமியம், ஏதேனும் ரைடர் பிரீமியம் மற்றும் வரிகள் நீங்கலாக பெறப்பட்ட அனைத்து பிரீமியங்களின் மொத்தம் ஆகும்.
இறப்பு பலன் :
தேர்ந்தெடுக்கப்பட்ட பலன் கட்டமைப்பு பொருத்து, நியமனதாரர் "இறப்பு பேரிலான காப்பீட்டுத் தொகை" பெறுவார்
இறப்பு பலன் பாலிசிதாரர் நாளது நாள் வரை செலுத்த வேண்டிய அனைத்து ரெகுலர் (முறையான) பிரீமியங்களையும் செலுத்தப்பட்டிருந்தால் மற்றும் ஆயுள் காப்பீட்டுதாரரின் இறப்பு தேதி வரை பாலிசி செயல்பாட்டில் இருந்தால் மட்டுமே அளிக்கப்படும்
இந்த உள்ளமைந்த பலன், இரண்டு பலன் அமைப்புகளுடன் கிடைக்கிறது.
ஆயுள் காப்பீட்டுதாரருக்கு டர்மினல் இல்னெஸ் (கடுமையான உடல்நலக்குறைவு) இருப்பதாக கண்டறியப்பட்டதன் பேரில், இறப்புப் பலனுக்கு சமமான பலன் அளிக்கப்படும் மற்றும் பாலிசி நிறுத்தப்பட்டுவிடும்
துரிதப்படுத்திக்கொள்ளும் டர்மினல் இல்னெஸ் பெனிஃபிட் (கடுமையான உடல்நலக்குறைவு பலன்) நீங்கள் நாளது நாள் வரை செலுத்த வேண்டிய அனைத்து ரெகுலர் (முறையான) பிரீமியங்களையும் செலுத்தப்பட்டிருந்தால் மற்றும் நோய் கண்டறியப்பட்ட தேதி வரை உங்கள் பாலிசி செயல்பாட்டில் இருந்தால் மட்டுமே அளிக்கப்படும். டர்மினல் இல்னெஸ் கோருரிமையின் (உரிமை கோரல்) விளைவாக பாலிசி நிறுத்தப்பட்டுவிடும்.
டர்மினல் இல்னெஸ் (கடுமையான உடல்நலக்குறைவு) என்பது ஒரு நோயின் உறுதியான நோயறிதல் என்று இது 180 நாட்களுக்குள்ளாக ஆயுள் காப்பீடு செய்துகொண்டவரின் இறப்பு நிகழலாம் என்று வரையறுக்கப்பட்டுள்ளது
மருத்துவம் சார்ந்த இரண்டாவது கருத்து:
மருத்துவம் சார்ந்த இரண்டாவது கருத்து என்பது ஆயுள் காப்பீட்டுதாரருக்கு மற்றொரு மருத்துவர் மூலம் தங்களுடைய நோய் கண்டறிதலின் இரண்டாவது கருத்து அறிய மற்றும் சிகிச்சை திட்டங்களை அறிந்து கொள்ள ஏதுவாக்குகிற ஒருவித சேவை.
இரண்டு பலன் அமைப்புகளின் கீழும், அதாவது, லெவல் கவர் பெனிஃபிட் மற்றும் இன்க்ரீஸிங் கவர் பெனிஃபிட், பாலிசி நடைமுறையில் இருக்கும்பட்சம் கிடைக்கிறது
முதிர்வுநிலை பலன் :
இந்தத் திட்டம் எந்த முதிர்வுநிலை பலனையும் வழங்குவதில்லை.
ரைடர் பலன் :
எஸ்பிஐ லைஃப் - ஆக்ஸிடென்ட்டல் டெத் பெனிஃபிட் (விபத்து இறப்பு பலன்) ரைடர் (UIN: 111B015V03)
இந்த ரைடர் காப்பீட்டுத் தொகை, ரைடர் பாலிசி நடைமுறையில் உள்ளது என்ற நிபந்தனையின் பேரில், ரைடர் காலவரையின்போது தற்செலாக ஒரு விபத்து காரணமாக 120 நாட்களுக்குள் ஆயுள் காப்பீடு செய்துகொண்டவர் இறந்துவிடும் நிலையில் அளிக்கப்படுகிறது
எஸ்பிஐ லைஃப் - ஆக்ஸிடென்ட்டல் டோட்டல் அண்டு பர்மனென்ட் டிஸெபிலிட்டி பெனிஃபிட் (விபத்து முழு மற்றும் நிரந்த உடல்குறைபாடு பலன்) ரைடர் (UIN: 111B016V03)
இந்த ரைடர் காப்பீட்டுத் தொகை, ரைடர் பாலிசி நடைமுறையில் உள்ளது என்ற நிபந்தனையின் பேரில், ரைடர் காலவரையின்போது ஆயுள் காப்பீடு செய்துகொண்டவர் ஆக்ஸிடென்ட்டல் டோட்டல் அண்டு பர்மனென்ட் டிஸெபிலிட்டி (விபத்து முழு மற்றும் நிரந்தர உடல்குறைபாடு) ஏற்பட்டுவிடும் நிலையில் அளிக்கப்படுகிறது
எஸ்பிஐ லைஃப் - இஷீல்டு-இன் இடர் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றிய விவரங்களை மேலும் அறிந்துகொள்ள கீழ்க்கண்ட ஆவணங்களைக் கவனமாகப் படிக்கவும்.
^வயது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளவை யாவும் முடிந்த பிறந்தநாளின் படியாகும்.
$$மேலே காட்டப்பட்டுள்ள பிரீமியம் தொகை பொருந்தும் வரிகள் நீங்கலாக மற்றும் காப்புறுதி விண்ணப்ப கணிப்பு கூடுதலாகும். நிலவும் வரிச் சட்டங்களின்படி வரிகள் பொருந்தும்.
1G.ver.02-04-21 WEB TAM
இடர் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றிய மேலதிக விபரங்களுக்கு விற்பனையை முடிக்கும் முன்பாக தயவு செய்து விற்பனை சிற்றேட்டைக் கவனமாகப் படிக்கவும்.
இடர் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் ரைடர் பற்றிய மேலதிக விபரங்களுக்கு விற்பனையை முடிக்கும் முன்பாக தயவு செய்து விற்பனை ரைடர் சிற்றேட்டைக் கவனமாகப் படிக்கவும்.
*வருமான வரிச்:
வரிச் சலுகைகள் வருமான வரி சட்டங்களின்படி கிடைப்பதால் அவை காலந்தோறும் மாற்றங்களுக்கு உட்பட்டவையாக இருக்கும். விபரங்களுக்கு உங்கள் வரி ஆலோசகருடன் தொடர்பு கொள்ளுங்கள். மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் எங்களுடைய இணையதளத்திற்கு வருகை புரியலாம்.