எஸ்பிஐ லைஃப் – ரிட்டையர் ஸ்மார்ட் திட்டம்/ இந்தியாவிலேயே ரிட்டையர்மெண்ட் பாலிசிகளில் மிகச்சிறந்த ஒன்று
close

By pursuing your navigation on our website, you allow us to place cookies on your device. These cookies are set in order to secure your browsing, improve your user experience and enable us to compile statistics  For further information, please view our "privacy policy"

SBI Logo

Join Us

Tool Free 1800 22 9090

எஸ்பிஐ லைஃப் – ரிட்டயர் ஸ்மார்ட்

UIN: 111L094V03

Product Code: 1H

எஸ்பிஐ லைஃப் – ரிட்டயர் ஸ்மார்ட்

ஸ்மார்ட்டாக மற்றும் முன்னதாக
திட்டமிட்டு ஒரு சுதந்திரமான
வாழ்க்கையை அனுபவியுங்கள்.
.

Calculate Premium
ஒரு தனிப்பட்ட, யூனிட்-லிங்க்டு, நான்-பார்ட்டிசிபேட்டிங், ஓய்வூதிய சேமிப்புகள் திட்டம்.

''யூனிட் லிங்க்டு இன்ஷ்யூரன்ஸ் திட்டங்கள் ஒப்பந்தத்தின் முதல் ஐந்து ஆண்டுகளுக்கு எந்த ரொக்கமாக்கலையும் வழங்குவதில்லை. பாலிசிதாரர்கள் ஐந்தாவது ஆண்டின் இறுதிவரை யூனிட் லிங்க்டு இன்ஷ்யூரன்ஸ் திட்டங்களில் முதலீடு செய்த பணத்தை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ஒப்புவிப்பு செய்ய அல்லது திரும்பப் பெற்றுக்கொள்ள முடியாது."

''இது ஓர் ஓய்வூதியத் திட்டம். ஒப்புவிப்பு, முழுமையாக திரும்பப்பெறுதல் அல்லது முதிர்வுநிலை/உரிமை மூலம் பலன்கள் ஆண்டளிப்புகளின் வடிவில் கிடைக்கின்றன, பொருந்தக்கூடிய விதிமுறைகளின் கீழ் அனுமதிக்கப்பட்ட நன்மைகளைப் பரிமாற்றம் செய்யும் அளவு தவிர."

உங்கள் ஓய்வு காலத்தை உங்கள் வாழ்க்கையின் ‘சமரசமில்லா’ காலகட்டமாக மாற்றிடுங்கள். நீங்கள் அமைதியாக பொருளாதாரரீதியாக சுதந்திரமாக வாழ ஸ்மார்ட்டாக, முன்னதாக திட்டமிடுங்கள். எஸ்பிஐ லைஃப் - ரிடையர் ஸ்மார்ட் கொண்டு சந்தை ஏற்றத்தாழ்வுக்கு எதிராக பாதுகாப்பான ஓர் உத்தரவாதமான நிதியத்தை உருவாக்குங்கள்.

முக்கிய பலன்கள் :
  • சந்தை தொடர்புடைய வருவாய் மூலம் ஓர் ஓய்வுக்கால நிதியத்தை உருவாக்குங்கள்
  • ‘அட்வான்டேஜ் ப்ளான்’ கீழ் சந்தை ஏற்றத்தாழ்வுக்கு எதிராக உங்கள் உத்தரவாதமான முதிர்வுநிலை பலனை#பாதுகாத்திடுங்கள்
  • ஃபண்ட் மதிப்பை ஊக்குவிக்க வருடாந்திர பிரீமியத்தின் 210%* வரை உத்தரவாதமான கூடுதல்கள்
#செலுத்தப்பட்ட மொத்த பிரீமியங்களின் 101%-ன் உத்தரவாதமான முதிர்வுநிலை பலன்.
^இது ரெகுலர்/குறுகியகால திட்டத்தின் கீழ் 35 ஆண்டுகள் பாலிசி காலவரைக்காக பொருந்தும். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து விற்பனைச் சிற்றேட்டில் உத்தரவாதமான கூடுதல்கள் மீதான பிரிவைப் பார்க்கவும்.

ஹைலைட்ஸ்

எஸ்பிஐ லைஃப் – ரிட்டயர் ஸ்மார்ட்

நான் பார்டிசிபேட்டிங் யூனிட் லிங்க்டு ப்யூர் பென்ஷன் பிளான்

இப்போது வாங்குங்கள்
plan profile

தன் இளமைக் காலத்தில் பென்ஷன் பிளானில் முதலீடு செய்ததற்காக கனிகா தனக்கே நன்றி தெரிவித்துக்கொள்கிறார். அந்த முதலீடு ஓய்விற்குப் பிறகும் பொருளாதார ரீதியாக அவரால் சுயமாக வாழ உதவுகிறது.

எஸ்பிஐ லைஃப் – ரிட்டையர் ஸ்மார்ட் மூலம் நீங்களும் ஓய்வுக்காலத்தில் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு எவ்வளவு சேமிக்க வேண்டும் என்பதைப் பார்க்க, கீழே உள்ள படிவத்தின் புலங்களில் தேவையான தகவலை உள்ளிடவும்.

Name:

DOB:

Gender:

Male Female Third Gender

Staff:

Yes No

Let's finalize the policy duration you are comfortable with...

Policy Term

10 35

Choose your annuity options

Annuity Plan Type

Deferred Annuity
Immediate Annuity

Annuity Options


A little information about the premium options...

Premium Frequency

Premium Amount

2,500 500000000

Premium Payment Option

Regular  LPPT  Single

Premium Payment Term


Reset
sum assured

Sum Assured


premium frequency

Premium frequency

Premium amount
(excluding taxes)


premium paying

Premium Payment Term


policy term

Policy Term


maturity benefits

Maturity Benefit

At assumed rate of returns** @ 4%


or
@ 8%

Give a Missed Call

சிறப்பம்சங்கள்

  • அட்வான்டேஜ் ப்ளான் மூலம் எஸ்பிஐ லைஃப்-னால் நிர்வகிக்கப்படும் தொல்லையற்ற முதலீடு
  • 210% வரையிலான வருடாந்திர பிரீமியத்தின் உறுதியளிக்கப்பட்ட பலன்கள் (நிபந்தனைகள் பொருந்தும்#)
  • நெகிழ்வுத்தன்மை கொண்ட பிரீமியம் செலுத்தும் விருப்பத் தெரிவுகள்.

நன்மைகள்

பாதுகாப்பு
  • பாதுகாப்பு மற்றும் உங்கள் கனவு ஓய்வு காலத்திற்கு நிதியுதவி அளித்திட போதுமான ஓய்வு கால நிதியம் உருவாக்கலை அனுபவித்திடலாம்.
நம்பகத்தன்மை
  • உறுதியளிக்கப்பட்ட பலன்கள் மூலம்  உங்கள் நிதியத்தை ஊக்குவித்தல்
நெகிழ்வுத்தன்மை
  • உங்களுடைய மாறும் தேவைகளுக்கு ஏற்ப வெஸ்டிங் வயதை நீட்டிக்கொள்ளலாம்
  • உங்களுடைய நிதிசார் திறன்களுக்கு ஏற்ப பிரீமியங்களை செலுத்த தேர்வு செய்யலாம்
வரிச்சலுகைகளை பெற்று பயனடையுங்கள்*

#இது ரெகுலர் / லிமிடெட் ப்ளான் கீழ், பாலிசி நடைமுறையில் இருக்கும்பட்சத்தில் 35 ஆண்டுகள் பாலிசி காலத்திற்குப் பொருந்தும்.

முதிர்வுநிலை/வெஸ்டிங் பலன்:
 

பாலிசி காலவரை நிறைவுற்றதன் பேரில், பாலிசி நடைமுறையில் இருக்கும்பட்சம், நீங்கள் அதிகபட்சமாக பெறுவது (முதிர்வுநிலை/வெஸ்டிங் தேதி அன்று ஃபண்ட் மதிப்பு, அத்துடன் முதிர்வுநிலை/ வெஸ்டிங் ஃபண்ட் மதிப்பின் 1.5% முனைய கூடுதலாக அளிக்கப்படும்) அல்லது (செலுத்தப்பட்ட மொத்த பிரீமியங்களின் 101%).

 

உங்களுக்கு முதிர்வுநிலை/வெஸ்டி பேரில் பின்வரும் விருப்பத் தெரிவுகள் உள்ளன:

 
  • i) மொத்த பலன் தொகையையும் அப்போது நிலவும் ஆண்டளிப்பு விகிதத்தில் எங்களிடமிருந்து ஆண்டளிப்பு வாங்க பயன்படுத்திக் கொள்ளலாம். இருப்பினும், தற்பொழுது கம்யூடேஷன் நிகர மொத்த பலன் தொகையில் 50% ஆணையத்தினால் (IRDAI) விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைப்படி, அப்பொழுது நிலவும் ஆண்டளிப்பு விகிதத்தில் மற்ற காப்பீட்டுதாரரிடமிருந்து ஆண்டளிப்பு வாங்கிக்கொள்ள வாய்ப்பு உங்களுக்கு அளிக்கப்படும். அல்லது
  • ii) 60% கம்யூடேஷன் செய்வதற்கு மீதமுள்ள தொகைக்கு அப்போது நிலவும் ஆண்டுத் தொகை விகிதத்தில் எங்களிடமிருந்து ஆண்டளிப்பு வாங்க பயன்படுத்திக் கொள்ளலாம். இருப்பினும் தற்பொழுது கம்யூடேஷன் நிகர மொத்த பலன் தொகையில் 50% ஆணையத்தினால் (IRDAI) விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைப்படி, அப்பொழுது நிலவும் ஆண்டளிப்பு விகிதத்தில்  மற்ற காப்பீட்டுதாரரிடமிருந்து ஆண்டளிப்பு வாங்கிக்கொள்ள வாய்ப்பு உங்களுக்கு அளிக்கப்படும். அல்லது
  • iii) குவிப்பு கால அளவிற்கு அல்லது ஒத்திப்போடப்பட்ட கால அளவிற்கு அசல் பாலிசியைப் போல் அதே பாலிசிக்குள் அதே விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுடன் நீங்கள் 60 வயதுக்கு உட்பட்டவாரக இருந்தால். மேற்கண்ட (i) மற்றும் (ii) க்காக, புராடெக்டின் கீழ் உள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு ஆண்டளிப்பு வாங்குதல் உட்பட்டதாகும். பாலிசியின் பலன்தொகை IRDAI (ஆண்டளிப்புகள் மற்றும் இதர பலன்களுக்காக குறைந்தபட்ச வரம்பு) ஒழுங்குமுறைகள், 2015-ன் ஒழுங்குமுறை 3(a) ஒழுங்குமுறையில் வரையறுக்கப்பட்டபடி அவ்வப்போது திருத்தியமைக்கப்பட்டபடி குறைந்தபட்ச ஆண்டளிப்பு வாங்க போதுமான அளவு இல்லாத நிலையில், பாலிசியின் இத்தகைய பலன்தொகை உங்களுக்கு அல்லது பயனாளிக்கு ஒட்டுமொத்த தொகையாக அளிக்கப்படும்.  அதிகபட்சம் நீட்டிக்கப்பட்ட காலம் 70 வயதுகள் வரை, திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச பாலிசி காலவரை 35 ஆண்டுகளுக்கு உட்பட்டது. நீட்டிக்கப்பட்ட குவிப்பு காலம் அல்லது ஒத்திப்போடப்பட்ட வெஸ்டிங் தேதி அன்று, மொத்த பலன் தொகையும் மணி மார்க்கெட் பென்ஷன் ஃபண்ட் II-ல்  முதலீடு செய்யப்படும்.

இறப்பு இழப்பீடு:

துரதிர்ஷ்டவசமாக காப்பீட்டுதாரர் இறந்துவிடும் நிலையில், பாலிசி நடைமுறையில் இருக்கும்பட்சம், அதிகபட்சமாக (கோருரிமை அறிவிப்பு தேதி அன்று ஃபண்ட் மதிப்பு, அத்துடன் ஃபண்ட் மதிப்பின் 1.5% முனைய கூடுதலாக) அல்லது (இறப்பு தேதி வரை செலுத்தப்பட்ட மொத்த பிரீமியங்களின் 105%) தகுதியுடைய நியமிக்கப்பட்டவருக்கு/பயனாளிக்கு அளிக்கத்தக்கதாகும்.

 

நியமிக்கப்பட்டவர்/பயனாளி கீழே குறிப்பிடப்பட்டுள்ள விருப்பத் தெரிவுகள் படி, இறப்பு பலன் தொகையை பயன்படுத்திக் கொள்ளலாம்:

  • i) மொத்தப் பயன் தொகையையும் ஒட்டு மொத்தமாக பெற்றுக்கொள்ளலாம் அல்லது
  • ii) பாலிசியின் மொத்த தொகையையும்  அல்லது அதன் பகுதியை எங்களிடமிருந்து (எஸ்பிஐ லைஃப் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட்) அப்போது நிலவும் ஆண்டளிப்பு கட்டணத்தில், ஆண்டளிப்பு வாங்குவதற்காக பயன்படுத்திக் கொள்ளலாம். இருப்பினும்,  நியமிக்கப்பட்டவர்/பயனாளி, அதிகாரியால் (IRDAI) நிர்ணயிக்கப்பட்டவாறு சதவீதத்தின் அளவுக்கு, கம்யூடேஷன் நிகர பாலிசியின் மொத்த பயன் தொகையில் 50%,  அப்போது நிலவும் ஆண்டளிப்பு கட்டணத்தில், வேறு எந்த காப்பீட்டாளரிடமிருந்தும் ஆண்டளிப்பு வாங்கிக் கொள்ளுவதற்கு ஒரு விருப்பத் தெரிவு அளிக்கப்படும்.
  • iii) ஆண்டளிப்பு வாங்குவது திட்டத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகும்
  • iv) ஒரு வேளை அதிகாரியினால், அவ்வப்போது திருத்தியமைக்கப்பட்டவாறு ,  ஐஆர்டிஏஐ-ன் (ஆண்டளிப்புகள் மற்றும் இதர பலன்களுக்கான குறைந்தபட்ச வரம்புகள்) விதிமுறைகளின் விதிமுறை 3(a)-ல் குறிப்பிட்டுள்ளபடி குறைந்தபட்ச ஆண்டளிப்பு வாங்கப் போதுமானதாக பாலிசியின் பயன் தொகை உள்ள நிலையில், இத்தகைய பாலிசியின் பயன் தொகை  ஒட்டுமொத்த தொகையாக அளிக்கப்படும்.
 

இறப்பு பலன் அளிக்கப்பட்ட பிறகு, மேற்கொண்டு பலன்கள் ஏதும் அளிக்கத்தக்கதல்ல மற்றும்  இந்த பாலிசியின் கீழ் அனைத்து உரிமைகளும் நிறுத்தப்பட்டுவிடும்.

எஸ்பிஐ லைஃப் – ரிட்டயர் ஸ்மார்ட்-இன் இடர் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்த கூடுதல் விவரங்களுக்குப் பின்வரும் ஆவணங்களைக் கவனமாகப் படிக்கவும்.

null
^வயது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளவை யாவும் கடந்த பிறந்தநாளின் அடிப்படையிலானது ஆகும்

1H/ver1/03/23/WEB/TAM

**ஊகிக்கப்பட்டுள்ள விகிதங்கள் ஆண்டு ஒன்றுக்கு முறையே @4% மற்றும் @8% வீதம், மேலும் இது ஒரு மாதிரி விளக்கம் கொடுப்பதற்காக, இந்த கட்டணங்களின் அடிப்படையில், எல்லா கட்டணங்களையும் கணக்கில் கொண்டு காண்பிக்கப்பட்டுள்ளது. இவை உத்தரவாதமானவை அல்ல மற்றும் இவை இலாபத்தின் உச்ச அல்லது கீழ் வரம்பு அல்ல. யூனிட் லிங்க்டு ஆயுள் காப்பீட்டு திட்டங்கள் சந்தை இடர்பாடுகளுக்கு உட்பட்டவை. இந்த ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்படும் பற்பல நிதிகள் மற்றும் நிதிகளின் பெயர்கள் எந்த வகையிலும் இந்த திட்டங்களின் தரத்தை, அவற்றின் எதிர்கால வளர்ச்சி மற்றும் இலாபங்களை குறிப்பதாகாது.

யூனிட் லிங்க்டு ஆயுள் காப்பீட்டு தயாரிப்புகள் மரபுரீதியான ஆயுள் காப்பீட்டு தயாரிப்புகளிலிருந்து வேறுபட்டவையாகும் மற்றும் சந்தை ஆபத்துக்கு உட்பட்டவையாகும். யூனிட் லிங்க்டு ஆயுள் காப்பீட்டு பாலிசிகளில் செலுத்தும் பிரீமியம் மூலதன சந்தைகளுடன் தொடர்புடைய முதலீட்டு ஆபத்துகளுக்கு உட்பட்டவையாகும் மற்றும் நிதியின் செயலாற்றல் மற்றும் மூலதன சந்தையை இயக்கும் காரணிகள் அடிப்படையில் யூனிட்களின்  NAV-கள் ஏறவோ அல்லது இறங்கவோ செய்யும் மற்றும் பாலிசிதாரரே / காப்பீட்டுதாரரே அவருடைய/அவளுடைய முடிவுகளுக்கு பொறுப்பாவார்.

எஸ்பிஐ லைஃப் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் என்பது காப்பீட்டு நிறுவனத்தின் பெயர் மட்டுமே ஆகும் மற்றும் எஸ்பிஐ லைஃப் - ரிட்டயர் ஸ்மார்ட் என்பது யூனிட் லிங்க்டு லைஃப் இன்ஷ்யூரன்ஸ் ஒப்பந்தத்தின் பெயர்கள் ஆகும் மற்றும் ஒப்பந்தத்தின் தரம், அதன் எதிர்கால வளர்ச்சி அல்லது இலாபங்களை எந்தவகையிலும் குறிப்பதாகாது. தயவு செய்து உங்களுடைய காப்பீட்டு ஆலோசகர் அல்லது இடையீட்டாளர் அல்லது காப்பீட்டாளரின் பாலிசி ஆவணத்திலிருந்து தொடர்புடைய ஆபத்துக்கள் மற்றும் பொருந்தக் கூடிய கட்டணங்கள் பற்றி அறிந்து கொள்ளவும்.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்படும் பற்பல நிதிகள், நிதிகளின் பெயர்கள் ஆகும் மற்றும் எந்த வகையிலும் இந்த திட்டங்களின் தரத்தை, அவற்றின் எதிர்கால வளர்ச்சி மற்றும் இலாபங்களை குறிப்பதாகாது.

ஆபத்துகாரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றிய அதிக விபரங்களுக்கு விற்பனையை முடிக்கும் முன்பாக தயவு செய்து விற்பனை சிற்றேட்டை கவனமாகப் படிக்கவும்.

*வரிச்சலுகைகள் :
நீங்கள் இந்தியாவில் பொருந்தும் வருமான வரிச் சட்டங்களின் படி வருமான வரிச் சலுகைகள்/விலக்கல்களுக்கு தகுதியுடையவர், இது அவ்வப்போது மாற்றத்திற்கு உட்பட்டவையாகும். மேலும் விவரங்களுக்கு, இங்கே கிளிக் செய்யவும். தயவுசெய்து விவரங்களுக்கு உங்கள் வரி ஆலோசகரிடம் கலந்தாலோசிக்கவும்.

இடர் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றிய மேலதிக விவரங்களுக்கு விற்பனையை முடிக்கும் முன்பாக தயவு செய்து விற்பனைச் சிற்றேட்டைக் கவனமாகப் படிக்கவும்.