SBI Life Insurance English | हिन्दी | বংলা | தமிழ் | తెలుగు | मराठी | ગુજરાતી | ಕನ್ನಡ | ਪੰਜਾਬੀ | മലയാളം
இலவச எண்ணில் அழைக்க 1800-22-9090 அல்லது 1800-425-9010  |  'CELEBRATE' என்று 56161 -க்கு எஸ்.எம்.எஸ். அனுப்பவும்
எங்களைக் கண்டறிய  Twitter  Facebook  
 
ஹெல்த் பிளான்கள்
முகப்பு > ஹெல்த் பிளான்கள் > எஸ்.பி.ஐ. லைஃப் - மருத்துவமனை பணம

எஸ்.பி.ஐ. லைஃப் - மருத்துவமனை பணம
(UIN : 111N065V01)

  சிற்றேடு  | தனிப்பயன் சலுகை விளக்கம்  | மின்னஞ்சல்  |  பார்வையிட கேளுங்கள்  |  ஆன்லைன் மூலம் வாங்குதல்
 
அறிமுகம்
சிறப்பு அம்சங்கள்
தகுதி
நன்மைகளின் அளவு
காத்திருப்பு காலம்
ஹாஸ்பிடல் கேஷ் கேட்புரிமைகள படிவங்கள்
  
 
அறிமுகம்
 
நமக்குக் கிடைத்த மிக மதிப்பு வாய்ந்த சொத்து நல்ல உடல்நலம், ஆனால் இப்போதெல்லாம் அதிகரிக்கும் மன அழுத்தத்தின் அளவுகள், மிக குறைவான உடல் உழைப்பு மற்றும் வாழ்க்கை முறை மாறி நம்மை பாதிக்கும் நோய்கள் ஆபத்தான வேகத்தில் அதிகரித்து வருகிறது.
 
உடல்நலத்திற்கான செலவுகள் நாளுக்கு நாள் உயர்ந்துக்கொண்டு வருகிறது மற்றும் உங்கள் சிகிச்சையின் செலவை விட,மறைமுகமான செலவுகளான- மருத்துவமனையின் அறை வாடகை, செவிலிப் பணிச் செலவுகள், மருத்துவமனையிலிருந்து சிகிச்சை முடிந்து வெளியேறிய பிறகு ஏற்படும் செலவுகள் போன்றவை ஒட்டுமொத்த செலவினங்களில் பிரதான செலவினங்களாக உள்ளது. போதுமான சேமிப்பு இல்லாமையால் அல்லது பொருத்தமான உடல்நல கொள்கை இல்லாமையால் மருத்துவ சிகிச்சையின் தரத்தை சமரசம் செய்துக்கொள்ளும்படி நேரிடுகிறது. நீங்கள் இதைவிட சிறந்த வாழ்க்கை முறைக்குத் தகுதியானவர்களே என்று நாங்கள் நம்புகிறோம்.
 
எஸ்பிஐ லைப் - மருத்துவமனை பணம் என்பது ஒரு விரிவான திட்டம் அது மருத்துவமனையின் செலவுகளை மட்டும் உள்ளடக்கவில்லை, பிற இதர செலவுகளையும் உள்ளடக்கும். இந்தத் திட்டம் உங்கள் கவலைகளிலிருந்து முழுமையான விடுதலை அளிக்கும்.
 
எஸ்.பி.ஐ. லைஃப் மருத்துவமனைப் பணத் திட்டம் என்பதன் விளக்கம்:
 

இந்த திட்டம் நீங்கள் உங்கள் சேமிப்பைத் தொடாமல் வைத்திருக்க உதவுகிறது. அதாவது மருத்துவ நெருக்கடி நிலைகள் ஏற்படும்போது உங்களுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான செலவுகளைத் தீர்க்கும் வகையில் நிலையான தொகையை வழங்கும் திட்டமாகும். மேலும் ICU வில் அனுமதிக்கப்படும்போது கூட இதே ரொக்கப்பயன் இரு மடங்காக உயர்த்தப்படுகிறது. மருத்துவனை செலவுகள் எவ்வளவு தொகையாக இருந்தாலும். இந்தத் தொகை மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன், மருத்துவமனையில் இருக்கும்போதும், மருத்துவமனையிலிருந்து வெளியேவந்த போதும் செய்த செலவுகளுக்கு உதவிகரமாக அமையும்.
 
நாங்கள் உங்கள் மீதும் உங்கள் அன்புக்குரியவர்கள் மீதும் அக்கறை செலுத்துகிறோம். உங்கள் குடும்பத்தின் நெருக்கடியின் போது நாங்கள் உங்களுக்கு உதவிட குடும்ப பராமரிப்பு நன்மை வசதி மற்றும் குடும்ப தள்ளுபடி நன்மையை வழங்குகிறோம்.
  
 
சிறப்பு அம்சங்கள்:
 
75 ஆண்டுகள் வரை உத்தரவாதம் அளிக்கப்படும்
3 ஆண்டுகள் தவணை உத்தரவாதம் அளிக்கப்படும்
பாலிசி மீது உரிமை கோரல் இல்லாத போது மேம்பட்ட தொகை உறுதியளிக்கப்படுகிறது மற்றும்
அதிக அளவில் வழங்கீடு இருக்கும்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருக்கும் நோய்களும் அடங்கும்.
வருமான வரிச்சட்டம் பிரிவு 80 D-இன் கீழ் செலுத்திய பிரீமியத்துக்குண்டான வரிச்சலுகை.
 
 
தகுதி:
 
இந்த பாலிசி தனக்காகவும்/துணைக்காகவும்/பெற்றோருக்காகவும்/மாமனார் மாமியாருக்காகவும் மற்றும் சார்ந்து இருக்கும் பிள்ளைகளுக்காகவும் எடுக்கலாம். குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் அதே பாலிசியின் கீழ் 1 வருடம் முதல் 17 வருடங்கள் இடையே பெற்றோர் காப்பீட்டாளராக இருக்கவேண்டும்.
 
முன்மொழிவோருக்கான குறைந்தபட்ச நுழைவு வயதுத் தகுதி கடந்த பிறந்த நாள் கணக்கின் படி 18 வருடங்களாக இருக்கவேண்டும். 18 ஆண்டுகள்
சார்ந்திருக்கும் குழந்தைக்கான குறைந்த பட்ச வயதுத் தகுதி 1 ஆண்டு. 18 ஆண்டுகள் வயது வந்தோர்க்கு 1 வருடம்
வயது வந்தோர்க்கு 18 ஆண்டுகள்
நுழையும் போது குழந்தையின் அதிகபட்ச வயது சார்ந்திருக்கும் குழந்தைக்கு 24 ஆண்டுகள்
வயது வந்தோர்க்கு புதிய பாலிசிக்கு 65 வருடங்கள்
புதுப்பிக்கப்பட்ட பாலிசிக்கு 72 வருடங்கள்
பாலிசி முதிர்ச்சியில் சார்ந்திருக்கும் வாரிசுக்கான அதிகபட்ச வயது 27 ஆண்டுகள்
வயது வந்தோர்க்கு 75 ஆண்டுகள்
நிலையான பாலிசி காலம் 3 ஆண்டுகள்
பிரீமிய முறைகள் - ஆண்டுக்கு/ அரையாண்டுக்கு / காலாண்டுக்கு

கவனிக்க: எல்லோருடைய வயதும் அவர்களின் கடைசி பிறந்த நாளிலிருந்து கணிப்பிடப்படும்

மருத்துவமனை என்பதன் வரையறை:

“இந்தியாவில் மருத்துவமனை என்பது மனையக சிகிச்சைக்காக நிறுவப்பட்டது, இங்கு நோய் மற்றும் காயங்களுக்கு அலோபதி சிகிச்சை வழங்கப்படுகிறது, இது மருத்துவமனையாக அல்லது நர்சிங் ஹோம் என்று முறையான அதிகாரிகளிடம் பதிவு செய்யப்பட்டது, பதிவு செய்யப்பட்ட மற்றும் தகுதி பெற்ற மருத்துவர்களின் மேற்பார்வையின் கீழ் உள்ள இது கீழ் வரும் வசதிகளை வழங்குகிறது:
- உள்நோயாளிக்கு குறைந்தது10 படுக்கைகள்
சகல வசதிகளுமுடைய சொந்த அறுவைசிகிச்சைக் கூடம் இங்கு அறுவைசிகிச்சைகள் நடைபெறும்
மேலும் நாள் முழுதும் 24 மணிநேரமும் பணியில் இருக்கும் தகுதி பெற்ற நர்ஸ்கள்,
நாள் முழுதும் 24 மணிநேரமும் பணியில் இருக்கும் தகுதிபெற்ற மருத்துவர்கள், மற்றும்
ஒவ்வொரு நோயாளி பற்றியும் மருத்துவப் பதிவேடு.
இந்த பாலிசியின் நோக்கப்படி, மருத்துவமனை என்பதில் சிலவற்றை சேர்க்கமுடியாது: ஓய்வகம், உடல்நலமீட்பகம், காவலில் இருப்போருக்கான சிகிச்சை மையம், முதியோர் இல்லம், போதைப்பழக்கமுள்ளவர்களை மீட்கும் சிகிச்சை மையம், மனநலக் காப்பகம் அல்லது மருத்துவமனை ஆகியவை மருத்துவமனைகளாக பதிவு செய்யப்பட்டிருந்தாலும் இந்தப் பாலிசியின் படி ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
       

 
நன்மைகளின் அளவு:  

நன்மைகள்  
ஒரு ஆண்டின் உறுதியான தொகை (Rs) 2 லட்சம் 3 லட்சம் 4 லட்சம் 5 லட்சம்
அன்றாட மருத்துவமனை சேர்க்கைப் பணத்தின் நன்மை(ருபாய்/ நாள்) ரூ 2000 ரூ 3000 ரூ 4000 ரூ 5000
தினப்படி ஐ.சி.யு. நன்மைகள் (ரூ/நாள்) ரூ 4000 ரூ 6000 ரூ 8000 ரூ 10,000
குடும்ப நல நன்மை(Rs) ரூ.10,000 பாலிசி ஆண்டிற்கு ஒட்டுமொத்த தொகை

காத்திருப்பு காலம்:
பாலிசி காலத்தில் திடீர் விபத்து(கள்) நீங்கலாக, காப்புக்காலம் துவங்கி 30 நாட்களுக்குள் ஏற்படும் திடீர் உடல்நலக்கோளாறு அல்லது குடும்ப பாலிசியில் புதிய உறுப்பினரைச் சேர்ப்பது ஆகியவை இந்தத் திட்டத்தில் சேர்க்கப்படமுடியாது.

வரி சட்டங்கள் படி மாற்றங்கள். தயவுசெய்து தகவல்களுக்கு உங்களுடைய வரி ஆய்வாளரை ஆலோசிக்கவும்.

இடர்காப்பு காரணிகள் பற்றி மேலும் விவரங்களுக்கு, விதிகள் மற்றும் நிபந்தனைகளைக் காணவும். விற்பனையை முடிப்பதற்கு முன்பாக, விற்பனை சிற்றேட்டை கவனமாகப் படிக்கவும்.
 

ஹாஸ்பிடல் கேஷ் கேட்புரிமைகள் படிவங்கள்:
ஹாஸ்பிடல் கேஷ் கேட்புரிமைகள் செயலாக்கம் பதிவிறக்குக ( 67 Kb)
ஹாஸ்பிடல் கேஷ் பாலிசி சிற்றேடு பதிவிறக்குக ( 549 Kb)
ஹாஸ்பிடல் கேஷ் சிகிச்சை மருத்துவர்களின் சான்றிதழ் பதிவிறக்குக ( 89 Kb)
ஹாஸ்பிடல் கேஷ் நேரடி அங்கீகாரம் பதிவிறக்குக ( 52 Kb)
ஹாஸ்பிடல் கேஷ் கேட்புரிமை படிவம் பதிவிறக்குக ( 141 Kb)
 
ஆன்லைனில் பாலிசி வாங்க
  உள்நுழைவுப் பகுதி
  Go
   NAVs
  சமீபத்திய பங்கு மதிப்புகள் மற்றும் செய்திமடல்களைக் காண, இங்கே கிளிக் செய்க >>
  டூல்ஸ் & பிளானர்ஸ்
  பிரீமியம் கால்குலேட்டர்
  இன்சூரன்ஸ் கால்குலேட்டர்
  வரி கால்குலேட்டர்
  குழந்தை கல்வி பிளானர்
  HLV கால்குலேட்டர்
  ரிட்டயர்மென்ட் கால்குலேட்டர்
  ஈஸி பிளான் ஃபைண்டர்
IRDA | IRDA வழங்கும் வாடிக்கையாளர் விழிப்புணர்வு வெப்சைட் | ஆயுள் காப்பீடு மன்றம் | தயாரிப்புக் குறியீடுகள் | SFIN குறியீடுகள் | தனியுரிமைக் கொள்கை | கைதுறப்பு | அழைக்க வேண்டாம் | வாடிக்கையாளர் கருத்து (ஃபீட்பாக்)
காப்பீடு, தனிநபர் பரிந்துரைக்கு உட்பட்டது. IRDA பதிவு எண். 111, 29 மார்ச் 2001 அன்று வெளியிடப்பட்டது.பதிவுசெய்யப்பட்ட, நிறுவன அலுவலகம்: எஸ்.பி.ஐ. லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட், நடராஜ், எம்.வி. சாலை & வெஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை சந்திப்பு,
அந்தேரி (கிழக்கு), மும்பை - 400 069.
இந்த வலைத்தளம் வாடிக்கையாளரின் வசதிக்காக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. எந்த வார்த்தை/அறிக்கையிலும் கவனக்குறை காரணமாக வேறுபாடு பொருந்தாமை இருப்பின் எக்காலத்தும் ஆங்கில கூற்று வழக்கத்தில் இருக்கும்.
©2010 எஸ்.பி.ஐ. லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.