மும்பை, செப்டம்பர் 28, 2011 - இந்தியாவில் தனித்த இடத்தை தக்கவைத்துக்கொண்டிருக்கும் முன்னணியில் உள்ள தனியார் ஆயுள் காப்பீடு வழங்குநரான எஸ்.பி.ஐ. லைஃப் இன்சூரன்ஸ், உலகளவில் மதிப்புமிக்க மில்லியன் டாலர் ரவுண்ட் டேபிள் (MDRT) 2011-இல் முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, 2011-இல் 2,661 MDRT உறுப்பினர்களைப் பெறுவதன் மூலம் சர்வதேச பெருமைக்குரிய லீக்-இன் சிகரத்தை தொட்டுள்ளது. இவைகளுக்கு இடையில், உறுப்பினர் நிலையில் 200, கோர்ட் ஆஃப் டேபிளையும் (COT) , 30, டாப் ஆஃப் டேபிளையும் அடைந்துள்ளது. கடந்த ஐந்து வருடங்களாக, உலகளவில், மிகச்சிறந்த ஐந்து காப்பீடு வழங்குநர்களில், எஸ்.பி.ஐ. லைஃப் ஒரே மாதிரியான அம்சங்களைக் கொண்டுள்ளது. நிறுவனமானது உலகளவில் 2007-இல் 5, 2008-இல் 3, 2009, 2010 மற்றும் 2011-இல் முதல் இடத்தையும் பெற்றுள்ளது.
நன்மதிப்பு, சிறந்த விற்பனை நிலை மற்றும் உயர் நன்னெறி நிலைகள் ஆகியவை MDRT பிராண்டுடன் தொடர்புடைய சில முக்கிய மதிப்புகளாக இருக்கின்றன. உலக ஆயுள் காப்பீடு மற்றும் நிதிசார்ந்த சேவைகள் ஆலோசகர்களின் 1 சதவீதத்திற்கும் குறைவின் மூலம் அடைந்த பிரத்யேக கௌரவமாக MDRT உறுப்பினர் உள்ளது. MDRT உறுப்பினர் ஆவதற்கான சிறப்புரிமையை அடைய ஆயுள் காப்பீட்டு நிபுணர்கள் விரும்புகின்றனர்.
| |
| தரம் |
நிறுவன பெயர் |
நாடு |
2010 உறுப்பினர்கள் |
| 1 |
எஸ்.பி.ஐ. லைஃப் இன்சூரன்ஸ் |
இந்தியா |
2,661 |
| 2 |
நியூயார்க் லைஃப் |
யூஎஸ்ஏ |
2,067 |
| 3 |
சாம்சங்க் லைஃப் இன்சூரன்ஸ் |
ரெப் ஆஃப் கொரியா |
2,052 |
| 4 |
எல்ஐசி ஆஃப் இந்தியா |
இந்தியா |
1,993 |
| 5 |
நார்த்வெஸ்டர்ன் மியூச்சுவல் |
யூஎஸ்ஏ |
1,260 |
| 13 |
ஹெச்டிஎஃப்சி ஸ்டாண்டர்டு லைஃப் |
இந்தியா |
489 |
| 21 |
ஐசிஐசிஐ புரூடென்சியல் லைஃப் |
இந்தியா |
341 |
| 31 |
டாடா ஏஐஜி லைஃப் |
இந்தியா |
207 |
| 33 |
மேக்ஸ் நியூயார்க் லைஃப் |
இந்தியா |
203 |
|
திரு. எம்.என்.ராவ், நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர், எஸ்.பி.ஐ. லைஃப், அவர்கள் கூறியது, "உலகளவில், வங்கியின் முகவர் மற்றும் காப்பீட்டு ஒருங்கமைப்பாளர் இருவரும், தனிப்பட்ட நிதிசார்ந்த ஆலோசனையின் நம்பகமான மூலமாக இருக்கின்றனர். விநியோகிப்பாளரைத் தொடர்ந்து வல்லுநர் அணுகல் குறித்து உலகில் எங்களது சிறப்புத்திறமை சான்றளிக்கிறது. எங்களது வாடிக்கையாளர்களுக்கு ஆயுள் காப்பீட்டு தீர்வுகளை ஆலோசனை அடிப்படையில் வழங்குவதை செயல்படுத்த, பொருத்தமான ஆதரவுடன் அவற்றை அடைவதில் கவனம் செலுத்தவோம்."
திரு. ராஜிவ் குப்தா, செயல் இயக்குநர், மார்கெட்டிங், எஸ்.பி.ஐ. லைஃப், அவர்கள் கூறியது, "இந்தச் சாதனையானது உலகத்தரத்திற்கு நிகரான தரமான ஆலோசகர்களை உருவாக்குவற்கு எங்களது பங்களிப்பைத் துண்டுகிறது. தேவைகளின் அடிப்படையில் தீர்வுகளை வழங்குதல், தொழில் ஆலோசனை மற்றும் பொருந்தாத சேவை ஆகியவை எங்களது ஆலோசகர்களுகான மைய விநியோகப் குறிப்புகளாக இருக்கும்".
நாட்டில் மிகவும் நம்பகமான பிராண்டுகளில் ஒன்றை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு, முதன்மையான பயிற்சித் திட்டம் மற்றும் கவர்ச்சிகரமான வெகுமதி மற்றும் அங்கீகரிப்புத் திட்டங்கள் போன்ற சில நன்மைகள் எஸ்.பி.ஐ. லைஃப் இன்சூரன்ஸ் ஆலோகர்களால் பயன்படுத்தப்பட்டது.
திரு. ஆனந்த் பெஜாவர், செயல் இயக்குநர், மார்கெட்டிங், எஸ்.பி.ஐ. லைஃப், அவர்கள் கூறியது, "அதிக ஆக்கப்பூர்வமான சில்லறை முகமை சேனலுக்குக் கூடுதலாக, எங்களது ஒருங்கிணைந்த வங்கிமூலமான அணுகுமுறையானது, வங்கி வாடிக்கையாளர்களுக்கும், எங்களது திட்டங்களின் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் மதிப்புகளை உருவாக்குவதைத் தொடர்கிறது. காப்பீட்டுத் திட்டங்களின் விற்பனையில் ஈடுபட்டுள்ள வங்கிப் பணியாளர், ஒருமுகப்படுத்தப்பட்ட வங்கி மற்றும் காப்பீட்டுத் தீர்வுகளை வாடிக்கையாளர்களுக்கு விநியோகிப்பதை சீக்கிரமாக வெளிப்படுத்துவதன் மூலம், அனைத்து நிதிசார்ந்த தேவைகளுக்கும் உண்மையிலேயே ஒரு சூப்பர் மார்க்கெட்டைப்போன்று வங்கி செயல்படுகிறது."
ஜூன் 2011, முதல் நிதி காலாண்டு முடிவின்போது, எஸ்.பி.ஐ. லைஃப் ரூ. 144 கோடி லாபத்தை ஈட்டியுள்ளது, கடந்த ஆண்டைவிட 27 சதவீத கூடுதல் கவர்ச்சிகரமான லாப வளர்ச்சியையும் பதிவுசெய்துள்ளது. அதே காலகட்டத்தில் நிறுவனத்தின் மொத்த பிரீமியம் 13 சதவீதமாக உயர்ந்து ரூ. 1935 கோடியாக உயர்ந்துள்ளது. இந்தக் காலகட்டத்தின்போது சேகரிக்கப்பட்ட புதிய வணிகப் பிரீமியம் ரூ. 892 கோடி. மேலும், 2011 ஜூன் 30 வரை நிர்வாகச் சொத்து 33 சதவீதம் உயர்ந்து, கடந்த ஆண்டைவிட ரூ. 40,070 கோடியாக உள்ளது. 10.14 சதவீத துறையில் உள்ள GWP (கிராஸ் ரிட்டன் பிரீமியம்) அளவில் குறைந்த செலவினங்களைப் பெறுவதை நிறுவனம் தொடர்கிறது.
தனித்துவமாக, வெளிப்புற நிபந்தனைகளை ஒதுக்கி, எஸ்.பி.ஐ. லைஃப் அதனுடைய இருப்பை விரிவாக்குகிறது. நடப்பு நிதி ஆண்டின்போது, நிறுவனம் 81 கிளைகளைத் தொடங்கி, 1657 பேரை பணியில் அமர்த்தியுள்ளது.
ஜூலை 2011, சமீபத்திய IRDA அறிக்கையின் படி தனியார் நிறுவனங்களில், எஸ்.பி.ஐ. லைஃப், முதல் தரத்தில் உள்ளது. தனியார் ஆயுள் காப்பீடு வழங்குநர்களில் இந்நிறுவனத்திற்கு 21.6 சதவீத சந்தைப் பங்கு உள்ளது. மேலும் மொத்த சந்தைப் பங்கு 6 சதவீதம் ஆகும்.
MDRT பற்றி:
MDRT என்பது உலகின் சிறந்த ஆயுள் காப்பீட்டு விற்பனை (ஆலோசகர்கள்) நிபுணர்களைக் கொண்ட ஒரு கூட்டமைப்பு ஆகும். 1927-இல் நிறுவப்பட்ட இது, சுமார் 36,000 உலகின் முன்னணி ஆயுள் காப்பீடு மற்றும் 76 நாடுகள் மற்றும் பிரதேசங்களிலிருந்து நிதி சேவை நிபுணர்களைக் கொண்ட பன்னாட்டு சுதந்திர கூட்டமைப்பு ஆகும். மேலும், இது 450-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு பிரதிநிதித்துவம் வகிக்கிறது. ஆயுள் காப்பீடு மற்றும் நிதி சேவை வணிகத்தில் விற்பனை சிறப்பின் மிகஉயர்ந்த நிலையை அடையவும், கிளையன்ட் சேவையில் மிகச்சிறப்பாகப் செயலாற்ற, துறையில் சிறப்பாக ஆராயக்கூடிய திறமைவாய்ந்த நிபுணர்களாக MDRT உறுப்பினர்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.